`ஒன்றிய அரசு பட்ஜெட்டில் தமிழ்நாடு என்ற பெயரே இல்லை; ஆனால் பழனிசாமி பாராட்டுகிறா...
BB Tamil 9: `ரம்யா ஜோ வெளியிட்ட ஆடியோ' - பணப்பெட்டியை எடுக்கச் சொன்ன பிரஜின் பின்வாங்கியது ஏன்?
பிக்பாஸ் சீசன் 9 முடிவடைந்து இரண்டு வாரங்களுக்கு மேல் ஆகி விட்டது.
நேத்திக் கடனா தெரியவில்லை, டைட்டில் வாங்கிய திவ்யா கணேஷ் கோயில், குளம் என ஆன்மிக ட்ரிப்பில் இறங்கிவிட்டதாகச் சொல்கிறார்கள்.
நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் கன்டென்ட் தருபவர்களாக கேம் ஆடி நிகழ்ச்சி முடிவடைய சில தினங்கள் இருந்த சூழலில் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு அனுப்பப்பட்ட கமருதீன் பார்வதியும்கூட ஃபேன் மீட்டெல்லாம் வரத் தொடங்கி விட்டனர்.
சில போட்டியாளர்கள் சகாக்களுடன் சேர்ந்து குரூப் குரூப்பாக ஈவென்ட், டூர் என ரவுண்டு அடித்து வருகின்றனர்.
ஆனால் ஒருசிலர் மட்டும் இன்னும்கூட அந்த வீட்டுக்குள் இருந்தது போலவே, சண்டைக் கோழிகளாகவே இருக்கிறார்களோ என நினைக்கத் தோணுகிறது.

இரு தினங்களுக்கு முன் ரம்யா ஜோ தனது சமூக வலைதளப் பக்கத்தில் பிரஜின் அனுப்பிய வாய்ஸ் நோட் ஒன்றைப் பதிவிட்டு, பிறகு என்ன நினைத்தாரோ அதை டெலீட் செய்துள்ளார்.
அந்த வாய்ஸ் நோட்டில், 'சாண்ட்ராவிடம் பணத்தை எடுக்கச் சொல்லி ஏற்கெனவே நான் சொன்னதைச் சொல்ல வேண்டாம். எதுவுவே சொல்ல வேண்டாம், அவங்களா அவங்க கேமை பார்த்துக்கட்டும்' எனப் பேசியிருந்தார்.
அதாவது பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியில் வந்த ரம்யா ஜோ, மீண்டும் அந்த வீட்டுக்குள் போவதற்கு முன் பிரஜின் அவரிடம் பேசியிருப்பதுபோல் தெரிகிறது.
அது பணப்பெட்டி டாஸ்க் நேரம் என்பதால் பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்த சாண்ட்ராவிடம் பணத்தை எடுத்துக் கொண்டு வெளியேறி விடச் சொல்லி ரம்யாவிடம் பிரஜின் ஏற்கெனவே சொல்லியிருப்பது இந்த வாய்ஸ் நோட் மூலம் தெளிவாகத் தெரிகிறது.

பணப்பெட்டி டாஸ்க்கைப் பொறுத்தவரை, 'விரும்பும் போட்டியாளர்கள் பெட்டியை எடுத்துக் கொண்டு நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி விடலாம்' என்பதுதான் விதிமுறை. ஆனால் சில சீசன்களில் பெட்டியை எடுக்கும் முடிவில் சில சமரசங்கள் நிகழ்ந்ததாகவும் அதிகாரபூர்வமற்ற தகவல்கள் உலா வந்தன. பெட்டியை எடுத்துக் கொண்டால் அந்த வாரம் நாமினேட் ஆகி விட்டதாக அர்த்தம். நிகழ்ச்சியின் கடைசிக் கட்டம் என்பதால் டைட்டில் வெல்லும் நம்பிக்கை இருப்பவர்கள் பெட்டி பக்கம் திரும்ப மாட்டார்கள். கொஞ்சம் அவநம்பிக்கையிலும் ஊசலான மனநிலையிலும் இருப்பவர்களுக்கு பெட்டி மீது ஒரு கண் இருக்கும்.
போட்டியாளர்களுக்கு வெளியில் இருந்து எவ்வித அட்வைஸும் இது தொடர்பாக சென்றுவிடக் கூடாது என்பதில் சேனலும் கவனமாக இருக்கும்.
அந்த வகையில் இந்த சீசனில் முதலில் எவிக்ட் ஆகி வந்து விட்ட பிரஜின் சாண்ட்ராவிடம் பணப் பெட்டியை எடுத்து வரச் சொல்லியிருந்தால், அதில் ஆச்சர்யப்பட எதுவுமில்லை. ஆனால் முதலில் அப்படி சொன்னவர் பிறகு ஏன் பின் வாங்கினார் எனத் தெரியவைல்லை.
ஒருவேளை ரம்யா ஜோ அந்த தகவலைப் பாஸ் செய்யும் போது ஏதாவது சிக்கல் உண்டாகி, அது சாண்ட்ராவுக்கு எதிராக அமைந்து விடலாமென நினைத்துப் பின்வாங்கினாரா தெரியவில்லை.
இந்த வாய்ஸ் நோட் குறித்து பிரஜினிடம் கேட்டோம்.

'பிக்பாஸ் முடிஞ்சு ஒரு மாசம் முடியப் போகுது. இப்ப எனது அடுத்த படமான 'ஊருக்கு ரெண்டு ஊதாரி' படத்துக்கு பூஜை போட்டுட்டோம். இனியும் அந்த நிகழ்ச்சியில நடந்து பஞ்சாயத்துகளைப் பேசிட்டிருக்கணுமா? எனக்கு நிறைய வேலைகள் இருக்கு. அதனால இந்த மாதிரி பஞ்சாயத்துகளைப் பேசி நேரத்தை வீணாக்க விரும்பலை. நிறைய நேரம் இருக்கிறவங்க இந்த மாதிரி ஏதாவது செய்திட்டிருப்பாங்க. அதனால இதைக் கடந்து... அதாவது கண்டுக்காமப் போறதுதான் நல்லதுனு நினைக்கிறேன்' என முடித்துக் கொண்டார்.


















