செய்திகள் :

Boss Engira Bhaskaran Rerelease: சீட்டு குலுக்கிப் போட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஹீரோ; இது தெரியுமா?

post image

பலருக்கும் பேவரைட்டான திரைப்படங்கள் ரீரிலீஸ் செய்யப்படுவதுதான் தற்போதைய ட்ரெண்ட்! இப்படியான டிரெண்ட் பார்முலாவை தொடர்ந்து பல திரைப்படங்களும் தொடர்ந்து ரீரிலீஸ் செய்யப்பட்டு வருகின்றன.

கடந்த வாரமும் ரவி மோகனின் `எம். குமரன் சன் ஆப் மகாலட்சுமி', சிவகார்த்திகேயனின் `ரஜினி முருகன்' போன்ற திரைப்படங்கள் ரீரிலீஸ் செய்யப்பட்டன. இந்த வாரமும் இயக்குநர் ராஜேஷ் இயக்கத்தில், ஆர்யா, சந்தானம் நடிப்பில் கடந்த 2010-ம் ஆண்டு வெளியான `பாஸ் (எ) பாஸ்கரன்' திரைப்படம் ரீரிலீஸாகிறது.

Boss engira Baskaran Re Release

சந்தானத்தின் காமெடி, ஆர்யா - நயன்தாரா காம்போ எனப் படத்தில் பல ஹைலைட்டான விஷயங்கள் இருக்கிறது. இதனைத் தாண்டி படத்தைப் பற்றி பலரும் அறிந்திடாத ஒரு சுவாரசியமான தகவலை விகடன் பிரஸ் மீட்டில் நடிகர் ஜீவா பகிர்ந்திருந்தார். `சிவா மனசுல சக்தி' திரைப்படத்திற்குப் பிறகு ஜீவாவிடம் இயக்குநர் ராஜேஷ் மற்றுமொரு படம் இணைந்து பண்ணலாம் என முதலில் சொல்லியிருக்கிறார். அதன் பிறகு இப்படத்தில் கதாநாயகனாக நடிக்க வைப்பதற்குப் படத்தின் தயாரிப்பாளர் ஜீவாவின் பெயரையும் ஆர்யாவின் பெயரையும் சீட்டில் எழுதிக் குலுக்கி போட்டுப் பார்த்தாராம். அதில் ஆர்யாவின் பெயர் வந்ததால் இப்படத்தில் கதாநாயகனாக நடிப்பதற்கு ஆர்யாவின் பெயரை டிக் அடித்துவிட்டார்களாம்.

ஆர்யா பற்றி ஜீவா கூறுகையில், "இப்படியான சம்பவம் நடந்ததுன்னு எனக்குத் தெரிஞ்சதுக்குப் பிறகு ரெண்டு சீட்டுலையும் நம்ம பெயரை எழுதி போட்டிருக்கலாம்லனு சொன்னேன் (சிரித்துக் கொண்டே..). ஆனால், ஆர்யாவுக்கு இந்த மாதிரி ஒரு அழகான படம் அமைஞ்சதுல எனக்குச் சந்தோஷம்தான்'' என்றார்.

வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 |

Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 |

80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks

STR 49 Update: சந்தானத்தை கேட்ட இயக்குநர்; சிலம்பரசன் விதித்த நிபந்தனை; கதாநாயகி யார்?

சிலம்பரசனின் 'STR 49 ' படத்திற்கான ப்ரீ புரொடக்‌ஷன் வேலைகள் ஜரூராக நடந்து வருகின்றன. இந்த படத்தில் சிம்புவுடன் இன்னொரு ஹீரோவும் இணைகிறார். கல்லூரியின் பின்னணியில் நடக்கும் கதை இது என்பதால், படத்திற்கா... மேலும் பார்க்க

Parasakthi: இலங்கையில் SK ; பராசக்தி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறாரா பேசில் ஜோசப்?

சுதா கொங்கராவின் இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் 25-வது திரைப்படமாக `பராசக்தி' உருவாகி வருகிறது . இப்படத்தை `டான் பிக்சர்ஸ்' ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்து வருகிறார். சிவகார்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீல... மேலும் பார்க்க

Harris Jayaraj: ``இரு தரப்பு பாடகர்களுக்கு அவமதிப்பு நடக்குது'' - ஹாரிஸ் ஜெயராஜ்

ஹாரிஸ் ஜெயராஜின் கான்சர்ட் கடந்த சனிக்கிழமை கோவை இந்துஸ்தான் கல்லூரியில் நடைபெற்றது. ஹாரிஸ் ஜெயராஜின் எவர் க்ரீன் பாடல்கள் பலவும் இங்கு இசைக்கப்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்ல, `மக்காமிஷி ' பாடலுக்கு ஹார... மேலும் பார்க்க

Nayanthara: 7000 சதுர அடி; நயன்தாரா - விக்னேஷ் சிவன் தொடங்கிய பிரமாண்ட ஸ்டூடியோ

நயன்தாரா - விக்னேஷ் சிவன் இருவரும் சேர்ந்து புதிதாக ஸ்டூடியோ ஒன்றைத் தொடங்கி இருக்கின்றனர்.நயன்தாரா நடிப்பில் தற்போது 'டெஸ்ட்' படம் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தில் சித்தார்த், மாதவன... மேலும் பார்க்க

Bindhu Ghosh: பிரபல நகைச்சுவை நடிகை பிந்து கோஷ் காலமானார்

நடிகை பிந்து கோஷ் உடல்நலக் குறைவால் காலமாகி இருக்கிறார்.தமிழில் பல முன்னணி நட்சத்திரங்களுடன் பணியாற்றியவர், நடிகை பிந்து கோஷ். மனோரமா, கோவை சரளா போல காமெடியில் கலக்கிய இவர் டான்ஸராகவும் படங்களில் பணிய... மேலும் பார்க்க