அமித்ஷா சந்திப்பு: ``கூட்டணி குறித்து பேசவில்லை; இதற்கு தான் டெல்லி சென்றேன்'' -...
``முதல்வர் மருந்தகத்தில் போதிய மருந்துகள் இல்லை; அத்திட்டமே தோல்வி'' - அதிமுக டாக்டர் சரவணன்
அ.தி.மு.க. மருத்துவரணி மாநில இணைச் செயலாளர் டாக்டர் சரவணன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"கடந்த நான்கரை ஆண்டுகளில் திமுக ஆட்சியில் எந்த திட்டங்களையும் சரிவரக் கொண்டுவரவில்லை.
ஜெயலலிதா ஆட்சியிலும், எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியிலும் கொண்டுவரப்பட்ட திட்டங்களை திமுக அரசு முடக்கியது.

மடிக்கணினி திட்டம், தாலிக்குத் தங்கம், அம்மா குடிநீர், அம்மா உப்பு, அம்மா சிமெண்ட், குடிமராமத்து உட்பட அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட ஏராளாமன மக்கள் நலத்திட்டஙகள் அனைத்தையும் முடக்கினார்கள்.
எளிய மக்கள் பயனடையும் வகையில் தமிழகம் முழுவதும் செயல்பட்ட 700-க்கும் மேற்பட்ட அம்மா உணவகங்கள் படிப்படியாக மூடப்பட்டன. ஒவ்வொரு மாதமும் 25 லட்சம் மக்களுக்கு பயன்பட்ட இரண்டாயிரம் அம்மா மினி கிளினிக்குகளுக்கு மூடுவிழா நடத்தப்பட்டது.
மக்களைத்தேடி மருத்துவம் என்ற திட்டத்தின் மூலம் 2.50 கோடி மக்கள் பலனடைந்ததாக ஸ்டாலின் தம்பட்டம் அடித்து வருகிறார். ஒரு பயனாளிக்கு மருந்து கொடுத்துவிட்டு, அதை மூன்று பேருக்கு கொடுத்ததாக கணக்குக் காண்பிக்கிறார்கள்.
ஏற்கெனவே தமிழகம் முழுவதும் அம்மா மருந்தகங்கள் செயல்பட்டு வந்ததை முடக்கும் வகையில் கடந்த பிப்ரவரியில் முதல்வர் மருந்தகம் என்ற திட்டத்தை கொண்டு வந்தனர். அதில் 500 மருந்தகங்கள் கூட்டுறவு சங்கங்கள் மூலமும், 500 மருந்தகங்கள் தொழில் முனைவோர் மூலமும் தொடங்கப்பட்டன. அந்த மருந்தகங்களில் மருந்து வாங்கினால் ஏகப்பட்ட சலுகைகள் கிடைக்கும் என்று அறிவித்தனர்.

ஆனால் தற்போது முதல்வர் மருந்தகங்களில் போதிய மருந்துகள் இல்லை, விலையும் முறையாக இல்லாமல் உள்ளது என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகிறார்கள். தற்போது விற்பனை குறைந்து, அந்தத் திட்டமே தோல்வியில் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எதற்கெடுத்தாலும் திராவிட மாடல் அரசு சாதனை என்று கூறும் ஸ்டாலின், இன்றைக்கு தமிழகத்தையே கடன்கார மாநிலமாக உருவாக்கி உள்ளார்; இதையெல்லாம் சாதனை என்று சொல்வாரா?
கடந்த சட்டமன்றத் தேர்தலில் 525 வாக்குறுதிகளை அளித்த ஸ்டாலின், அதில் 10 சதவிகிதத்தை மட்டுமே நிறைவேற்றி, 100 சதவிகிதம் நிறைவேற்றிவிட்டதாக வாய் கூசாமல் பொய் சொல்கிறார். வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தமிழக மக்கள் சரியான பாடத்தை புகட்டி, எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக ஆக்குவார்கள் என்றார்.












