Doctor Vikatan: ஹார்ட் அட்டாக் அறிகுறிகளை ஒரு மாதம் முன்பே உணரலாம் என்பது உண்மைய...
TV Update: 'ஜனநாயகன்' பேக்கேஜ்? மிரளும் சேனல், மீண்டும் சேர்ந்து நடிக்கும் சீனியர் ஜோடி!
விஜய் டிவியின் ஹிட் சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். முதல் சீசன் ஹிட் ஆனதால் தற்போது இரண்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.
முதல் சீசனில் நடிகர் ஸ்டாலின், சுஜிதா, குமரன், மறைந்த சித்ரா ஆகியோர் நடித்திருந்த நிலையில் தற்போதைய சீசனில் சுஜிதா, குமரன் ஆகியோர் நடிக்கவில்லை. மாறாக ஸ்டாலினுக்கு ஜோடியாக நிரோஷா நடித்து வருகிறார்.

சேனலின் ஒரு பிராண்ட் என்பது போல் ஆகிவிட்ட இந்த சீரியலில் ஜோடியாக நடிக்கும் ஸ்டாலின் - நிரோஷா இருவரும், விஜய் டிவியிலேயே இன்னொரு சீரியலிலும் சேர்ந்து நடிக்க கமிட் ஆகியிருக்கிறார்களாம்.
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் சூழலில் ஒளிபரப்பாகவிருக்கும் புதிய சீரியல் பகல் நேரத்தில் ஒளிபரப்பாகலாம் என்கிறார்கள்.
'ஜன நாயகன்' படத்தின் தொலைக்காட்சி உரிமையை வாங்கியிருக்கிறது ஜீ தமிழ் சேனல். முன்னதாக, மலேசியாவில் நடைபெற்ற படத்தின் ஆடியோ லாஞ்ச் நிகழ்ச்சியையும் சில தினங்களுக்கு ஒளிபரப்பினார்கள். அந்தத் தினத்தில் விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சியையே மறு ஒளிபரப்பு செய்தது நினைவிருக்கலாம்.

இந்தப் பின்னணியில் தற்போது படம் வெளியாவதில் சிக்கல் உண்டாகி எப்போது ரிலீஸ் ஆகுமெனத் தெரியாத சூழலில் சேனலும், இந்த விவகாரத்தில் அடுத்து என்ன நடக்குமோ என்கிற குழப்பத்தில் இருக்கிறதாம்.
சேனல் உள் விவகாரங்கள் அறிந்த சிலரிடம் பேசியபோது,
'படத்தின் உரிமை வாங்கிய போதே, அடுத்த சில மாதங்களுக்குக் குறிப்பாக தேர்தல் வரை எங்கும் படம் தொடர்பான, விஜய் தொடர்பான பேச்சு இருக்குமாறு பார்த்துக்கொள்ளச் சொல்லிக் கேட்டதாகச் சொல்கிறார்கள். எனவேதான் இப்போது சேனலில் சரிகமப முதலான மற்ற சில நிகழ்ச்சிகளிலும் 'தளபதி' புராணம் பாடப்பட்டு வருவதாகத் தெரிகிறது
போதாக் குறைக்குப் புதிதாகத் தொடங்கப்பட்ட கில்லாடி ஜோடிஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக விஜய்யின் நண்பரான சஞ்சீவை இறக்கி விட்டிருக்கிறார்கள்.
முன்பு ஒரு சில நிகழ்ச்சிகளுக்காக மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகத்திடமிருந்து நோட்டிஸ் வந்ததெல்லாம் நடந்தது. இப்போது நடப்பவற்றைப் பார்த்தால் மீண்டும் அந்த நாள்களைச் சந்திக்க வேண்டி வந்து விடுமோ என நினைக்கத் தோன்றுகிறது' என்கிறார்கள்.

















