விஜய்க்கு எதிராக யாரை நிறுத்துவது? - தி.மு.க முகாமில் நடக்கும் டிஸ்கஷன்!
Dhurandhar 2: "தென்னிந்திய ஆக்ஷன் திரைப்படங்கள் இன்னும் பழைய பாணியில்.!" - ராம் கோபால் வர்மா
பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடிப்பில் உருவாகியுள்ள 'துரந்தர் 2: தி ரிவெஞ்ச்' (Dhurandhar 2: The Revenge) திரைப்படம் வசூலில் புதிய சாதனைகளைப் படைத்து, தென்னிந்தியத் திரைப்படங்களின் ஆதிக்கத்தை மாற்றியமைக்கும் என பிரபல இயக்குநர் ராம் கோபால் வர்மா தெரிவித்துள்ளார்.

'துரந்தர்' திரைப்படம் பற்றி அவர், "சென்ற ஆண்டு டிசம்பரில் வெளியான 'துரந்தர்' முதல் பாகம் உலகளவில் சுமார் 1,300 கோடி ரூபாய் வசூலித்து மாபெரும் வெற்றி பெற்றது.
அதன் தொடர்ச்சியாக தற்போது வெளியாகவுள்ள இரண்டாம் பாகம் 1,500 முதல் 2,000 கோடி ரூபாய் வரை வசூல் செய்தால், அது தென்னிந்திய ஆக்ஷன் படங்களின் தற்போதைய நிலையைத் தலைகீழாக மாற்றும்.
தென்னிந்திய ஆக்ஷன் திரைப்படங்கள் இன்னும் பழைய பாணியிலான மிகைப்படுத்தப்பட்ட சண்டைக் காட்சிகளையே நம்பியுள்ள நிலையில், 'துரந்தர்' திரைப்படம் யதார்த்தமான, உக்கிரமான ஆக்ஷன் காட்சிகளை முன்னிறுத்துகிறது.
இப்படத்தின் இரண்டு பாகங்களும் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டதால், கதை 'பாகுபலி' படத்தைப் போல ஒரு தொடர்ச்சியான ஓட்டத்தைக் கொண்டிருக்கும்" எனக் கூறியிருக்கிறார்.

ஆதித்யா தர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த ஸ்பை த்ரில்லர் திரைப்படத்தில், ரன்வீர் சிங் பாகிஸ்தானில் இருக்கும் இந்திய உளவாளி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
இப்படத்தில் மாதவன், அர்ஜுன் ராம்பால், சஞ்சய் தத், ராகேஷ் பேடி மற்றும் சாரா அர்ஜுன் என பலரும் நடித்துள்ளனர். மார்ச் 19 அன்று இதனுடன் வெளிவரவிருந்த 'டாக்ஸிக்' படமும் தள்ளிப்போயிருப்பதால் 'துரந்தர்' இரண்டாம் பாகம் வசூலில் சாதனை படைக்க அதிக வாய்ப்பிருப்பதாக பாலிவுட் வட்டாரங்கள் கணிக்கின்றன.


















