செய்திகள் :

Doctor Vikatan: அதிகப்படியான bleeding... பொட்டுக்கடலை சாப்பிட்டால் உடனே நிற்குமா?

post image

Doctor Vikatan: பொட்டுக்கடலை சாப்பிட்டால்  அதீத ரத்தப்போக்கு (excessive bleeding) கட்டுப்படுமா... அதிகப்படியான ப்ளீடிங்கை குறைக்க இயற்கை வழிகள் சொல்லவும்.

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த சித்த மருத்துவர் 'மூலிகைமணி' அபிராமி. 

சித்த மருத்துவர் அபிராமி
சித்த மருத்துவர் அபிராமி

உங்கள் கேள்விக்கான பதிலைத் தெரிந்துகொள்வதற்கு முன், உங்களுக்கு அதிகப்படியான ப்ளீடிங் இருப்பதற்கான காரணத்தை முதலில் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது.  ஹார்மோன் குறைபாடுகள், கருப்பையில் உள்ள பிரச்னைகள் (Fibroids), அல்லது தைராய்டு கோளாறுகள் போன்ற காரணங்களைக் கண்டறிந்து அதற்கு ஏற்ற சிகிச்சை மற்றும் உணவுமுறைகளைப் பின்பற்ற வேண்டியது அவசியம்.

உணவின் மூலமும் இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காணலாம். பொட்டுக்கடலை அதிகப்படியான ரத்தப்போக்கைக் கட்டுப்படுத்த பெரிதும் உதவுகிறது. ஆனால், அது ஒரேயடியாக ப்ளீடிங்கை நிறுத்தாது. சிலருக்கு அடிக்கடி நாப்கின் மாற்றும் அளவுக்கு ப்ளீடிங் இருக்கும். சிலருக்கு கட்டிகளாக ரத்தம் வெளியேறும். அவர்களுக்கு இது உதவும்.
ஒன்று அல்லது இரண்டு டேபிள்ஸ்பூன் அளவுக்கு பொட்டுக்கடலையை மிக்ஸியில் பொடி செய்து கொள்ளவும். அதனுடன் தயிர் அல்லது தண்ணீர் சேர்த்து லஸ்ஸிபோல அடித்துப் பருகலாம். வேலைக்குச் செல்பவர்கள் இந்தப் பொடியைச் செய்து வைத்துக்கொண்டு, அவ்வப்போது வெறும் வாயில் போட்டுச் சாப்பிட்டு வரலாம். இது அதிகப்படியான ரத்தப்போக்கைக் கட்டுப்படுத்தும்.

வாழைப்பூ

அதிகப்படியான ரத்தப் போக்கை தமிழில் 'பெரும்பாடு' என்றும் சொல்வார்கள்.  அந்தப் பிரச்னைக்கு வாழைப்பூ மிகச் சிறந்த மருந்தாகும். அதிகப்படியான ரத்தம் வெளியேறுவதால் ஏற்படும் களைப்பையும் இது போக்கும். வாழைப்பூவின் மேல் தோலை நீக்கிவிட்டு, உள்ளே இருக்கும் பூக்களில் உள்ள கசப்புத் தன்மையுள்ள நரம்புகளை நீக்கிவிடவும். ஒரு கைப்பிடி அளவு பூவை மிக்ஸியில் அரைத்து, சுமார் 30 மில்லி  சாறு எடுக்கவும். மாதவிடாய் தொடங்கிய முதல் நாளிலிருந்தே இதைக் குடிக்கத் தொடங்கினால், 3 முதல் 4 நாள்களுக்குள் ரத்தப்போக்கு கட்டுப்படும்.

பீரியட்ஸ்  நின்ற பிறகும், அடுத்த 2-3 வாரங்களுக்கு வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை இதைக் குடித்து வரலாம். இது கருப்பையைச் சுருங்கச் செய்ய உதவும். மெனோபாஸ் மற்றும் பெரிமெனோபாஸ் எனப்படும் மெனோபாஸுக்கு முந்தைய கட்டத்தில் இருப்போருக்கும் இது மிகச் சிறந்த மருந்தாக வேலை செய்யும்.

ஐந்து இதழ்கள் கொண்ட நாட்டுச் செம்பரத்தம் பூவும் இந்த நோய்க்கு மிகச்சிறந்த மருந்து. ஐந்து செம்பரத்தம் பூக்களின் இதழ்களை மட்டும் எடுத்து (காம்பு மற்றும் மகரந்தம் நீக்கி), தண்ணீரில் போட்டு, கொதிக்க வைத்து கஷாயமாகத் தயாரிக்கவும். இந்த இளஞ்சிவப்பு நிற கஷாயத்தை, தொடர்ந்து 48 நாள்கள் குடித்து வந்தால், அதிகப்படியான ரத்தப்போக்கு முழுமையாகச் சரியாகும்.

பீரியட்ஸ் ரத்தம்

ஆடாதொடை இலைகளும் இந்தப் பிரச்னைக்கான முக்கிய மருந்து.  3 முதல் 5 ஆடாதொடை இலைகளை நறுக்கி மிக்ஸியில் அரைத்து சாறு எடுக்கவும். தினமும் 30 மில்லி சாற்றை இரண்டு வேளை வீதம் 5 நாள்களுக்கோ அல்லது ரத்தப்போக்கு நிற்கும் வரையிலோ குடிக்கலாம்.
சாறாக எடுக்க முடியாவிட்டால், இலைகளை விழுதாக அரைத்து ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு எடுத்து காலை, மாலை இருவேளையும் சாப்பிட்டு வரலாம்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.   

Doctor Vikatan: இளவயதில் அடிக்கடி ஸ்ட்ரெஸ்; பிற்காலத்தில் மறதிக்கு வழிவகுக்குமா?

Doctor Vikatan: இன்று வாழ்க்கையில் யாருக்குமேஸ்ட்ரெஸ் என்பது தவிர்க்க முடியாத விஷயமாகஇருக்கிறது. 50 வயதுக்கு முன் அடிக்கடி ஸ்ட்ரெஸ்ஸுக்கு உள்ளாகிறவர்களுக்கு, பிற்காலத்தில் மறதி, மூளையின் செயல்திறன் கு... மேலும் பார்க்க

இளம்பெண்களிடையே டிரெண்ட் ஆகும் 'Gel Nails'; பயன்படுத்தலாமா? சூப்பர் டிப்ஸ் இதோ!

ஃபேஷன் மற்றும் அழகு காரணங்களுக்காக இளம்பெண்களிடையே சமீபத்தில் டிரெண்டு ஆகி வருகிறது, 'ஜெல் நகங்கள்'. இந்த ஜெல் நகங்களைப் பயன்படுத்தலாமா... கூடாதா என்பதை விளக்குகிறார் சரும நோய் மற்றும் அழகுக்கலை நிபுண... மேலும் பார்க்க

Workout செய்ய நினைச்சாலே ஸ்ட்ரெஸ் ஆகுதா? இருக்கவே இருக்கு சிம்பிள் டெக்னிக்ஸ்!

பலருக்கும் உடற்பயிற்சி செய்து உடலை ஃபிட்டாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கும். அந்த ஆர்வம் அதை செயல்படுத்துவதில் காணாமல் போய்விடும். இதனால்தான் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் நிறைந்து வழியும் ஜிம... மேலும் பார்க்க

Doctor Vikatan: Flax Seeds எனப்படும் ஆளி விதை; அப்படியே சாப்பிடுவது சரியானதா?

Doctor Vikatan: என்னுடைய தோழி ஃபிளாக்ஸ் சீட்ஸ் எனப்படும் ஆளி விதைகளைப்பொடித்துவைத்துக்கொண்டு தினமும் சமையலில் சேர்ப்பதாகச்சொல்கிறாள்.ஆனால், ஆளி விதைகளைஅப்படியே சாப்பிடுவதாகநிறைய பேர் சொல்லிக் கேட்டிரு... மேலும் பார்க்க

'உங்கள் உடல் steady-ஆக இருக்கிறதா?' தெரிந்துகொள்ள ஒற்றைக்காலில் நில்லுங்கள்! |#Flamingo balance test

சமூக வலைதளங்களில் கடந்த சில நாள்களாக டிரெண்டாகி வருகிறது 'ஃபிளமிங்கோ பேலன்ஸ் டெஸ்ட்' (Flamingo balance test).வாழ்க்கையில் எத்தனையோ விஷயங்களுக்கு ஒற்றைக்காலில் நின்றிருப்பீர்கள், வென்றிருப்பீர்கள். உங்... மேலும் பார்க்க

Doctor Vikatan: சோஷியல் மீடியாவில் டிரெண்டாகும் peel-off மாஸ்க்... இளமைத் தோற்றம் தருமா?

Doctor Vikatan: சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வரும் பீல்-ஆஃப் (Peel-off) மாஸ்க்குகள் உண்மையில் பயனுள்ளவையா... அவற்றை இரவு முழுவதும் முகத்திலேயே வைத்திருப்பது பாதுகாப்பானதா... மேலும், அவை 'கிளாஸ் ஸ்கின்... மேலும் பார்க்க