ரெண்டு பேரும் சம்பாதிக்கிறீங்க சரி... ஆனா பணம் எங்க பாஸ்? தம்பதிகளே கவனியுங்க!
Doctor Vikatan: கணவருக்கு நீரிழிவு... பிறவிக் குறைபாடுகளுடன் குழந்தை பிறக்கும் ஆபத்து உண்டா?
Doctor Vikatan: என் கணவருக்கு கடந்த 4 வருடங்களாக சர்க்கரைநோய் இருக்கிறது. இந்நிலையில் நான் கர்ப்பமாக இருக்கிறேன். நீரிழிவு மருந்துகள் எடுத்துக்கொள்ளும் ஆணின் உயிரணுக்கள் ஆரோக்கியமாக இருக்காது என்று சொல்கிறார்களே... அது உண்மையா.... அதனால் குழந்தை பிறவிக்குறைபாடுகளுடன் பிறக்குமா?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த நீரிழிவு மருத்துவர் சஃபி
நீரிழிவுக்கு எடுத்துக்கொள்ளும் மருந்துகளைவிட மிக மிக ஆபத்தானது நீரிழிவு நோய். உலகம் முழுவதும் இன்று நாம் எதிர்கொள்ளும் மிக முக்கியமான, மோசமான நோய்களில் ஒன்று நீரிழிவு.
நீரிழிவு நோய் என்பது தலை முதல் கால் வரை உடலின் அனைத்து உறுப்புகளையும் பாதிக்கக்கூடியது. ரத்தச் சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்காதவர்களுக்கு நீரிழிவு நோயின் அடுத்தடுத்த நகர்வு மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும்.
இன்னும் சொல்லப்போனால் நீரிழிவு நோய் பாதிப்பால்தான் பெரும்பாலான ஆண்களுக்கு விந்தணுக் குறைபாடுகள் வருகின்றன. விந்தணுக்களின் அடர்த்தி குறைவது, அவற்றிலுள்ள உயிரணுக்களின் எண்ணிக்கை குறைவது, அவற்றின் நகரும் தன்மை பாதிக்கப்படுவது என பல பிரச்னைகளுக்கும் காரணம் நீரிழிவு நோய்.

20-25 வருடங்களாக நீரிழிவு நோய் இருந்து, அதுவும் கட்டுப்பாடற்று இருந்து, அதற்காக வருடக் கணக்கில் மருந்துகள் எடுத்துக்கொள்வோரில் மிக மிக அரிதாக ஒன்றிரண்டு பேருக்கு வேண்டுமானால் இப்படிப்பட்ட பிரச்னைகள் வரலாமே தவிர எல்லோருக்கும் வராது. இதைத்தான் உங்கள் மனைவி குறிப்பிட்ட லேட்டஸ்ட் ஆய்வும் குறிப்பிடுகிறது.
எனவே, நீரிழிவு நோய்தான் பிரச்னைக்குரியதே தவிர்த்து அதற்கு எடுத்துக்கொள்ளும் மருந்துகள் பிறக்கும் குழந்தைக்கு பாதிப்புகளைத் தராது. உங்களுக்கு ஆரோக்கியமான குழந்தையே பிறக்கும். கவலை வேண்டாம். உங்கள் கணவர் முறையாக மருந்துகளை எடுத்துக்கொள்வதை மட்டும் உறுதி செய்யுங்கள்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


















