செய்திகள் :

Doctor Vikatan: சோஷியல் மீடியாவில் டிரெண்டாகும் peel-off மாஸ்க்... இளமைத் தோற்றம் தருமா?

post image

Doctor Vikatan:  சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வரும் பீல்-ஆஃப்  (Peel-off) மாஸ்க்குகள் உண்மையில் பயனுள்ளவையா... அவற்றை இரவு முழுவதும் முகத்திலேயே வைத்திருப்பது பாதுகாப்பானதா... மேலும், அவை 'கிளாஸ் ஸ்கின்' (glass skin) மற்றும் இளமையான தோற்றத்தைத் தரும் என்பதும் உண்மையா?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சருமநல மருத்துவர் பூர்ணிமா

சருமநல மருத்துவர் பூர்ணிமா
சருமநல மருத்துவர் பூர்ணிமா

பீல்-ஆஃப் (Peel-off) மாஸ்க் பயன்படுத்தும்போது, தற்காலிகமாக நல்ல பலனைத் தருவது போலத் தோன்றலாம். ஆனால், உரித்து எடுக்கும் தன்மை கொண்ட அத்தகைய மாஸ்க்கை அடிக்கடி பயன்படுத்தினாலோ அல்லது இரவு முழுவதும் முகத்தில் அப்படியே வைத்திருந்தாலோ அது உங்கள் சருமத்தின் பாதுகாப்பு அடுக்கை (skin barrier) சேதப்படுத்தும் அபாயம் உள்ளது. 

இளமையான தோற்றத்தைப் பெற பீல் ஆஃப் மாஸ்க்குக்கு (Peel-off masks) பதில், தரமான 'ஓவர்நைட் ஸ்லீப்பிங் மாஸ்க்குகளை' (sleeping masks) தேர்ந்தெடுங்கள். கூடவே, சருமம் வறண்டு போகாமல் போதுமான நீர்ச்சத்துடன் (hydration) வைத்திருப்பது, சூரிய ஒளியிலிருந்து பாதுகாக்க சன் ஸ்கிரின் உபயோகிப்பது ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். உங்களுடையது சென்சிட்டிவ் சருமமாக  (sensitive skin) இருந்தாலோ, ரோசாசியா (rosacea), எக்ஸீமா (eczema), முகப்பரு பிரச்னைகள் இருந்தாலோ, பீல்-ஆஃப் மாஸ்க்குகளைத் தவிர்ப்பதுதான் பாதுகாப்பானது.

சருமம் இளமையாக, ஆரோக்கியமாக இருக்க, முறையான சருமப் பராமரிப்பு வழிகளைப் பின்பற்றுங்கள். முகத்தை கிளென்ஸ் செய்வது, வாரம் ஒருமுறை, இறந்த செல்களை அகற்றும் எக்ஸ்ஃபோலியேஷன் சிகிச்சை, சருமத்தின் ஈரப்பதத்தைத் தக்கவைக்கும் சீரம் உபயோகிப்பது,  சருமத்தின் பாதுகாப்பு லேயர்களை சரிசெய்யும் செராமைடு உபயோகிப்பது போன்றவை முக்கியம்.

கிளாஸ் ஸ்கின்...

கிளாஸ் ஸ்கின் (Glass skin) என்பது எதார்த்தத்தில் சாத்தியமில்லாத ஒன்று. ஆனால், மேற்குறிப்பிட்ட விஷயங்களைப் பின்பற்றினால் ஆரோக்கியமான சருமம் (healthy skin)  நிச்சயம் கிடைக்கும்.

இரவு நேரத்தில் பீல்ஆஃப் அல்லாத (non-peel), ஜெல் அல்லது க்ரீம் வடிவிலான ஸ்லீப்பிங் மாஸ்க்  பயன்படுத்தவும். குறிப்பாக ஹைலுரானிக் அமிலம் (hyaluronic acid), கிளிசரின் (glycerin), செராமைடுகள் (ceramides) மற்றும் நியாசினமைடு (niacinamide) கலந்த மாஸ்க்  சிறந்தது.

புருவங்கள், கண் இமைப் பகுதி, முகப்பரு உள்ள இடங்கள், வெயிலினால் சிவந்த இடங்களில் எல்லாம் பீல்-ஆஃப் (peel-off) மாஸ்க்  பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். இது சருமத்தில் எரிச்சலை உண்டாக்கும். எந்தவொரு புதிய மாஸ்க்கைப் பயன்படுத்துவதற்கு முன்பும், அதை உங்கள் முன்கையின் உட்பகுதியிலோ அல்லது காதுக்கு பின்னாலோ தடவி 'பேட்ச் டெஸ்ட்' (patch test) செய்து பார்த்து, எந்த அலர்ஜியும் இல்லாததை உறுதிசெய்த பிறகே பயன்படுத்தவும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    

`பறவைக் காய்ச்சல் பரவுதே, இறைச்சி, முட்டை, பால் சாப்பிடலாமா?' பயமா இருக்கா? | Q&A

தமிழ்நாட்டில் இப்போது பெரிய அலாரமாக இருக்கிறது 'பறவைக் காய்ச்சல்'. இதனால், 'சிக்கன் சாப்பிடக் கூடாது..', 'பால், முட்டை மூலமும் பறவைக் காய்ச்சல் பரவலாம்' போன்ற செய்திகள் மக்களிடையே இருந்து வருகிறது. மக... மேலும் பார்க்க

Doctor Vikatan: சூயிங்கம் மெல்வதால் ஸ்ட்ரெஸ் குறையும் என்பது உண்மையா?

Doctor Vikatan: எனக்கு கடந்த சில மாதங்களாக சூயிங்கம் மெல்லும் பழக்கம் ஆரம்பித்திருக்கிறது. தினமும் ஒன்றிரண்டு மெல்கிறேன். இப்படி தினமும் சூயிங்கம் மெல்வது ஒரு கட்டத்தில் அடிக்ஷனாக மாறும் என்றும், அதை ... மேலும் பார்க்க

Doctor Vikatan: உடலில் பல இடங்களிலும் வலி... கெட்ட கொழுப்பு அதிகமானதன் அறிகுறி என்பது உண்மையா?

Doctor Vikatan: எனக்கு கடந்த சில மாதங்களாக உடல் வலி இருக்கிறது. கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமானால், இப்படித்தான் உடலின் பல பகுதிகளிலும் வலி வரும் என்று கேள்விப்பட்டேன். அதுஉண்மையா... கெட்ட கொலஸ்ட்ரால் அதிகர... மேலும் பார்க்க

Doctor Vikatan: காலை உணவைத் தவிர்த்தால் ஆரோக்கியம் பாதிக்கப்படுமா?

Doctor Vikatan: காலை உணவு சாப்பிட வேண்டியது மிகமிக அவசியம் என்று முன்பெல்லாம் வலியுறுத்தப்பட்டது. இப்போது சிலர், அப்படியெல்லாம்இல்லை, காலை உணவைத் தவிர்த்தாலும் பிரச்னையில்லை என்று சொல்கிறார்கள். பசித்... மேலும் பார்க்க

சென்னையில் பறவைக் காய்ச்சல்: `சிக்கன் பிரியர்களே உஷார்' - எது பாதுகாப்பு? மருத்துவர் விளக்கம்

சென்னை அடையார், காந்தி நகர், பள்ளிக்கரணை, வேளச்சேரி, திருவான்மியூர், இ.சி.ஆர் சாலை மற்றும் ஓ.எம்.ஆர் சாலை உள்ளிட்ட இடங்களில் அடுத்தடுத்து காகங்கள் தொடர்ந்து உயிரிழந்தன. இதனையடுத்து உயிரிழந்த காகங்களின... மேலும் பார்க்க

தமிழகத்தில் 1 லட்சத்தை தாண்டிய புற்றுநோய் பாதிப்பு; காரணமென்ன? தடுக்க என்ன வழி? மருத்துவர் விளக்கம்

மத்திய சுகாதாரத்துறை மற்றும் குடும்ப நல அமைச்சகம் நாடாளுமன்றத்தில் புற்றுநோய் தொடர்பாக அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்திருக்கிறது.அந்த அறிக்கையின்படி, 2025 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் புதிதாக புற்றுநோயால் பா... மேலும் பார்க்க