செய்திகள் :

"2 அரசுகளும் அலைக்கழித்தால் எங்கே போவது?" - நயினார் நாகேந்திரனிடம் குமுறிய அங்கன்வாடி ஊழியர்கள்

post image

காலமுறை ஊதியம், பதவி உயர்வு, காலிப்பணியிடங்களை நிரப்புதல், ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு அங்கன்வாடி ஊழியர்கள் கோவை செஞ்சிலுவை சங்கம் அருகே 10வது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

கோவை
கோவை

அவர்களுக்கு அதிமுக, தவெக, பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் நேரடியாக சென்று ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இன்று கோவை வந்தார்.

 காலை சத்துணவு அங்கன்வாடி பணியாளர்களின் போராட்ட களத்திற்கு சென்று அவர்களுக்கு ஆதரவு தெரிவித்தார். அப்போது அவர்களின் கோரிக்கைகளை நயினார் கேட்டறிந்தார். போராட்டத்தில் ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியர்கள், “மத்திய மற்றும் மாநில அரசு இரண்டும் சேர்ந்துதான் நிதி ஒதுக்குகிறார்கள்.

நயினார் நாகேந்திரன்

மாநில அரசு தான் எங்கள் கோரிக்கையை நிறைவேற்ற மறுக்கிறார்கள். மத்திய அரசாவது எங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நிதி ஒதுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்தனர். 

 மேலும், "மாநில அரசிடம் கேட்டால், மத்திய அரசைக் கேளுங்கள் என்கிறார்கள். மத்திய அரசிடம் கேட்டால், மாநில அரசைக் கேளுங்கள் என்கிறார்கள். எங்களை இப்படி இரண்டு அரசுகளும் அலைக்கழித்தால் நாங்கள் எங்கு செல்வது" என்று அங்கன்வாடி ஊழியர்கள் அவரிடம் வேதனை தெரிவித்துள்ளனர்.

நயினார் நாகேந்திரன்

அதிர்ச்சியடைந்த நயினார் நாகேந்திரன், “உங்களுக்கு தேர்தல் வாக்குறுதி அளித்தது திமுக அரசு தான்.  நீங்கள் அவர்களிடம் தான் முறையிட வேண்டும். நாங்கள் சொன்னதை செய்வோம். இது குறித்து வருகிற சட்டமன்ற கூட்டத்தொடரில் பேசுகிறோம்” என்றார். 

சேலம்: `10 வருஷமாகியும் குழந்தைக்கு பிறப்பு சான்று கிடைக்கல'- அலட்சிய அதிகாரிகள்; அல்லாடும் பெற்றோர்

சேலம் மாவட்டம், காடையாம்பட்டி வட்டம், தாத்தியம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சதீஷ் - வினோதா தம்பதியினருக்கு பெண் குழந்தை பிறந்து, கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாகியும் பிறப்புச் சான்றிதழ் பெறமுடியாமல் போராடி வருக... மேலும் பார்க்க

`டெல்லி ஆட்சியாக இருந்தால் இருந்துட்டுப் போகட்டுமே' - சொல்கிறார் திண்டுக்கல் சீனிவாசன்

திண்டுக்கல்லில் எம்.வி.முத்தையா அரசு மகளிர் கலைக் கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் நடத்தும் 4வது நாள் உள்ளிருப்பு போராட்டத்திற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நேரில் சந்தித்து ஆதரவு தெர... மேலும் பார்க்க

'காங்கிரஸின் தவறு தான் அது'; சுட்டிக்காட்டிய மாணிக்கம் தாகூர் - 2006 தேர்தலில் நடந்தது என்ன?

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் திமுக - காங்கிரஸ் கூட்டணிக்குள் தொடர்ந்து புகைச்சலாக இருக்கிறது.தொகுதிப் பங்கீடு பேசக் குழு அமைக்காததால் வருத்தம் என டெல்லியிலிருந்து காங்கிரஸ் ஒரு பந்தை வ... மேலும் பார்க்க

ஐஜேகே 4-வது மாநில மாநாடு! - வேப்பூரில் திரண்ட தொண்டர்கள்!

இந்திய ஜனநாயக கட்சியின் (IJK) நான்காவது மாநில மாநாடு, கடலூர் மாவட்டம் வேப்பூரில் பிப்ரவரி 8 அன்று கட்சியின் நிறுவனர் Dr. T.R. பாரிவேந்தர் தலைமையில் மிக பிரமாண்டமாக நடைபெற்றது. செங்கோட்டை மற்றும் தலைமை... மேலும் பார்க்க

நாளை நடக்கவிருந்த செவிலியர் பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி ரத்தா? - கடைசி நேரத்தில் நடந்தது என்ன?

கோவிட் காலத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்த செவிலியர்களுக்கு சென்னையில் நாளை பணி நியமன ஆணை வழங்க இருந்த நிகழ்ச்சி, ரத்து செய்யப்பட்டிருப்பதாகத் தெரியவருகிறது`தமிழகத்தில் கடந்த டிசம்பர் மாதம் செவி... மேலும் பார்க்க

`ராகுல் காந்தியின் எம்.பி பதவியைப் பறிக்க வேண்டும்!' - நிஷிகாந்த் துபே தீர்மானம் தாக்கல்

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நாட்டை தவறாக வழிநடத்துவதாகக் குற்றம்சாட்டி, பா.ஜ.க எம்.பி நிஷிகாந்த் துபே மக்களவையில் வியாழக்கிழமை 'தனி நபர் தீர்மானம்' (Substantive Motion) ஒன்றை தாக்கல் ச... மேலும் பார்க்க