Gold Rate: தங்கம் விலை ரூ.1 லட்சத்தைத் தொட இன்னும் `சில நூறுகளே' பாக்கி! - இன்றை...
அமித்ஷா சந்திப்பு: ``கூட்டணி குறித்து பேசவில்லை; இதற்கு தான் டெல்லி சென்றேன்'' -நயினார் நாகேந்திரன்
பாஜகவின் தேர்தல் முன்னெடுப்புகள் பரபரக்கத் தொடங்கிவிட்டன.
கடந்த ஜூலை மாதம் முதல் இதுவரை இந்திய பிரதமர் மோடி மூன்று முறை தமிழ்நாடு வந்துவிட்டார்.
கடந்த ஏப்ரல் மாதம் முதல் இதுவரை இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நான்கு முறை தமிழ்நாடு வந்திருக்கிறார். இன்று அவர் தமிழ்நாடு வரவிருக்கிறார்.
நேற்று முன்தினம் (டிசம்பர் 13, 2025), தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் டெல்லி சென்றிருந்தார். அந்தப் பயணத்தின் முக்கிய நோக்கமே, ‘அமித் ஷாவுடன் சந்திப்பு’.
இந்தச் சந்திப்பில் கூட்டணி குறித்து இருவரும் பேசுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

நயினார் நாகேந்திரன் பேச்சு
ஆனால், அமித் ஷா உடனான சந்திப்பு குறித்து நயினார் நாகேந்திரன்,
“மதிப்பிற்குரிய மாமன்னர் பெரும்பிடுகு முத்தரையர் தபால் தலை வெளியீட்டிற்காக வந்திருந்தேன்.
அமித் ஷாவை சந்தித்து பேசுவதற்காக நேரம் கேட்டிருந்தேன். அவருடைய நேரம் கிடைத்ததால் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினேன்.
தமிழ்நாட்டில் யாத்திரை எப்படி இருக்கிறது? அடுத்து என்ன செய்யப் போகிறேன்? போன்றவற்றைக் கேட்டார். அதற்கான விளக்கத்தை கொடுத்தேன்.
இந்தச் சந்திப்பில் நாங்கள் தொகுதி பங்கீடு குறித்தோ, கூட்டணி குறித்தோ எதுவும் பேசவில்லை.
ஜனவரி 9-ம் தேதி யாத்திரை முடிவதால், நீங்களோ, பிரதமரோ வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். அவர்கள் கண்டிப்பாக வருவதாக கூறியிருக்கிறார்" என்று கூறியுள்ளார்.












