``2005 உலகக் கோப்பைல 2-ம் இடம் வந்தப்போ ரூ. 1,000 கொடுத்தாங்க" - வைரலாகும் மிதால...
America: தப்பிய ஆய்வகக் குரங்குகள்; பிள்ளைகளைக் காக்க குரங்கை கொன்ற தாய்; சர்ச்சையின் பின்னணி என்ன?
அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணத்தில், ஆய்வகத்திலிருந்து தப்பித்த குரங்கை ஒரு பெண் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது குழந்தைகளின் பாதுகாப்புக்காகவே இந்தச் செயலைச் செய்ததாக அவர் கூறியிருக்கிறார்.
மிசிசிப்பியின் ஹைடெல்பெர்க் நகருக்கு அருகே வசிக்கும் ஜெசிகா பாண்ட் பெர்குசன் என்ற பெண், கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தனது வீட்டுத் தோட்டத்தில் ஒரு குரங்கு ஓடுவதைக் கண்டார்.
தனது துப்பாக்கியுடன் வெளியே வந்த ஜெசிகா, குரங்கு இருப்பதைக் கண்டார். ஆய்வகத்திலிருந்து தப்பித்த குரங்குகளிடம் ஆபத்தான நோய்க்கிருமிகள் இருப்பதாக ஏற்கெனவே உள்ளூர் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்ததால் அவர் துப்பாக்கியால் சுட்டதாகக் கூறினார்.
இதுகுறித்து ஜெசிகா கூறுகையில், "எந்தவொரு தாயும் தனது பிள்ளைகளைக் காக்க என்ன செய்வாரோ, அதைத்தான் நானும் செய்தேன். நான் சுட்டதும் அது அங்கேயே நின்றது. மீண்டும் சுட்டேன். அது பின்வாங்கி கீழே விழுந்தது," என்று தெரிவித்தார்.
ஐந்து பிள்ளைகளுக்குத் தாயான ஜெசிகா அந்தக் குரங்கு வேறு ஒருவரின் குழந்தையைத் தாக்கியிருந்தால், அதைத் தடுத்திருக்க வேண்டிய பொறுப்பு தனக்கும் இருந்திருக்கும் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.
குரங்குகள் தப்பியது எப்படி?
கடந்த வாரம் லூசியானாவின் நியூ ஆர்லியன்ஸில் உள்ள துலேன் பல்கலைக்கழகத்தின் தேசிய மருத்துவ ஆராய்ச்சி மையத்திலிருந்து 21 ரீசஸ் வகை குரங்குகளை ஏற்றிச் சென்ற ஒரு லாரி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தைத் தொடர்ந்து, மூன்று குரங்குகள் தப்பி ஓடிவிட்டன. இந்தக் குரங்குகளுக்கு ஹெபடைடிஸ் சி மற்றும் கோவிட்-19 உள்ளிட்ட பல வைரஸ் தொற்றுகள் இருக்கலாம் என உள்ளூர் அதிகாரிகள் கூறியிருக்கின்றனர்.
விபத்திலிருந்து தப்பித்த மூன்று குரங்குகளில் ஒன்றுதான் தற்போது ஜெசிகாவால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தச் சம்பவம் குறித்து உள்ளூர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.





















