செய்திகள் :

'300 பில்லியன் டாலர்கள்' அமெரிக்காவில் ரிலையன்ஸ் முதலீடு; 'வரலாற்றில் மிகப்பெரியது' ட்ரம்ப் ஹேப்பி

post image

அமெரிக்கா டெக்சாஸில் வர உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு திட்டத்தில் இந்திய நிறுவனமான ரிலையன்ஸ் முதலீடு செய்ய உள்ளது. இதற்காக தனது இந்திய கூட்டாளிகளுக்கும், ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு 'நன்றி' தெரிவித்துள்ளார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.

இந்தத் திட்டம் குறித்தும், ரிலையன்ஸ் நிறுவனத்தின் முதலீடு குறித்தும் ட்ரம்ப் தனது ட்ரூத் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது...

"அமெரிக்கா உண்மையான ஆற்றல் ஆதிக்கத்திற்குத் திரும்புகிறது! கடந்த 50 ஆண்டுகளில், டெக்சாஸ் பிரவுன்ஸ்வில்லேயில் முதல்முறையாக முதல் அமெரிக்கா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் திறக்கப்பட உள்ளது.

இது வரலாற்றுச் சிறப்புமிக்க 300 பில்லியன் டாலர் ஒப்பந்தம் - அமெரிக்க வரலாற்றிலேயே மிகப்பெரிய ஒப்பந்தம். இது அமெரிக்கத் தொழிலாளர்களுக்கும், ஆற்றலுக்கும், தெற்கு டெக்சாஸ் மக்களுக்கு மிகப்பெரிய வெற்றி.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

ரிலையன்ஸிற்கு நன்றி

இப்படியான மிகப்பெரிய முதலீட்டிற்கு இந்தியாவில் உள்ள கூட்டாளிகளுக்கும், இந்தியாவின் தனியார் ஆற்றல் நிறுவனமான ரிலையன்ஸிற்கும் நன்றி.

'அமெரிக்கா ஃப்ரஸ்ட்' என்கிற நம்முடைய கொள்கைகளாலும், அனுமதிகளை ஒழுங்குபடுத்துதல், வரிகளைக் குறைத்தல் போன்ற காரணங்களால், பில்லியன் கணக்கான டாலர்கள் ஒப்பந்தம் நமது நாட்டிற்கு மீண்டும் திரும்புகின்றன.

இது தான் அமெரிக்காவின் ஆற்றல் ஆதிக்கம்

இந்த நிலையம் அமெரிக்காவின் சந்தையை ஊக்குவிக்கும்... நமது தேசியப் பாதுகாப்பை வலுப்படுத்தும், அமெரிக்காவின் ஆற்றல் உற்பத்தியை அதிகரிக்கும் மற்றும் நமது பொருளாதாரத்திற்கு பில்லியன் டாலர்கள் வந்து சேரும்.

இது உலகிலேயே சுத்தமான சுத்திகரிப்பு நிலையமாக இருக்கும்.

மேலும், இது ஏற்றுமதிகளை ஊக்குவிக்கும், ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும். அந்தப் பகுதியில் வளர்ச்சி உண்டாகும்.

இப்படித் தான் அமெரிக்காவின் ஆற்றல் ஆதிக்கம் இருக்கும்". எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஈரான் போர், கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு: பங்குச்சந்தையில் நிமிடங்களில் ரூ.12 லட்சம் கோடி இழப்பு!

வளைகுடா போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை கடுமையாக அதிகரித்து இருக்கிறது. ஈரான் தனது நாட்டு எல்லையில் உள்ள ஹார்முஸ் ஜலசந்தி நீர்வழித்தடத்தை அடைத்ததால் அந்த வழியாக கச்சா என்ணெய் எடுத்து வரும் கப்பல்கள் ப... மேலும் பார்க்க

அழிந்து வரும் நாட்டு கழுதைகளை வளர்க்க மத்திய அரசு ரூ.50 லட்சம் மானியம்! - முழு விவரம்!

தேசிய கால்நடை வளர்ப்பு திட்டத்தில், கழுதை வளர்ப்பு உள்ளிட்ட கால்நடைத் தொழில்களைத் தொடங்க இந்திய அரசு நிதி உதவி வழங்க முடிவு செய்துள்ளது. கழுதை வளர்ப்பு உள்ளிட்ட கால்நடைத் தொழில்களில் ஈடுபட நினைக்கும் ... மேலும் பார்க்க

`ஸ்டால் ஒதுக்கீடு டு கொலாபரேஷன்..!' - - பிசினஸ் ஸ்கேம்களில் சிக்காமல் இருக்க நீங்கள் செய்ய வேண்டிவை!

ஒரு நாட்டின் பொருளாதார முதுகெலும்பு சிறு குறு தொழில்கள்தான். ஆனால் அவர்கள் சந்திக்கும் மிகப்பெரிய சவால் மோசடி. டிஜிட்டல் பரிவர்த்தனைகள், ஆன்லைன் மார்க்கெட்டிங், இ-காமர்ஸ் என தொழில் வளர்ந்தாலும், அதனுட... மேலும் பார்க்க

ஆந்திராவில் பில் கேட்ஸ்: `சுகாதாரம் முதல் AI தொழில்நுட்பம் வரை' - ஆலோசனை செய்த சந்திரபாபு நாயுடு!

மைக்ரோசாப்ட் நிறுவனர் மற்றும் பில் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையின் தலைவரான பில் கேட்ஸ் ஆந்திரப் பிரதேசத்திற்கு வருகை தந்தார். கன்னவரம் விமான நிலையத்திற்கு வந்த அவரை, ஆந்திர ஐடி அமைச்சர் நாரா லோகே... மேலும் பார்க்க