SIR FAQ : How to Fill Enumeration Form? - Full Details | Tamil | Decode
Aishwarya Rai: ``ஒரே மதம், ஒரே மொழி, ஒரே கடவுள்" - புட்டபர்த்தியில் ஐஸ்வர்யா ராய் உரை!
ஆந்திரப் பிரதேசத்தின் புட்டபர்த்தியில் நேற்று சாய் பாபாவின் பிறந்தநாள் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் பிரதமர் மோடி, நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன், சச்சின் டெண்டுல்கர், மத்திய அமைச்சர்கள் ராம் மோகன் நாயுடு கிஞ்சரபு, ஜி கிஷன் ரெட்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் உரையாற்றிய நடிகை ஐஸ்வர்யா ராய், ``மனித குலம் என்ற ஒரே ஒரு சாதிதான் இருக்கிறது. அன்பின் மதம் ஒன்றே மதம். இதயத்தின் மொழிதான் நம் ஒரே ஒரு மொழி. ஒரே கடவுள் அவர் எங்கும் நிறைந்திருக்கிறார். இதுதான் சாய்பாபாவின் போதனை.

நம்முடன் இணைந்து இந்த சிறப்பு நிகழ்வை கௌரவித்ததற்கு பிரதமர் மோடிக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எப்போதும் போல, தாக்கத்தையும் ஊக்கத்தையும் தரும், உங்கள் ஞானமான வார்த்தைகளைக் கேட்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.
உங்கள் வருகை இந்த நூற்றாண்டு விழாவிற்கு புனிதத்தையும் உத்வேகத்தையும் சேர்க்கிறது. மேலும் உண்மையான தலைமை என்பது சேவை செய்வதுதான். மனிதனுக்குச் சேவை செய்வது கடவுளுக்குச் செய்யும்சேவை என்ற சுவாமியின் செய்தியை நினைவூட்டுகிறேன்.
ஸ்ரீ சத்ய சாய் பாபா அடிக்கடி ஐந்து விஷயங்கள குறித்துப் பேசியிருக்கிறார். அர்த்தமுள்ள, நோக்கமுள்ள, ஆன்மீக ரீதியாக அத்தியாவசிய குணங்கள்: ஒழுக்கம், அர்ப்பணிப்பு, பக்தி, உறுதிப்பாடு, பகுத்தறிவு" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
















