"மம்மூட்டிக்கு விருது கொடுக்க அவர்களுக்கு தகுதியில்லை" - தேசிய விருதுகள் குறித்த...
Bison: ``எனக்குள் ஏதோ ஒன்றை" - பைசன் பட ஷூட்டிங்க் வீடியோவை பகிர்ந்து நெகிழும் நடிகை அனுபமா
இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், நடிகர் துருவ் விக்ரம் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் 'பைசன்'. இந்தத் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த நடிகை அனுபமா பரமேஸ்வரன், முன்னதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ``பைசனின் 10 நாட்கள்... என் இதயம் இன்னும் தனக்குக் கிடைத்த அன்பை எப்படித் தக்க வைத்துக்கொள்வது என்பதைக் கற்றுக்கொண்டே இருக்கிறது.
சில படங்கள் வெறும் புராஜெக்ட்களாக இருப்பதில்லை, அவை ஒரு உணர்வாக, ஒரு பருவமாக, நமக்குள்ளே ஒரு அமைதியான மாற்றமாக மாறிவிடுகின்றன.

பைசன் எனக்கு அப்படித்தான். என் வாழ்நாள் முழுவதும் நான் போற்றும் வகையில் என்னைப் பாதித்த ஒரு படம். இந்த உலகத்தில் வாழ்வதற்கு நான் ஆசீர்வதிக்கப்பட்டவளாகவும், அதிர்ஷ்டசாலியாகவும் உணர்கிறேன்” எனப் பதிவிட்டிருந்தார்.
தற்போது, ஷூட்டிங்க் ஸ்பாட் வீடியோவை பகிர்ந்து, `` மாரி செல்வராஜ் சாரின் திரைப்பட உலகின் தொகுப்புக்கு வருக. பைசன் என் திரையுலக சினிமாவுக்கு அப்பாற்பட்டது என்று நான் சொன்னதற்கான காரணம் இதுதான்.
மண், மக்கள், ஒரு இடத்தின் ஆன்மா வழியிலான ஒரு பயணம் எனக்குள் ஏதோ ஒன்றை மாற்றியிருக்கிறது. ஒவ்வொரு நாளும் ஒரு பயிற்சிப் பட்டறை போல உணர்ந்தேன்.
கற்பது, கற்பதை திருத்துவது, கற்றுக்கொள்ளாமல் இருப்பது, கற்றுக்கொள்வதை தவிர்ப்பது என உண்மையை சுவாசிக்கும் கதைகளுக்கு மத்தியில் வாழ்ந்த நாள்கள் அவை.
சினிமாவை வாழ்க்கையாக உணரும் உங்கள் உலகின் ஒரு சிறிய பகுதியாக என்னை அனுமதித்ததற்கு நன்றி, மாரி சார்." என நெகிழ்வாகப் பதிவிட்டிருக்கிறார்.

















