Samantha: 'ஆழமான பிணைப்பை ஏற்படுத்தும்' - பூதசுத்தி விவாஹா முறையில் திருமணம் செய...
BB Tamil 9: "இந்த ட்ரையாங்கிள் விஷயத்தை முடிக்கணும்"- அரோராவிடம் பேசும் பார்வதி
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 8 வாரங்களைக் கடந்துவிட்டது. 20 பேருடன் தொடங்கிய இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது வரை 9 பேர் வெளியேறி இருக்கின்றனர்.
கடந்த வாரம் டபுள் எவிக்ஷன் இருக்கும் என்று கூறப்பட்டு வந்த நிலையில் எவிக்ஷன் இல்லாத வாரமாக பிக் பாஸ் அறிவித்துவிட்டார்.

இதனால் இந்த வாரம் குறைவான ஓட்டை பெற்ற ரம்யா, வியானா எவிக்ஷனில் இருந்து தப்பித்துவிட்டனர்.
மேலும் 21-வது நாளில் வெளியேறிய ஆதிரை நேற்று (நவ.30) மீண்டும் பிக் பாஸிற்கு ரீ என்ட்ரி கொடுத்திருக்கிறார்.
ஆதிரையின் பிக் பாஸ் என்ட்ரியால் ஹவுஸ் மேட்ஸ் சர்ப்பரைஸாக இருந்தாலும் fJ வும், வியானாவும் மட்டும் அதிர்ச்சியாகியிருந்தனர்.
இந்நிலையில் இன்று வெளியான முதல் புரொமோவில், இந்த வாரத்திற்கான டாஸ்க் நடைபெற்றது. டாஸ்க்கில் வெற்றி பெற்ற ரம்யா இந்த வாரத்திற்கான வீட்டு தலயாகத் தேர்வாகியிருக்கிறார்.

தற்போது வெளியாகியிருக்கும் 3-வது புரொமோவில் கம்ருதீன் விஷயத்தில் பார்வதிக்கும்-அரோராவுக்கும் நடக்கும் பிரச்னை குறித்து பார்வதி ஆதிரையிடம் பேசுகிறார்.
"ட்ரையாங்கிள் மாதிரி எங்க விஷயம் போயிட்டு இருக்கு. அதை உடைக்கணும்'னு நான் நினைக்கிறேன்" என்று பார்வதி சொல்ல, " நீங்க பண்றது ரொம்ப சில்லியா இருக்கு. நீங்களா ஏன் ஒரு விஷயத்தை கிரியேட் பண்றீங்க. ப்ரெண்ட்ஷிப் இருக்கலாம்.

ஆனா அதுக்காக நீயும் அரோராவும் ஏன் இப்படி பண்றீங்க" என ஆதிரை அட்வைஸ் பண்ணுகிறார். இதனைத்தொடர்ந்து "அரோரா நான் உன்கிட்ட பேசலாமா? இந்த ட்ரையாங்கிள் விஷயத்தை முடிக்கணும்" என பார்வதி அரோராவிடம் பேசுகிறார்.















