நிலம்/வீடு வாங்கப் போறீங்களா? - சரிபார்க்க வேண்டிய ஆவணங்கள், சான்றிதழ்கள் என்னென...
Aamir Khan: ஷாருக்கான், சல்மான் கான் முன்னிலையில் திருமணம்; கௌரியை மணமுடிக்கும் ஆமீர் கான்!
பாலிவுட் நடிகர் ஆமீர் கான் ஏற்கனவே இரண்டு முறை திருமணமாகி இரண்டு மனைவிகளையும் விவாகரத்து செய்துவிட்டார். ஆனால் விவாகரத்து செய்த பிறகு இரண்டு முன்னாள் மனைவிகளிடமும் சுமூக உறவை பேணி வரும் ஆமீர் கான் கடந்த ஆண்டு தனது புதிய லைஃப் பார்ட்னர் என்று கூறி கெளரி என்ற பெண்ணை அறிமுகம் செய்தார்.
கடந்த ஆண்டு அவர் கெளரியை அறிமுகம் செய்து அளித்திருந்த பேட்டியில், "முதலாவதாக, கெளரி பெங்களூரில் வசித்து வருந்தார். அதனால் நான் அவரைச் சந்திக்க விமானத்தில் அங்கு செல்வேன். அங்கு ஊடகங்களின் கண்காணிப்பு குறைவாக இருக்கும். எனவே நாங்கள் யாருடைய கவனத்திலும் படாமல் இருந்தோம்," என்று நகைச்சுவையாகக் கூறினார்.
ஏற்கனவே இரண்டு முறை நடந்த திருமணங்கள் சரிவர அமையாத காரணத்தால் கெளரியைத் திருமணம் செய்து கொள்ளாமல் அவருடன் லைஃப் பார்ட்னராக மட்டும் இருக்கப்போவதாக ஆமீர் கான் கூறி வந்தார்.

ஆனால் திடீரென தனது முடிவை மாற்றிக்கொண்டுள்ள அமீர் கான் தனது லைஃப் பார்ட்னரைத் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளார்.
இதன் மூலம் கெளரியுடனான தனது உறவைச் சட்டப்பூர்வமானதாக மாற்றிக்கொள்ள ஆமீர் கான் முடிவு செய்துள்ளார். இன்று நடக்கும் திருமணத்தில் பாலிவுட் நடிகர்கள் சல்மான் கான், ஷாருக்கான் உட்பட மிகவும் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டும் கலந்து கொள்ள இருக்கின்றனர்.
இருவரும் திருமணம் செய்து கொள்ள சமீபத்தில்தான் முடிவு செய்தனர். தங்களது இணைப்பைக் கொண்டாடும் விதமாக திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளதாகவும், திருமண ஏற்பாடுகள் ஏற்கனவே நடந்து வருவதாகவும் ஆமீர் கான் குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
இத்திருமணம் மிகவும் எளிமையாக வீட்டில் வைத்து நடக்க இருக்கிறது. தற்போது கெளரி, ஆமீர் கானின் திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தில் வேலை செய்கிறார். கெளரியின் தந்தை பெங்களூருவில் ஆடம்பர சலூன் கடை நடத்தி வருகிறார். லண்டனில் படிப்பை முடித்துள்ள கெளரிக்கு முதல் திருமணத்தின் மூலம் 7 வயதில் ஒரு மகன் இருக்கிறார்.




















