Job Interview: "என்னை நேர்காணல் செய்தவர் மனிதரே இல்லை" - AI குழப்பத்தில் ரெட்டிட...
9MM குறும்பட திரையிடல்: "ராஜேஷ் குமாரின் நாவலைப் படித்தது போல இருந்தது" - சினிமா பிரபலங்கள் பாராட்டு
'நோ ஃப்ரில்ஸ்' தயாரிப்பு நிறுவனத்தின் கீழ், சந்தோஷ் மன்னராத் தயாரிப்பில் வெளியான '9 எம்எம்' என்னும் குறும்படம் ஹாரிஸ் வாணிதாசனால் இயக்கப்பட்டு பரணி ஸ்டுடியோவில் சிறப்புக் காட்சி திரையிடப்பட்டது.
இப்படத்தில் அஜித் விக்னேஷ் ஹீரோவாகவும், பரோட்டா முருகேசன், பிரதீப் ராஜ், தாமோதரன், இளமாறன், பிரபாத் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களாகவும் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு ஹாரிஸ் இசையமைத்துள்ளார்.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய இயக்குநர் சுப்ரமணிய சிவா, "‘ஈன்ற பொழுதினில் பெரிதுவக்கும் தன்மகனை சான்றோன் எனக் கேட்ட தாய்" என்னும் திருக்குறளைக் கூறி ஆர்வத்தில் ஏதோ பண்ணிருப்பாங்கனு நினைத்து நான் வந்தேன்.
ஆனால் நான் அன்று பார்த்த ஊமை விழிகள் திரைப்படத்தில் இருந்த அந்த எதிர்பார்ப்புகளும், சத்தங்களும் அது போன்ற ஒரு உணர்வுகளை இப்படம் உருவாக்கியது. இப்போதெல்லாம் டைரக்டர் ஆவதற்கு எந்த டைரக்டருடன் அசிஸ்டெண்டாக இருந்தாய் என்ற கேள்வி போய் எத்தனை குறும்படங்கள் எடுத்திருக்கீங்க அப்படின்ற கேள்வி வந்திருக்கு.
இரண்டாம் உலகப்போருக்குப் பிறகுதான் மனிதநேயப் படங்கள் உருவாக ஆரம்பித்தன. அந்த வகையில் இப்படியாக எடுக்கப்படும் குறும்படங்கள் பல புதிய விஷயங்களை உலகிற்குச் சொல்லவும், பயனுள்ளதாக அமைகின்றன. ஒரு படத்தின் படைப்பானது பார்ப்பவர்களிடம் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்துவதாகவும், படத்தில் ஏதோ ஒரு இடத்தில் ஆவது மக்களுடன் அது பிணைப்பை ஏற்படுத்துவதாகவும் அமைய வேண்டும்.
மக்களிடையே அது விவாதத்தை உண்டு பண்ண வேண்டும் அந்த வகையில் இப்படத்தில் எடிட்டிங், கேமரா என எல்லாமே சிறப்பாக அமைந்து ஒரு முழுமையான படமாக இது இருக்கின்றது. மொத்தத்தில் ராஜேஷ் குமாரின் நாவலைப் படித்தது போல இத்திரைப்படம் இருந்தது" என்றார்.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு காளி வெங்கட் கூறியதாவது, "இப்படத்தில் நடித்த எல்லோருக்கும் வாழ்த்துக்கள். படம் முழுவதும் விறுவிறுப்பாகவும், சுவாரசியமாகவும் அமைந்தது. இசை மிகவும் நன்றாகவும் பொருத்தமாகவும் இருந்தது. புதிய இளைஞர் அணிகள் இதுபோன்று நிறைய படங்களை எடுக்க வேண்டும்.
எந்தக் குறும்படமும் எப்பொழுது வேணுமானாலும் பாம் போல வெடித்து சிதறலாம், ரீச் ஆகலாம் எனவே நம்பிக்கையுடன் செயல்படுங்கள்" என்றார்.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட 'கொடுவா' படத்தின் இயக்குநர் S.சுரேஷ் கூறியதாவது, "என்கிட்ட அசிஸ்டன்ட் டைரக்டரா இருந்தவன் இப்போ டைரக்டராகவே வந்துட்டான்.
எங்க இந்த சினிமா கத்துக்கிட்டானே தெரியல. எனக்கு அசிஸ்டன்ட் டைரக்டர்ல இருந்து டைரக்டர் ஆவதற்கு நாலு வருஷம் ஆச்சு. இத பொறாமைனு சொல்றதா பெருமைனு சொல்றதானு எனக்கு தெரியல.
ஒரு படத்த ஸ்டார்ட் பண்றதும் முடிக்கிறதும் அவ்ளோ ஈஸி இல்ல. அதுதான் பெரிய இம்பேக்ட கிரியேட் பண்ணோ அது அவ்வளவு சுலபமானதும் இல்ல. அந்த வகையில பார்க்கும்போது இந்தப் படம் ஸ்டார்டிங் மற்றும் என்டிங் சூப்பர்" என்றார்.















