செய்திகள் :

Doctor Vikatan: ஆஸ்துமா மற்றும் சைனஸ் பிரச்னைகளை குணப்படுத்துமா Salt therapy?

post image

Doctor Vikatan: சால்ட் தெரபி (Salt therapy) என்ற ஒன்று ஆஸ்துமா மற்றும் சைனஸ் பிரச்னைகளை குணப்படுத்தும் என்று சமீபத்தில் ஒரு செய்தியில் படித்தேன். அது என்ன சால்ட் தெரபி... அது உண்மையிலேயே ஆஸ்துமா பாதிப்பிலிருந்து நிவாரணம் தருமா?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த நுரையீரல் சிகிச்சை சிறப்பு மருத்துவர் திருப்பதி.

நுரையீரல் மருத்துவர் திருப்பதி

சால்ட் தெரபி  (Salt therapy)  என நீங்கள் கேட்டிருப்பது உப்புத் தண்ணீரில் வாய்க் கொப்பளிப்பது பற்றியதா அல்லது வேறு ஏதேனுமா என்பது தெளிவாக இல்லை. உப்புத் தண்ணீரில் வாய்க் கொப்பளித்தால் சளி, இருமல் மட்டுப்படும், சரியாகி விடும் என்ற நம்பிக்கையும்  அறிவியல்ரீதியாக நிரூபிக்கப்படவில்லை.

இன்னும் சொல்லப்போனால், தொண்டை வலியுடன் மருத்துவர்களை அணுகுபவர்களுக்குக்கூட  நாங்கள் உப்புத் தண்ணீரில் வாய்க் கொப்பளிப்பதை அறிவுறுத்துவதில்லை. ஏனெனில், ஏற்கெனவே  உப்பானது,  மியூகோசா (Mucosa) எனப்படும் சளிச்சவ்வை எரிச்சலடையச் செய்யலாம். அதற்கு பதில் உப்பு சேர்க்காத, வெதுவெதுப்பான நீரில் வாய்க் கொப்பளித்து, துப்பிவிடுவது சிறந்தது. மிக முக்கியமாக, உடலில் நீர்ச்சத்து குறையாதபடி, தொண்டைப்பகுதி வறண்டு போகாதபடி நிறைய தண்ணீர் குடிப்பது அவசியம். வெதுவெதுப்பான சூட்டில் ஏதேனும் திரவமாக அடிக்கடி குடித்துக்கொண்டே இருக்கலாம்.

ஆஸ்துமாவுக்கு இன்றுவரை நிரூபிக்கப்பட்ட சிறந்த சிகிச்சை என்றால் இன்ஹேலர் மருந்துகள்தான். அதற்கு மாற்று என்பதே கிடையாது.

ஆஸ்துமாவுக்கு இன்றுவரை  நிரூபிக்கப்பட்ட சிறந்த சிகிச்சை என்றால் இன்ஹேலர் மருந்துகள்தான்.  அதற்கு மாற்று என்பதே கிடையாது. மருத்துவ ஆலோசனையோடு கார்டிகோ ஸ்டீராய்டு மருந்துகளை இன்ஹேலர் வழியே எடுத்துக்கொள்வதுதான் பலன் தரும். காற்றுக்குழாய்களை விரிவடையச் செய்கிற  பிராங்கோடைலேட்டர் உள்ளிட்ட மருந்துகளையும் மருத்துவர் பரிந்துரைப்பார். இதுதான் தீர்வு என்பது தெரியாமல், பலரும் தவறானதும் பலனற்றதுமான பல சிகிச்சைகளைப் பின்பற்றி, ஆஸ்துமா குணமாகாமல் போராடுகிறார்கள்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    

கர்ப்பிணிகள் Paracetamol சாப்பிட்டால் குழந்தைகளின் மனநலம் பாதிக்குமா? - ஆய்வு முடிவுகள் சொல்வதென்ன?

'கர்ப்பமான பெண்கள் பாராசிட்டமால் சாப்பிடுவது நல்லதல்ல. அவர்கள் அந்த மாத்திரையை எடுத்துக்கொண்டால் குழந்தைகளுக்கு ADHD, ஆட்டிசம் போன்ற நோய்கள் ஏற்படுகிறது' என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முன்பு கூறியிருந... மேலும் பார்க்க

Doctor Vikatan: மெனோபாஸுக்கு பிறகு திடீர் ப்ளீடிங்... புற்றுநோய் பரிசோதனை தேவையா?

Doctor Vikatan: என் வயது 55. மாதவிடாய் நின்று 4 வருடங்கள் ஆகின்றன. இந்நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு எனக்கு திடீரென ப்ளீடிங் ஆனது. மாதவிடாய் நின்றுபோன பிறகு இப்படி ப்ளீடிங் ஆனால், அது புற்றுநோயா... மேலும் பார்க்க

Doctor Vikatan: சங்குப்பூ சேர்த்துத் தயாரிக்கப்படும் அழகு சாதனங்கள்; உண்மையிலேயே பலன் தருமா?

Doctor Vikatan: சங்குப்பூவை வைத்து சமீப காலமாக நிறைய அழகு சாதனப் பொருள்கள் தயாரிப்பதைக் கேள்விப்படுகிறோம். சங்குப்பூ என்பது சருமத்துக்கு உண்மையிலேயே நல்லதா? அதை எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்?பதில் சொல்க... மேலும் பார்க்க

Doctor Vikatan: கர்ப்பப்பையின் வாய்ப்பகுதி பலவீனமாகி கருச்சிதைவு ஏற்பட வாய்ப்பு உண்டா?

Doctor Vikatan:கர்ப்ப காலத்தில் கர்ப்பப்பையின் வாய்ப் பகுதி பலவீனமாக வாய்ப்பு உண்டா? அப்படி கர்ப்பப்பை வாய் பலவீனமாக இருந்தால், தையல் (Cervical Stitch) போடுவது எப்போது அவசியம்...இது குழந்தையை பாதிக்கு... மேலும் பார்க்க

Doctor Vikatan: மரவள்ளிக் கிழங்கு சாப்பிட்டால், கை,கால் குடைச்சல் வருமா?

Doctor Vikatan:மரவள்ளிக்கிழங்கை எல்லோரும் சாப்பிடலாமா... சர்க்கரைநோய் உள்ளவர்கள் சாப்பிடலாமா? கை, கால் குடைச்சல் வருமா?பதில் சொல்கிறார் கள்ளக்குறிச்சியைச்சேர்ந்த அரசு சித்த மருத்துவர்ராஜம்சித்த மருத்த... மேலும் பார்க்க

`விரதம் இருந்தா கேன்சர் செல் செத்துப் போயிடும்'- அண்ணாமலையின் கருத்துகள் உண்மையா?

"கேன்சர் செல்களுக்கு சாதாரண செல்களைவிட 7 மடங்கு அதிக எனர்ஜி வேண்டும். அந்த எனர்ஜியை குறைச்சுட்டா கேன்சர் செல் செத்துப்போயிடும். வாரத்துல ஒருநாள் சாப்பிடாதீங்க. ஆட்டோமெட்டிக்கா உடம்புல இருக்கிற கேன்சர்... மேலும் பார்க்க