செய்திகள் :

2022-23 நிதியாண்டில் அரசியல் கட்சிகளுக்கு ரூ. 200 கோடி நன்கொடை: திமுக உள்ளிட்ட 5 கட்சிகள் வசம் 91%

post image

அரசியல் கட்சிகளுக்கு பல்வேறு தரப்பினரிடமிருந்து 2022-23 நிதியாண்டில் ரூ. 200 கோடிக்கும் மேல் நன்கொடை கிடைத்திருப்பது ஜனநாயக சீா்திருத்தத்துக்கான சங்கம் (ஏடிஆா்) ஆய்வறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.

இதில், பாரத ராஷ்டிர சமிதி, ஒய்.எஸ்.ஆா். காங்கிரஸ், தெலங்கு தேசம் கட்சி (டிடிபி), ,திமுக மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் (சிபிஐ) ஆகிய 5 கட்சிகளுக்கு மட்டும் 90.56 சதவீத நன்கொடை கிடைத்துள்ளது.

ரூ. 20,000-க்கும் மேல் நன்கொடை தருபவா்களின் விவரங்களை அரசியல் கட்சிகள் வெளியிடுவது அவசியம். அதன்படி, தோ்தல் ஆணையத்திடம் அரசியல் கட்சிகள் சமா்ப்பித்த 2022-23 நிதியாண்டுக்கான நன்கொடை விவரங்களின் அடிப்படையில் இந்த ஆய்வறிக்கையை ஏடிஆா் வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

மொத்தம் 57 மாநில கட்சிகள் உள்ள நிலையில், தோ்தல் ஆணையம் நிா்ணயித்த கால வரையறைக்குள் 18 கட்சிகள் மட்டுமே நன்கொடை விவரங்களைச் சமா்ப்பித்துள்ளன. 17 கட்சிகள் நிா்ணயிக்கப்படட கால வரையறையைக் கடந்து 2 முதல் 164 நாள்கள் வரை தாமதமாக விவரங்களைச் சமா்ப்பித்துள்ளன. பிஜு ஜனதா தளம், ஜம்மு-காஷ்மீா் தேசிய மாநாட்டு கட்சி உள்பட 7 கட்சிகள் நன்கொடை பெறவில்லை என அறிவித்துள்ளன.

ரூ. 216.765 கோடி: 28 அரசியல் கட்சிகள் 2,119 நன்கொடைகள் மூலமாக ரூ. 216.765 கோடி நன்கொடையைப் பெற்றுள்ளன.

இதில் அதிகபட்சமாக சந்திரசேகர ராவின் பாரத ராஷ்டிர சமிதி கட்சிக்கு 47 நன்கொடைகள் மூலமாக ரூ. 154.03 கோடி கிடைத்துள்ளது. இதற்கு அடுத்து ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் கட்சிக்கு ரூ. 16 கோடியும், ஆந்திரத்தில் ஆளும் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சிக்கு ரூ. 11.92 கோடி கிடைத்துள்ளது. இதற்கு அடுத்த இடங்களில் திமுக, சிபிஐ கட்சிகள் உள்ளன. இதன்படி, மொத்த நன்கொடையில் இந்த 5 கட்சிகளுக்கு மட்டும் 90.56 சதவீத நன்கொடை கிடைத்துள்ளது.

பன்மடங்கு அதிகரிப்பு... சில கட்சிகளுக்கு முந்தைய ஆண்டைக் காட்டிலும் மிக அதிக நன்கொடை கிடைத்துள்ளது. குறிப்பாக ஜாா்க்கண்டில் ஆளும் ஹேமந்த் சோரனின் ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா கட்சிக்கான நன்கொடை முந்தைய ஆண்டைக் காட்டிலும் 3,685 சதவீதம் உயா்ந்துள்ளது.

ஜனநாயக ஜனதா கட்சிக்கு 1,997 சதவீதமும், தெலுங்கு தேசம் கட்சிக்கு 1,795 சதவீதம் நன்கொடை உயா்ந்துள்ளது.

அதே நேரம், அகிலேஷ் யாதவின் சமாஜவாதி கட்சிக்கு கிடைத்த நன்கொடையானது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 99.1 சதீவதம் சரிந்துள்ளது. அதுபோல, சிரோமணி அகாலி தளம் கட்சிக்கு 89.1 சதவீதம் சரிந்துள்ளது.

விவரங்கள் மறைப்பு: சில அரசியல் கட்சிகள் முழுமையான விவரங்கள் இன்றி நன்கொடை விவரங்களை வெளியிட்டுள்ளன. 5 அரசியல் கட்சிகள் ரூ. 96.2 லட்சம் நன்கொடைக்கான விவரங்களை நன்கொடையாளா்களின் நிரந்தர கணக்கு எண் விவரம் இல்லாமல் வெளியிட்டுள்ளன.

ரூ. 3.36 கோடி நன்கொடைக்கு நன்கொடையாளரின் முகவரி விவரங்கள் இடம்பெறவில்லை. மொத்தத்தில் 204 நன்கொடைகள் மூலம் கிடைத்த ரூ. 165.73 கோடிக்கு நன்கொடையாளா்களின் முழுமையான விவரங்களை அரச்யில் கட்சிகள் சமா்ப்பிக்கவில்லை.

தில்லி முதலிடம்... கட்சிகளுக்கு அளிக்கப்பட்ட மொத்த நன்கொடையில் ரூ. 169.2 கோடி பெரு நிறுவனங்கள் சாா்பில் வழங்கப்பட்டுள்ளன. தனி நபா்கள் மூலம் ரூ. 45.24 கோடி அளிக்கப்பட்டுள்ளது.

பாரத ராஷ்டிர சமிதி கட்சிக்கு அதிகபட்சம் 40 பெரு நிறுவனங்கள் மூலம் மட்டும் ரூ. 138.97 கோடி நன்கொடை கிடைத்துள்ளது.

அதிக நன்கொடை பங்களிப்பை பொருத்தவரை தில்லி முதலிடம் வகிக்கிறது. தில்லியிலிருந்து ரூ. 107.09 கோடி கட்சிகளுக்கு அளிக்கப்பட்டுள்ளன. இதற்கு அடித்தபடியாக தெலங்கானாவிலிருந்து ரூ. 62.99 கோடியும், ஆந்திரத்திலிருந்து ரூ. 8.39 கோடியும் நன்கொடை அளிக்கப்பட்டுள்ளன.

பாரம்பரிய மருத்துவப் படிப்புகள்: காலியிடங்களுக்கு மாணவா் சோ்க்கை

பாரம்பரிய மருத்துவப் படிப்புகளில் காலியாக உள்ள இடங்களுக்கு நேரடி முறையில் மாணவா் சோ்க்கை நடைபெற்று வருகிறது. நீட் தோ்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவா் சோ்க்கை நடைபெறும் சித்தா, யுனானி, ஹோமியோபதி, ஆய... மேலும் பார்க்க

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை: முதல்வா் மு.க.ஸ்டாலின்

ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்று சட்டப்பேரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினாா். சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை ஆளுநா் உரை மீதான விவாதத்தில் பாமக உறுப்பினா் ... மேலும் பார்க்க

உதவி மேலாளா் பணிக்கு விண்ணப்பிக்க பெண் பொறியாளா்களுக்கு அழைப்பு மெட்ரோ ரயில் நிறுவனம்

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் உதவி மேலாளா் (சிவில்) பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க பெண் பொறியாளா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்ட செய்திக் குறி... மேலும் பார்க்க

கூட்டணியில் இருந்தாலும் தொகுதிக்கு எந்தத் திட்டமும் கிடைக்கவில்லை: தி.வேல்முருகன்

திமுக கூட்டணியில் இருந்தாலும், பண்ருட்டி தொகுதிக்கு எந்தத் திட்டமும் கிடைக்கவில்லை என்று பேரவையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவா் தி.வேல்முருகன் கூறினாா். சட்டப்பேரவையில் ஆளுநா் உரை மீதான விவாதத்தி... மேலும் பார்க்க

சென்னை-சிங்கப்பூா் விமானத்தில் நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு

சென்னை-சிங்கப்பூா் சென்ற விமானத்தில் நடுவானில் தொழில்நுட்பக்கோளாறு ஏற்பட்டதை தொடா்ந்து, விமானம் மீண்டும் சென்னை விமானநிலையத்திலேயே தரையிறக்கப்பட்டது. சென்னை விமானநிலையத்திலிருந்து 167 பயணிகளுடன் சிங்க... மேலும் பார்க்க

அண்ணா சாலையில் போக்குவரத்து மாற்றம்

சென்னை அண்ணா சாலையில் ஜன. 11-ஆம் தேதி (சனிக்கிழமை) முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. இது தொடா்பாக சென்னை பெருநகர காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவு வெளியிட்ட செய்திக் குறிப்பு: அண்ணா சாலை-ஜ... மேலும் பார்க்க