செய்திகள் :

40 வயதிலும் மிரட்டும் டு பிளெஸ்ஸி..! ஃபிட்னஸ், பேட்டிங்கின் ரகசியம் என்ன?

post image

தென்னாபிரிக்காவின் முன்னாள் வீரரும் ஜேஎஸ்கே (ஜோகன்னஸ்பர்க் சூப்பர் கிங்ஸ்) அணியின் கேப்டனுமான ஃபாப் டு பிளெஸ்ஸி 41 வயதை நெருங்கினாலும் ஃபிட்டாக இருக்கிறார். பேட்டிங்கிலும் அசத்தி வருகிறார்.

தென்னாப்பிரிக்கா டி20 தொடரில் ஜேஎஸ்கே அணிக்காக டு பிளெஸ்ஸி விளையாடுகிறார். சனிக்கிழமை மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதுகிறது.

ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்காக விளையாடி வருகிறார். கடந்த 3 வருடமாக டி20 கிரிகெட்டில் 1,000க்கும் அதிகமான ரன்களை குவித்து வருகிறார்.

127 டி20 போட்டிகளில் விளையாடி 4,105 ரன்கள் குவித்துள்ளார். சராசரி 36.31ஆக இருக்கிறது. இதில் 4 சதங்கள், 32 அரைசதங்கள் அடங்கும். கடந்த 3 ஆண்டுகளில் ஸ்டிரைக் ரேட் 151ஆக இருக்கிறது.

உடல்நலத்தில் அதீத அக்கறை காட்டும் டு பிளெஸ்ஸி கூறியதாவது:

ஃபிட்னஸின் ரகசியம்

நான் எனது உடலை நன்கு புரிந்து கொள்கிறேன். பொதுவாகவே நாம் உடல்நலத்துடன் இருக்க வேண்டுமென்றால் அதிகமாக செயல்பட வேண்டுமென்ற தவறான கருத்து நிலவி வருகிறது. நான் அப்படியாக நினைக்கவில்லை.

நான் தொடர்சியாக உடற்பயிற்சி செய்கிறேனே தவிர அதிகமாக செய்வதில்லை. இது உங்களது நேரத்தை சரியாக பயன்படுத்துவதைப் பொறுத்தது.

நீங்கள் இளமையாக இருக்கும்போது நேரடியாக சென்று எதையும் செய்யலாம். நீங்கள் எதையும் வார்ம்-அப் செய்ய வேண்டியதில்லை. எதைப் பற்றியும் கவலைப்பட தேவையில்லை.

தற்போது, ஐஸ் பாத், ஊட்டச்சத்து அதிக அளவு மாற்றத்தை உண்டாக்கியுள்ளது.

கடந்தாண்டு மட்டும் 1,502 ரன்கள் குவித்துள்ளார். 155.80 ஸ்டிரைக் ரேட்டுடன் விளையாடி வருகிறார்.

இளைஞர்களுடன் போட்டியிட ஃபிட்னஸ் தேவை

பின்தசை தொடை நார்கள் மிகவும் முக்கியமானது. நீங்கள் வித்தியாசமாக பயிற்சி செய்யும்போது அவை மிருகமாக மாறும். அடுத்து தூக்கம் மிகவும் முக்கியம். நான் இளமையாக இருக்கும்போது அதைச் செய்யவில்லை. அப்போது முயற்சித்தபோது அது சரியாகவும் வேலை செய்யவில்லை.

நீங்கள் பரிணமிக்க வேண்டும். ஃபிட்டாக இருப்பது மிகவும் சிறப்பாக இருக்கிறது. கடந்த 3 வருடமாக பேட்டிங்கில் முன்னேறி இருக்கிறேன். பயிற்சியிலும் அதேதான். அது நாம் பழக்கப்பட்ட மாதிரி இல்லை.

எனது ஃபிட்னஸ் சிறந்த தடகள வீரருடனும் என்னைவிட இளவயது நபர்களுடனும் போட்டியிட உதவுகிறது என்றார்.

பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்வாகத்துக்கு நன்றி தெரிவித்த ஸ்ரேயாஸ் ஐயர் (விடியோ)

பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக தன்னை தேர்ந்தெடுத்தற்கு அணி நிர்வாகத்துக்கு ஸ்ரேயாஸ் ஐயர் நன்றி தெரிவித்துள்ளார்.இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் வருகிற மார்ச் 21 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. க... மேலும் பார்க்க

சாம்பியன்ஸ் டிராபிக்கான அணியில் இடம்பெறாதது ஏன்? ஆஸி. வேகப் பந்துவீச்சாளர் பதில்!

சாம்பியன்ஸ் டிராபிக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம்பெறாததற்கான காரணம் குறித்து ஆஸ்திரேலிய அணியின் வேகப் பந்துவீச்சாளர் சீன் அப்பாட் மனம் திறந்துள்ளார்.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் ... மேலும் பார்க்க

சரியாக விளையாடாததால் சாம்பியன்ஸ் டிராபிக்கான அணியில் இடம்பெறவில்லை: வங்கதேச வீரர்

சரியாக விளையாடாததால் சாம்பியன்ஸ் டிராபிக்கான வங்கதேச அணியில் இடம்பெறவில்லை என அந்த அணியின் மூத்த வீரர்களில் ஒருவரான லிட்டன் தாஸ் தெரிவித்துள்ளார்.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் ம... மேலும் பார்க்க

சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான தென்னாப்பிரிக்க அணி அறிவிப்பு!

சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான தென்னாப்பிரிக்க அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று (ஜனவரி 13) அறிவித்துள்ளது.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 19 ஆம் தேதி தொடங்கி மார்ச் 9 ஆம்... மேலும் பார்க்க

இந்த முறை வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்வேன்: நாதன் மெக்ஸ்வீனி

ஆஸ்திரேலியாவில் சுழற்பந்துவீச்சுக்கு எதிராக விளையாடுவதற்கும் இலங்கையில் விளையாடுவதற்கும் வித்தியாசம் இருக்கிறது என நாதன் மெக்ஸ்வீனி தெரிவித்துள்ளார்.இந்தியாவுக்கு எதிரான பார்டர் - கவாஸ்ட் டெஸ்ட் தொடரி... மேலும் பார்க்க

2028 லாஸ் ஏஞ்சலீஸ் ஒலிம்பிக்கில் ஆட விரும்பும் ஸ்டீவ் ஸ்மித்!

2028 ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சலீஸ் ஒலிம்பிக்கில் விளையாட விரும்புவதாக ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார். இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் மோதிய பார்டர் கவாஸ்கர் தொடர் சமீபத்தில் நடந்து ம... மேலும் பார்க்க