Career: ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் சூப்பர் வேலை; லட்சங்களில் சம்பளம்; எப்படி...
BB Tamil 9: "திவாகர் வெளிய போனதுக்கு இவர்தான் காரணம்" - மோதிக்கொள்ளும் ஆதிரை - வினோத்
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 58 நாட்களைக் கடந்திருக்கிறது. மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்த இந்த நிகழ்ச்சியில் 9 பேர் வெளியாகி இருக்கும் நிலையில் கடந்த வாரம் யாரும் வெளியேற்றப்படவில்லை.
மேலும் ஹவுஸ் மேட்ஸுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் ஆதிரை பிக் பாஸ் வீட்டிற்கு என்ட்ரி கொடுத்திருந்தார்.
பல நாட்கள் வெளியே இருந்து பிக் பாஸ் நிகழ்ச்சியை ஆதிரை பார்த்துவிட்டு வந்ததனால் அவரது ஆட்டம் திருப்புமுனையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இன்று வெளியாகி இருக்கும் புரொமோவில் ஆதிரைக்கும், வினோத்திற்கும் வாக்குவாதம் நடக்கிறது.
சபரியிடம் வினோத் பேசிக்கொண்டிருக்கும்போது, "ஏய் யாரை சொல்ற" என ஆதிரை, வினோத்தைக் கேட்க, "யாரை இப்போ ஏய்ன்னு சொல்ற? அப்படி சொல்லாத அது தப்பு" என வினோத் சண்டை போடுகிறார்.
நாக்கைக் கடிச்சு அதட்டாம பேசுங்க வினோத். எல்லாத்தையும் இந்த வீட்டில பண்ணிட்டு பண்ணலன்னு சொல்றீங்க.
வாட்டர் மெலன் (திவாகர்) வெளியே போனதுக்கு இவரும் ஒரு காரணம்தான்" என ஆதிரை சொல்கிறார். வினோத் இதற்கு எப்படி ரியாக்ட் செய்வார் என்பதை இன்றைய எபிசோடில் பார்ப்போம்.


















