`ஓ.பன்னீர்செல்வத்துக்கு கட்சிக்குள் இடமில்லை!' - மறைமுகமாக உணர்த்திய எடப்பாடி பழ...
BB Tamil 9: "நான் இந்த வீட்டில என்ன வேணாலும் பண்ணுவேன்; அதை கேட்க FJ யாரு?"- காட்டமான பார்வதி
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 65 நாள்களைக் கடந்திருக்கிறது. கடந்த வார எவிக்ஷனில் பிரஜின் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறியிருக்கிறார்.
இந்த வார டாஸ்க்கில் வென்ற அமித் 'வீட்டு தலை'-யாக தேர்வாகியிருக்கிறார்.
மேலும் இந்த வாரம் 'வழக்காடு மன்றம்' டாஸ்க்கை ஹவுஸ் மேட்ஸ்க்கு பிக் பாஸ் கொடுத்திருக்கிறார்.

இந்த டாஸ்க்கில் நேற்று (டிச.9) ஆதிரை மீது வழக்கு தொடுத்திருந்த வினோத் வெற்றி பெற்றார்.
இதனைத்தொடர்ந்து இன்று வெளியாகியிருக்கும் புரொமோவில், பார்வதி, FJ மீது வழக்குத் தொடுத்திருக்கிறார்.
இதனால் FJக்கும், பார்வதிக்கும் இடையே வாக்குவாதம் நடக்கிறது. "நீ லவ் பண்ணிட்டு தான் இருக்க பார்வதி.
அதுவும் மைக்கை மறைச்சு வச்சு லவ் பண்ணிட்டு இருக்க" என FJ பார்வதியைப் பார்த்து சொல்கிறார்.

"இந்த டாஸ்க்கில FJ தோத்திட்டதுனால என்கிட்ட இருந்து வார்த்தைய வாங்க பார்க்குறாரு.
நான் இந்த வீட்டில என்ன வேணாலும் பண்ணுவேன். அதை கேட்க FJ யாரு" என சபரியிடம் பார்வதி சொல்லிக்கொண்டு இருக்கிறார்.

















