'அறிவாலயம் முற்றுகை; கருணாநிதி நினைவிடத்தில் போராட்டம்!' - தூய்மைப் பணியாளர்கள் ...
BB Tamil 9 Day 85: ‘டாக்ஸிக் லவ்’ சண்டையைப் பார்க்கவா? - காப்பாத்துங்க மை லார்ட்
தானும் சும்மா இருந்து, மற்றவர்கள் வேலை செய்வதையும் தொந்தரவாக நினைத்த சான்ட்ராவிடம் “இதப் பாக்கறதுக்காக மக்கள் சப்ஸ்கிரைப் பண்றாங்க?” என்று கேட்டார் விசே.
அதே கேள்வியை இன்னொரு கோணத்திலும் வைக்கலாம். ‘பாரு - கம்முவிற்கு இடையே பல நூற்றாண்டுகளாகத் தொடர்ந்து நடக்கும் ‘டாக்ஸிக் லவ்’ சண்டையைப் பார்ப்பதற்காகவா பார்வையாளர்கள் சப்ஸ்கிரைப் செய்திருக்கிறார்கள்? ஏன் அந்தக் காட்சிகளையே காட்டுகிறீர்கள்?
ஒரு பக்கம், துஷார் என்றாலே கண்கலங்கும் அரோரா, இன்னொரு பக்கம் எதிராளியை பேச விடாமல் தானே மூச்சு விடாமல் பேசி இம்சிக்கும் திவ்யா, கம்ருதீனை ஏற்றி விட்டு அழகு பார்க்கும் வினோத், பீட் பாக்சிங் இம்சை சுபிக்ஷா, அவ்வப்போது அழ ஆரம்பித்திருக்கும் விக்ரம், சைலண்ட்டாக இருந்து வயலென்ட் செய்யும் சான்ட்ரா, நெகட்டிவிட்டியால் நிரம்பியிருக்கும் பாரு..
இவர்களைப் பார்ப்பதற்கா மக்கள் சானலை சப்ஸ்கிரைப் செய்திருக்கிறார்கள்? பிக் பாஸ் டீம் இதை யோசிக்குமா?....

பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? - நாள் 85
பல விஷயங்களில் அடாவடியாக நடந்து கொள்ளும் பாரு, ரொமான்ஸ் விஷயத்தில் மட்டும் கம்ருதீனிடம் பம்முகிறார். ஏனெனில் இது அவரது இமேஜை ஆழமாக பாதிக்கும் விஷயம்.
‘என்னை பேட் டச்சுன்னு சொல்லிட்டா.. எனக்கு மானமே போச்சு.. அதுக்கு தீர்வு வேணும்’ என்று மீண்டும் மீண்டும் இந்த விஷயத்தை நோண்டிக் கொண்டேயிருக்கும் கம்ருதீனின் பக்கம் செய்வது அநியாயமாகத் தெரிகிறது.
லவ் பண்ணும் போது கிளுகிளுப்பாக இருப்பது, அதில் ஒரு பிரச்சினையென்றால் உடனே கொடூரனாக மாறுவது.. என்று ஒரு ‘டாக்ஸிக் காதலன்’ பாத்திரத்தில் கம்ருதீன் கச்சிதமாகப் பொருந்துகிறார்.
கம்ருதீனின் முன்கோபமும் முரட்டுத்தனமும் பாருவிற்கு நன்றாகவே தெரியும். எனினும் அவரிடமிருந்து உடனே விலகாமல் ‘எங்க ரிலேஷன்ஷிப் நட்புக்கு மேலே.. காதலுக்கு கீழே’ என்று வியாக்கியானம் செய்துகொண்டு கம்முவுடன் தொடர்ந்து சுற்றிக்கொண்டிருந்தார்
கம்முவின் ரொமான்ஸ் டாக்ஸிக்கில் சிக்கி அவஸ்தைப்படும் பாரு
அது லவ் கன்டென்டிற்காக மட்டும் இல்லையென்று தோன்றுகிறது. இரண்டு சிறுமிகள் ஒரு பொம்மையைப் பறிப்பதற்காக போட்டுக் கொள்ளும் சண்டை போலவே இது தெரிகிறது. அரோராவிடம் இருந்து கம்ருதீன் என்கிற பொம்மையைப் பறிப்பதற்காக இந்த so called காதலை நிகழ்த்தியே ஆக வேண்டிய கட்டாயம் பாருவிற்கு இருந்திருக்கலாம். இப்படியொரு உளவியல் நெருக்கடி பாருவிற்கு நிகழ்ந்திருக்கலாம்.
பாரு - கம்மு ரொமான்ஸ், இந்த சீசன் முடிந்த அடுத்த நிமிடமே புட்டுக் கொள்ளும் என்று யூகித்தேன். ஆனால் ஷோவிற்குள்ளேயே இந்த இருவரின் முகமூடிகள் கிழிந்து தொங்குவது குறித்து மகிழ்ச்சி. இருவருமே தங்களின் ரொமான்ஸை பிக் பாஸ் சர்வைவலுக்காகவும் மைலேஜிற்காகவும் நிகழ்த்தினார்கள் என்பது வெளிப்படை. உண்மையான காதலில் பழிவாங்கும் போக்கு இருக்காது. ‘தன்னால் நேசிக்கப்பட்டவன் அல்லது பட்டவள் நிம்மதியாக இருக்க வேண்டும்’ என்கிற நல்லெண்ணம்தான் அடிப்படையாக இருக்கும்.

‘என்னை பேட் டச்சுன்னு சொல்லிட்டா’ என்று கம்ருதீன் கூப்பாடு போடும் விவகாரத்தில் பாருவின் பக்கம்தான் நியாயம் இருப்பதாக நினைக்கிறேன். (பாரு ரசிகர்கள்.. ப்ளீஸ் நோட் திஸ் பாயின்ட்!). கம்ருதீனின் மீது ஈர்ப்பு ஏற்படுவதற்கு முன்னால், தன்னை இம்ப்ரஸ் செய்ய முயலும் இம்சையாகத்தான் பாரு பார்த்திருக்கிறார். “என் கிட்ட நெருங்கி வந்தான். நான் டக்குன்னு திரும்பி போயிட்டேன்.. யாரு கிட்ட?” என்று திவாகரிடம் பெருமிதமாகச் சொன்னவர் இதே பாருதான்.
‘எப்ப நடந்ததையோ வெச்சு சொன்னத’ - பாருவின் புலம்பலில் நியாயம்
ஆனால் சிறைவாசத்திற்குப் பிறகு கம்ருதீனின் மீது பாருவிற்கு ஈர்ப்பு ஏற்பட்டிருக்காம். ‘இந்த அரோரா.. இவன் பின்னாடியே சுத்திட்டு இருக்காளே.. இதை எப்படியாவது பிரேக் செய்து கம்முவை நம்ம பக்கம் இழுக்கணும். அவனை வெச்சு மைலேஜ் தேத்தணும்..” என்று பாரு பிளான் செய்திருக்கலாம். அந்த வகையில் பாருவிற்கு வெற்றி கிடைத்தது. ஆனால் கம்ருதீனின் ‘டாக்சிக்தனம்’ தாங்காமல் இப்போது அவஸ்தைப் படுகிறார்.
“அந்தச் சமயத்தில் நான் அப்படி நினைத்தது உண்மைதான். ஆனால் பிறகு அப்படியில்லை. நம்மிடையே மலர்ந்த உறவானது என்னுடைய சம்மத்தோடுத்தான் நிகழ்ந்தது. உன் மீது தவறில்லை. அப்போது நினைத்ததை இயல்பாக சொன்னேன்”..

இதுதான் பாருவின் நேர்மையான விளக்கம். ஒரு பெண் இப்படி பகிரங்கமாக சொல்வது பாராட்டப்பட வேண்டியது. ஆனால் கம்முவோ “என்னை தப்பா சொல்லிட்டா மச்சான்.. ஒரு பொண்ணோட அனுமதியில்லாம தொடற அளவிற்கு நான் கேவலமானவன் இல்ல” என்று அனுதாபத்தைத் தேடி விக்டிம் கார்டை கையில் எடுக்கிறார் என்று தோன்றுகிறது.
கம்மு அடிப்படையில் நல்ல மனிதர். நிதானமான சமயத்தில் நேர்மையாக யோசிக்கிறார். மன்னிப்பு கேட்கிறார். ஆனால் முன்கோபம் வந்து விட்டால் கூடவே பழிவாங்கும் வெறி வந்து விடுகிறது. பாருவிடமும் அரோராவிடமும் கோபத்தில் ஆழமாக புண்படுத்தும் வார்த்தைகளை வீசுகிறார். யார் எங்கே புண்படுவார்களே அங்கு குறி பார்த்து அடிக்கிறார். அரோவிற்கு துஷார் என்கிற ஆயுதம். பாருவிற்கு ‘நீ மட்டும் ஒழுக்கமா?’ என்கிற ஆயுதம்.
திவ்யாவிற்கு எதிராக ஆவேச டிராமாவை விக்ரம் நிகழ்த்துகிறாரா?
பாருவிற்கு சார்பாக இன்னொரு பாயிண்ட்டையும் பார்த்து விடுவோம். விக்ரம் - திவ்யாவிற்கு இடையே நிகழும் சண்டையில் “இவங்க ரெண்டு பேரும் தனியாக உக்காந்து பேசட்டுமே.. ஏன் பொதுவில் அடித்துக் கொண்டு விக்ரம் மைலேஜ் தேட நினைக்கிறார்?” என்கிற பாருவின் கேள்வியில் நியாயம் இல்லாமல் இல்லை.
விக்ரம் பெரும்பாலும் நிதானமாக இயங்குபவர். சிறைக்குச் செல்லாமல் சான்ட்ரா - திவ்யா கூட்டணி பயங்கரமாக வெறுப்பேற்றிய போதும் அவமானப்படுத்திய போதும் சகித்துக் கொண்டவர். மற்றவர்களை வெறுப்பேற்றுவதையே முழு நேரமாக வைத்திருக்கும் பாருவைக் கூட திறமையாக கையாளத் தெரிந்தவர்.
ஆனால் சமீபகாலமாக நிறைய அழுகிறார். திவ்யா விவகாரத்தில் கண்களை உருட்டி ஆவேசப்படுகிறார். சான்ட்ரா போன்ற மிக்சர் பார்ட்டிகளோடு ஒப்பிடும் போது கனி வெளியேற்றப்பட்டு விட்டாரே என்கிற வருத்தமும் மனஅழுத்தமும்தான் இந்த ஆவேசத்திற்கு அவரை இட்டுச் சென்றிருக்கலாம். (இதைப் பற்றி நேற்றைய கட்டுரையில் யூகமாக எழுதியிருந்தேன். அதுதான் உண்மை என்பது சுபிக்ஷாவிற்கு அவர் பேசியதில் இருந்து உண்மை என்று தெரிகிறது) திவாகர் இது நாள் வரை காத்திருந்த பொறுமை ஒரு கொதிநிலையில் வெடித்திருக்கலாம்.

மாற்றுத் தரப்பை பேச அனுமதிக்காத திவ்யா - நியாயமா?
‘உங்க வீட்ல கத்தச் சொன்னாங்களா?’ என்று திவ்யா கேட்டது கோபத்தில் எழுந்த ஒரு சாதாரண குற்றச்சாட்டு. அப்போதைக்கு விக்ரமிற்கு கோபம் வந்தாலும் பிறகு பொறுமையாக கையாண்டிருக்கலாம். “நீயொரு பிராடு, கோழை, அயோக்கியத்தனம்” என்றெல்லாம் அதீதமான வார்த்தைகளை விடுவது அவரது இமேஜிற்குத்தான் வீழ்ச்சியைத் தரும்.
“வாங்க.. பேசித் தீர்க்கலாம்.. இது என்னோட அடிப்படை உரிமை” என்று விக்ரம் திவ்யாவிடம் மல்லுக்கட்டியது நிச்சயம் நல்ல செயல். ஆனால் ஒரு கட்டத்திற்குப் பிறகு அதை வலியுறுத்தி நெருக்கடி தரக்கூடாது. பார்த்துக் கொண்டிருக்கும் மக்களுக்கு இதிலுள்ள நியாயம் தன்னாலேயே புரிந்து விட்டிருக்கும். விக்ரம் இந்தப் பாணியைத்தான் வழக்கமாக செய்வார். ஆனால் இந்த முறை சறுக்கல் நிகழ்ந்து விட்டது.
விக்ரம் திவ்யாவின் பிரச்சினையை தனிப்பட்ட வகையில் அமர்ந்து பேச முயன்றிருக்கலாம். பொதுவில் பேசுவதால்தான் திவ்யாவின் ஈகோ சீண்டப்படுகிறதோ என்று தோன்றுகிறது. ‘வாங்க பேசித் தீர்க்கலாம்’ என்று ஒருவர் கதறிக் கொண்டிருந்தாலும் அதை பிடிவாதமாக ஏற்க மறுக்கும் திவ்யாவின் தரப்பிலும் தவறு இருக்கிறது. பேசி பேசித்தான் உலகில் எத்தனையோ பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன.

பாரு + சான்ட்ரா = சந்தர்ப்பவாத டாக்ஸிக் கூட்டணி
“என் புருஷன் போன போது நான் டிராமா பண்ணதா சொன்னாங்க.. இப்ப விக்ரம் பண்றதுக்கு பேரு என்னவாம்?” என்று சந்தடி சாக்கில் தன்னுடைய இமேஜை சரி செய்து கொள்ள முனைகிறார் சான்ட்ரா. பிரஜின் எவிக்ட் ஆவது உறுதியாகத் தெரியாத நிலையில் சான்ட்ரா செய்த ஆவேசம் முதல், பல நாட்களுக்கு மூக்கைச் சிந்தி அழுது கத்தி ஆர்ப்பாட்டது வரை செய்த இம்சையை ஒரே வாக்கியத்தில் நியாயப்படுத்தி விட முடியாது.
‘பாருவை நம்பாத’ என்று மற்றவர்களுக்கு ரகசியமாக உபதேசம் செய்யும் சானட்ரா, சந்தர்ப்பவாதத்திற்காக தேவையான சமயத்தில் பாருவுடன் கூட்டணி வைக்கிறார். இப்போதைய நட்பும் அப்படித்தான். ‘உன்னைப் பத்தி எனக்குத் தெரியுண்டா’ என்கிற விதத்தில்தான் பாருவும் சான்ட்ராவும் பரஸ்பரம் பழகி வருகிறார்கள்.
PR Activity பற்றிய விவாதத்தை ஆரம்பித்து சிண்டு முடிய ஆரம்பித்தார் பிக் பாஸ். “நான் ஒரு மொள்ளமாறிங்க.. நான் ஒரு முடிச்சவிக்கங்க” என்கிற கவுண்டமணி - செந்தில் காமெடியைப் போல பல போட்டியாளர்களின் வண்டவாளங்கள் தண்டவாளம் ஏறியது. ஒருவரையொருவர் போட்டுக் கொடுத்தார்கள். “வீட்டு வாடகை கொடுக்கறதுக்கே வக்கில்லை. நான் எங்கே PR வெக்கறது?” என்று சிரிக்க வைத்தார் வினோத்.
இன்று சமூகவலைத்தளத்தில் வெளியாகும் பல பதிவுகளை, கமெண்ட்டுகளை உண்மையான ரசிகர்கள் எழுதுகிறார்களா, அல்லது சம்பந்தபட்ட ஆசாமியின் PR டீம் எழுதுகிறார்களா என்பது நிறைய குழப்பங்களையும் சந்தேகத்தையும் ஏற்படுத்துகிறது. எப்படியாவது வெற்றியைப் அடைந்து விட வேண்டும் என்பதற்காக பல்வேறு குறுக்கு வழியைத் தேடும் வெறி இன்று அதிகமாகி விட்டது. நேர்மையாக ஆடி வெற்றியை நோக்கி நகரும் sportsmanship அரிதாகி விட்டது. PR என்பது பெரிய வணிகமாகவே இன்று மாறியிருக்கிறது.

‘சுபிக்ஷா மீது வினோத்திற்கு பொறாமையா?’
“மீனவ சமூகத்திலிருந்து ஒரு பெண்ணா முதன்முறையா பிக் பாஸ் வந்திருக்கேன். சமூகம் என்னைக் காப்பாற்றும்” என்கிற மாதிரி சுபிக்ஷா சொன்ன போது “நீ மட்டும் வரலை. நிறைய பேர் இருக்காங்க” என்று வினோத் உறுமியதில் பொறாமைதான் தெரிந்தது. “நான் அப்படிச் சொல்லலை” என்று பிறகு அவர் சமாளித்தாலும், இந்தப் பாயிண்ட்டை பிடித்து சுபிக்ஷா முன்னேறி விடுவாளோ என்கிற போட்டி மனப்பான்மையை பார்க்க முடிந்தது. சுபிக்ஷாவும் வினோத்தும் விளிம்புநிலை சமூகத்திலிருந்து மேலே ஏறி வர முயல்பவர்கள்தான். எனில் ஏன் இந்தப் பொறாமை?
இந்த வார நாமினேஷன் ரணகளமாக நடந்தது. இறுதிக்கட்டம் நெருங்கிக் கொண்டிருப்பதால் சங்கடங்களை உதறி இறங்கி அடித்து காரணங்களைச் சொன்னார்கள். ஏற்கெனவே குறிப்பிட்டது போல திவ்யாவிற்காக ஆட்சேகரபமான காரணங்களை விக்ரம் சொன்னது தவறு. திவ்யா இதை கூலாக எதிர்கொண்டது நன்று.
பாருவும் கம்முவும் தங்களின் முகமூடிகளைக் கழற்றி விட்டு உக்கிரமாக அடித்துக் கொண்டார்கள். ஆனால் இவர்களின் ரொமான்ஸ் டிராமா இத்துடன் முடிவிற்கு வருமா என்பது சந்தேகம்தான். ‘ஸாரி பாரு.. ‘என்று பரிதாபமான முகத்துடன் கம்மு வந்திருக்கிறார். ‘இட்ஸ் ஓகே பேபி.. இனிமே இப்படி பேசாத’ என்று பாரு மீண்டும் உரசிக் கொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
இனிமேல் ‘வீட்டு தல’ என்று யாரும் இல்லாததால் இந்த வாரம் அனைவருமே நாமினேட் ஆகியிருக்கிறார்கள். இந்த வாரமாவது தகுதியற்ற போட்டியாளர் வெளியேறுமாறு மக்கள் தீர்ப்பளிப்பார்களா.. மன்னிக்கவும் ..பிக் பாஸ் டீம் முடிவு செய்யுமா?

தகுதியுள்ளவர்களுக்கு வெற்றி - ஆனால் அது நடக்குமா?
டிக்கெட் டூ பினாலே - 1 டாஸ்க்கில் சிலுவையில் அறைவது போல ஸ்டாண்ட் மீது போட்டியாளர்கள் நிற்கப்பட்டார்கள். கை வலி தாங்காமல் முதலில் இறங்கியவர் சான்ட்ரா. அடுத்து இறங்கியவர் விக்ரம். கட்டையை விட்டு கையை விலக்கி விட்டு ‘அய்யோ’ என்று தலையில் அடித்துக்கொண்ட வினோத்தைப் பார்க்க பாவமாக இருந்தது.
போட்டியின் முடிவு தெரிவதற்குள் எபிசோட் முடிந்து விட்டாலும், ஒன்றாவது டாஸ்க்கில் சுபிக்ஷா வென்றிருப்பதாக தெரிகிறது. அடுத்தடுத்த போட்டிகளில் தொடர்ந்து வென்று டிக்கெட்டைப் பெறுபவர் யார் என்று பார்க்க வேண்டும். அது யாராக இருந்தாலும் தகுதியுள்ளவர் பெற்றால் மகிழ்ச்சி.
ஒருவேளை பாருவை வின்னராகவும் சான்ட்ராவை ரன்னர் - அப்- ஆகவும் அறிவித்து ஆட்டம் முடிந்தால், இந்த பிக் பாஸ் சீசன் 9 என்கிற வஸ்த்துவை விரைவில் குழி தோண்டிப் புதைத்து விடலாம்.



















