அரசியலில் தனித்துவிடப்பட்டதா த.வெ.க... என்ன பிளான் வைத்திருக்கிறார் விஜய்?
``30 வயதில் கைவிட்ட காதலன் என்ன செய்வேன்?'' - புலம்பிய பெண்; ஆலோசனை சொன்ன நெட்டிசன்கள்
சமூக வலைத்தள பயன்பாடு அதிகரித்த பிறகு காதலர்களிடையே பிரேக்கப் ஆவது அதிகரித்து வருகிறது. இரவு முழுவதும் போனில் பேசிக் கொண்டிருந்துவிட்டு, பேசி முடிக்கும் போது எதாவது வாய்த்தகராறு ஏற்பட்டாலே பிரேக்கப் செய்து கொள்வார்கள். இவ்வாறு நடக்கும் செயல்கள் இப்போது அதிகரித்து வருகின்றன.
ஆனால் அப்படி பிரேக்கப் ஆன பெண்ணிற்கு, தனது எதிர்பார்ப்பிற்கு ஏற்ற ஆண் துணை கிடைப்பது சிரமமாக இருக்கிறது என்று 30 வயது பெண் ஒருவர் சமூக வலைத்தளப் பக்கத்தில் புலம்பியுள்ளார்.

இது தொடர்பாக அந்தப் பெண் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் எழுதியுள்ள பதிவில்,
“3 ஆண்டுகளாக இருந்த காதலன் என்னை கைவிட்டுவிட்டான். நாங்கள் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு இருந்தோம். ஆனால் அவன் திருமணம் செய்ய மறுத்துவிட்டான்.
இதையடுத்து திருமணத்திற்காக மேட்ரிமோனியல் தளத்தில் வரன் தேடினேன். ஆனால் அது மிகவும் சவாலான ஒன்றாக இருந்தது. பல வாலிபர்கள் மிகவும் குறைவாக சம்பாதிக்கிறார்கள். அதோடு, அவர்களில் யாரும் என்னை கவரும் வகையில் இல்லை.
நான் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் எனது முன்னாள் காதலனுடன் நெருக்கமாக இருந்ததாக நினைக்கிறேன். வேறு எந்த ஆணுடனும் நான் ஒருபோதும் நேர்மையாக இருக்க முடியாது என்று தோன்றுகிறது.
நாங்கள் உடல் ரீதியாக நெருக்கமாக இருந்தோம்; இப்போது வேறொரு ஆணைத் தொடவோ அல்லது நெருங்கவோ நான் பயப்படுகிறேன். வேறு யாருடனும் என்னால் இணக்கமாக இருக்க முடியாது என்று நினைப்பதால், என் முன்னாள் காதலனுடன் மீண்டும் சேர முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்.
இப்போது நான் என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லை. எனக்கு இப்போது 29 வயது. 30 வயதிற்குப் பிறகு ஒரு நல்ல துணையைப் பெறுவது இன்னும் கடினமாக இருக்கும்," என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பதிவுக்கு பதிலளித்த ஒரு நெட்டிசன், “வயது ஒரு பிரச்னை அல்ல. திருமணம் என்பது ஒரு குறிப்பிட்ட வயதிற்குள் அடைய வேண்டிய குறிக்கோள் அல்ல. வாழுங்கள், முதலில் உங்களை நீங்களே கண்டுபிடியுங்கள்” என்று எழுதியுள்ளார்.

இன்னொருவர் எழுதிய பதிவில், “உங்களுக்குக் கிடைத்த ஒரே வாழ்க்கையை தவறவிட்டுவிட்டதாக நினைக்க வேண்டாம். யாரையும் திருமணம் செய்து கொள்ள அவசரப்படாதீர்கள்; மெதுவாகச் செயல்படுங்கள். முதலில் உங்கள் உடல், உடல்நலம், மனம் மற்றும் தொழில் ஆகியவற்றைக் கவனித்துக் கொள்ளுங்கள். உங்களுக்கான நபர் நிச்சயம் வருவார்” என்று தெரிவித்துள்ளார்.
“30 வயதில் வாழ்க்கை முடிவதில்லை. வயதை மட்டும் நினைத்து வருத்தப்பட வேண்டாம். 30 வயதில் எதுவும் மாறிவிடாது” என்று ஒருவரும் கூறியுள்ளார்.
மற்றொரு பெண் பதிவிட்டதில், தன்னுக்கு 33 வயதாகிவிட்டதாகவும், இந்த ஆண்டு தொடக்கத்தில்தான் தனது காதலனை சந்தித்ததாகவும், சமுதாயத்தைப் பற்றி கவலைப்பட வேண்டாம் என்றும், முதலில் பிரேக்கப் சோகத்தில் இருந்து முழுமையாக குணமடைந்து வெளியே வர வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அவர்களின் பதிவுக்கு பதிலளித்த 30 வயது பெண், தனது முன்னாள் காதலருடன் மீண்டும் சேர விரும்புவதாக பகிர்ந்துள்ளார். அவருடனான உறவில் முழுமையாக மகிழ்ச்சியாக இல்லாவிட்டாலும், அவர் மீது இன்னும் வலுவான உணர்வுகள் இருப்பதாகவும், அவரது நலனில் அக்கறை கொண்டுள்ளதாகவும் அவர் ஒப்புக்கொண்டார். தன்னுக்கு நல்லது செய்த ஒருவர் இனி தன்னுடன் இருக்க விரும்பவில்லை என்பதை இப்போது ஏற்றுக்கொள்வது கடினமாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.
















