செய்திகள் :

Ajith Kumar: "அஜித் சாருடன் அடுத்த படம் எப்போது?" - இயக்குநர் 'சிறுத்தை' சிவா கொடுத்த அப்டேட்

post image

`ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள் 2025’ விழாவில், 'பறக்கவைக்கும் ராஜாளி' விருதை வென்ற பைக் ரேசர் மாயாவைப் பாராட்டி இயக்குநர் சிவா பேசினார்.

Ananda Vikatan Nambikkai Awards
Ananda Vikatan Nambikkai Awards

"மாயா ஒருமுறை சொன்னார்கள், 'எனக்கு என்ன நேர்ந்ததோ அது நான் அல்ல; நான் என்னவாக மாற விரும்புகிறேனோ அதுதான் நான்' (I am not what happened to me. I am what I choose to become).

அந்த வைராக்கியம்தான் அவரை இன்று இந்த உயரத்துக்குக் கொண்டுவந்திருக்கிறது. சிறுவயதில் அவருக்கு ஏற்பட்ட அந்தத் தழும்பு இன்று ஒரு வீரத் தழும்பாக மாறியிருக்கிறது. இவ்வளவு பெரிய சாதனைகளைச் செய்யும் மாயா இன்னும் பல உயரங்களைத் தொட வேண்டும் என மனமார வாழ்த்துகிறேன்’’ என்றார் சிவா.

"அஜித் சார் மற்றும் டிரோன் குழுவினரோடு பணியாற்றுவது ஒரு புதிய அனுபவமாக இருக்கிறது. டோட்டலாக அது வேறோர் உலகமாக இருக்கிறது.

அங்கே நிறைய சவால்கள் இருக்கின்றன, ஆனால் அதைவிட ஒரு மிகப்பெரிய பேஷன் (Passion) அந்த வேலையின் பின்னால் இருக்கிறது. அஜித் சார் அதை மிகச்சிறப்பாகக் கையாண்டு வருகிறார்.

Ananda Vikatan Nambikkai Awards
Ananda Vikatan Nambikkai Awards

`அஜித் சாருடன் அடுத்த படம் எப்போது?’ என்று ரசிகர்கள் கேட்கிறார்கள். அனைத்தும் சரியாக அமையும்போது அதற்கான அறிவிப்பு வரும்.

அந்தப் படம் எத்தகைய ஜானராக (Genre) இருக்கும் என்பதைத் தற்போதைக்கு ரகசியமாகவே வைத்திருக்கிறோம். அஜித் சார் தனது பேஷனை (ரேஸிங் மற்றும் சினிமா) மிகவும் அழகாக பேலன்ஸ் செய்கிறார்.

அதேபோல் விஜய் சாரும் புதிய பயணத்தைத் தொடங்கியிருக்கிறார். இருவருமே மிகவும் இன்ஸ்பிரேஷனலான மனிதர்கள்’’ என்றார்.

Jana Nayagan: படம் ஏப்ரல் 30 ஆம் தேதிக்கு முன் வெளியாகாதா?! என்ன சொல்கிறார் கனடா விநியோகஸ்தர்?

விஜய் நடித்திருக்கும் 'ஜன நாயகன்' திரைப்படம் கடந்த ஜனவரி 9-ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவித்திருந்தார்கள்.படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கிடைக்காததனால் படத்தின் ரிலீஸ் தடைப்பட்டது.பிறகு சென்சார் சான்றி... மேலும் பார்க்க

'அசுரன் படத்தில் நான்தான் அப்பாவாக நடிக்க வேண்டியது; ஆனால்!' - நம்பிக்கை விருதுகள் விழாவில் கருணாஸ்

`ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள் 2025’-க்கான `பெருந்தகையாளர்’ விருதை SA. அமீர் அம்சாவுக்கு வழங்கினார், நடிகர் கருணாஸ். அவர் பேசும்போது, ``முதலில் இந்த அற்புதமான வாய்ப்பை எனக்கு வழங்கிய விகடனுக்கும், ... மேலும் பார்க்க

What To Watch: 'TTT' முதல் 'மை லார்ட் வரை' - இந்த வாரம் தியேட்டர் & ஓடிடி ரிலீஸ்கள் இவைதான்!

இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓ.டி.டி-யில் வெளியாகியுள்ள திரைப்படங்கள், சீரிஸ்களின் லிஸ்ட்.'மை லார்ட்' (தமிழ்) சசிகுமார், சைத்ரா நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் 'மை லார்ட்'. ராஜு முருகன் இயக்கியிருக்... மேலும் பார்க்க

Pookie Review: அந்நியப்பட்டு நிற்கும் `ஜென் ஜி' காதல்; க்ளிக்காகிறதா இந்த பிரேக்கப் காமெடி டிராமா?

ஐடி ஊழியர்களாக இருக்கும் கைலாஷும் (அஜய் திஷன்) ஆழியும் (ஆர்.கே. தனுஷா) காதலித்து வருகிறார்கள். காதலில் செல்லமாக 'பூக்கி' எனவும் பரஸ்பரம் இவர்கள் அழைத்துக் கொள்கிறார்கள். சில தவறான புரிதல்கள் காரணமாக இ... மேலும் பார்க்க

"எனக்கு மெலடி தான் ஸ்ட்ராங்கான ஏரியா!" - ஹாரிஸ் 25 ஸ்பெஷல்! | From Vikatan Archives

இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜுக்கு சினிமாவில் இது 25வது ஆண்டு. அவர் இசையமைப்பாளராக அறிமுகமான 'மின்னலே' திரைப்படம் வெளியாகி பிப்ரவரி மாதத்துடன் 25 ஆண்டுகளைக் கடந்திருக்கிறது. அப்படமும் இந்த வாரம் ரீ ரிலீ... மேலும் பார்க்க

நீ கவிதைகளா: `இந்த ஒரு வரிக்கு 3 நாட்கள் எடுத்துக்கொண்டோம்' - பாடலாசிரியர் ஜிகேபி | வரித்துணையே 01

முன்னணி பாடலாசிரியர்கள் எழுதிய ஹிட் பாடல்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களிடமே அந்தப் பாடல்கள் உருவான விதம் குறித்தும், அந்த வரிகளின் உண்மைக் கதைகளையும் அவர்களின் வாய்மொழியாகவே கேட்டுப் பகிரும் தொடர் இந்த ... மேலும் பார்க்க