செய்திகள் :

Doctor Vikatan: சூயிங்கம் மெல்வதால் ஸ்ட்ரெஸ் குறையும் என்பது உண்மையா?

post image

Doctor Vikatan: எனக்கு கடந்த சில மாதங்களாக சூயிங்கம் மெல்லும் பழக்கம் ஆரம்பித்திருக்கிறது. தினமும் ஒன்றிரண்டு மெல்கிறேன். இப்படி தினமும் சூயிங்கம் மெல்வது ஒரு கட்டத்தில் அடிக்ஷனாக மாறும் என்றும், அதை விழுங்கிவிட்டால் ஆபத்து என்றும் சிலர் சொல்கிறார்கள். அதே சமயம், சூயிங்கம் மெல்வதால் பதற்றம் குறையும், ஸ்ட்ரெஸ் குறையும் என்றும் சிலர் சொல்கிறார்கள். இதில் எது உண்மை?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இன்டர்னல் மெடிசின் எக்ஸ்பெர்ட் டாக்டர் ஸ்பூர்த்தி அருண்

டாக்டர் ஸ்பூர்த்தி அருண்
டாக்டர் ஸ்பூர்த்தி அருண்

சூயிங்கம் மெல்வதில் சில நன்மைகள் உள்ளன என்பதைத் தவிர்க்க முடியாது. ஆனால், நாம் எந்த வகையான சூயிங்கத்தைத் தேர்ந்தெடுக்கிறோம் என்பது மிக முக்கியம். சூயிங்கம் தயாரிப்பில் முக்கியமானது 'கம் பேஸ்' (Gum base) எனப்படும் ரப்பர் போன்ற பொருள்.

இது இயற்கையான அல்லது செயற்கையான பொருள்களிலிருந்து தயாரிக்கப்படுகிறது. சூயிங்கமில் பசை, ரெசின், கால்சியம் கார்பனேட் போன்ற நிரப்பிகள், ப்ரிசர்வேட்டிவ், பாரஃபின் அல்லது தாவர எண்ணெய், இனிப்புச்சுவைக்காக சர்க்கரை அல்லது கார்ன் சிரப், ஸைலிட்டால் (Xylitol) அல்லது செயற்கை இனிப்பூட்டிகள், நிறமிகள், மணமூட்டிகள், ஃபில்லர்ஸ் (fillers) போன்றவைச் சேர்க்கப்படும்.

எதையும் அளவுக்கு அதிகமாகச் செய்வது பாதிப்பை ஏற்படுத்தும். சர்க்கரை, அதிகப்படியான நிறமிகள் மற்றும் வேதிப்பொருள்கள் கலந்த சூயிங்கம்களை மெல்வதைத் தவிர்க்க வேண்டும்.  

சூயிங்கமில் சேர்க்கப்படும் பதப்படுத்தும் பொருள்களால் வயிற்றுப்போக்கு (laxative effect) போன்ற பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளன. தொடர்ந்து அல்லது அதிக நேரம் மெல்வதால் சிலருக்குத் தாடை வலியும் அதன் விளைவாக ஒற்றைத் தலைவலியும் ஏற்படலாம்.

மாணவர்கள் படித்துக் கொண்டிருக்கும்போது தூக்கம் வருவது போல் உணர்ந்தால், சூயிங்கம் மெல்வதன் மூலம் சிறிது நேரத்திற்குத் தங்களைப் புத்துணர்ச்சியாகவும் விழிப்பாகவும் வைத்துக்கொள்ளவும் முடியும்.

சூயிங்கம் மெல்வதால் உமிழ்நீர் சுரப்பு அதிகரிக்கிறது. இது ஈறுகள் மற்றும் பற்களின் ஆரோக்கியத்தைப் பராமரிக்கவும், பற்சிதைவைத் தடுக்கவும் உதவுவதாகச் சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சூயிங்கம் மெல்லுவது சிலருக்குப் பதற்றம் மற்றும் ஸ்ட்ரெஸ்ஸைக் குறைக்க உதவலாம்.

சூயிங்கத்தில் சேர்க்கப்படுகிற பசையை நம் உடலால் செரிக்க முடியாது.

சூயிங்கமை மென்று துப்பிவிட வேண்டும் என்றாலும், தற்செயலாக சிலர் அதை விழுங்கிவிடவும் வாய்ப்பு உண்டு. அப்படி விழுங்கிவிட்டாலும் அது குறித்து பயப்படத் தேவையில்லை. சூயிங்கத்தில் சேர்க்கப்படுகிற பசையை நம் உடலால் செரிக்க முடியாது. ஆனாலும், உடலுக்குள் செல்கிற அந்நியப் பொருள்கள், மலம் வழியே வெளியேறுவது போல 40 மணி நேரத்துக்குள் சூயிங்கத்தின் மிச்சமும் வெளியேறிவிடும். எனவே, அது குறித்துக் கவலை வேண்டாம்.

சரியான சூயிங்கத்தைத் தேர்ந்தெடுங்கள். முக்கியமாக சர்க்கரை இல்லாத (Sugar-free) அல்லது சைலிட்டால் (Xylitol) கலந்த சூயிங்கம்களைத் தேர்ந்தெடுப்பது நல்லது. எப்போதும் அளவோடு பயன்படுத்துங்கள். சூயிங்கம் மெல்வது என்பது சிலருக்கு ஒரு வழக்கமாக மாறக்கூடும். ஆனால், அது அடிக்ஷனாக மாற வாய்ப்பில்லை.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    

Doctor Vikatan: உடலில் பல இடங்களிலும் வலி... கெட்ட கொழுப்பு அதிகமானதன் அறிகுறி என்பது உண்மையா?

Doctor Vikatan: எனக்கு கடந்த சில மாதங்களாக உடல் வலி இருக்கிறது. கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமானால், இப்படித்தான் உடலின் பல பகுதிகளிலும் வலி வரும் என்று கேள்விப்பட்டேன். அதுஉண்மையா... கெட்ட கொலஸ்ட்ரால் அதிகர... மேலும் பார்க்க

Doctor Vikatan: காலை உணவைத் தவிர்த்தால் ஆரோக்கியம் பாதிக்கப்படுமா?

Doctor Vikatan: காலை உணவு சாப்பிட வேண்டியது மிகமிக அவசியம் என்று முன்பெல்லாம் வலியுறுத்தப்பட்டது. இப்போது சிலர், அப்படியெல்லாம்இல்லை, காலை உணவைத் தவிர்த்தாலும் பிரச்னையில்லை என்று சொல்கிறார்கள். பசித்... மேலும் பார்க்க

சென்னையில் பறவைக் காய்ச்சல்: `சிக்கன் பிரியர்களே உஷார்' - எது பாதுகாப்பு? மருத்துவர் விளக்கம்

சென்னை அடையார், காந்தி நகர், பள்ளிக்கரணை, வேளச்சேரி, திருவான்மியூர், இ.சி.ஆர் சாலை மற்றும் ஓ.எம்.ஆர் சாலை உள்ளிட்ட இடங்களில் அடுத்தடுத்து காகங்கள் தொடர்ந்து உயிரிழந்தன. இதனையடுத்து உயிரிழந்த காகங்களின... மேலும் பார்க்க

தமிழகத்தில் 1 லட்சத்தை தாண்டிய புற்றுநோய் பாதிப்பு; காரணமென்ன? தடுக்க என்ன வழி? மருத்துவர் விளக்கம்

மத்திய சுகாதாரத்துறை மற்றும் குடும்ப நல அமைச்சகம் நாடாளுமன்றத்தில் புற்றுநோய் தொடர்பாக அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்திருக்கிறது.அந்த அறிக்கையின்படி, 2025 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் புதிதாக புற்றுநோயால் பா... மேலும் பார்க்க

Doctor Vikatan: கொய்யா இலை சேர்த்துக் கொதிக்க வைத்த நீர்... சர்க்கரைநோயின் தீவிரம் குறைக்குமா?

Doctor Vikatan: கொய்யா இலை சூப் மற்றும் தேநீர் குடித்தால் சர்க்கரை நோய் குறையும், குணமாகும் என்று சிலர் கூறுகிறார்கள். சில கடைகளில் கொய்யா இலைப் பொடியைக்கூட விற்பனை செய்கிறார்கள். உண்மையாகவே கொய்யா இல... மேலும் பார்க்க

Cancer: தமிழகத்தில் இருமடங்கு உயர்ந்த புற்றுநோய் பாதிப்பு; நாடாளுமன்றத்தில் வெளியான அறிக்கை

கடந்தாண்டு தமிழகத்தில் புற்றுநோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தைக் கடந்திருக்கிறது என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகி இருக்கிறது.மத்திய சுகாதாரத்துறை மற்றும் குடும்ப நல அமைச்சகம் நாடாளுமன்றத்தில் ப... மேலும் பார்க்க