தொழிலதிபர் அனில் அம்பானியின் ரூ.3000 கோடி சொத்து பறிமுதல்; அமலாக்கப்பிரிவு அதிரட...
Golden Toilet: 101 கிலோ தங்கத்தில் கழிவறைக் கோப்பை; 10 மில்லியன் டாலர் செலவு - எங்கே தெரியுமா?
புதிய வீடுகளை கட்டுபவர்கள் இன்றைக்கு புதுப்புது வடிவங்களில் கழிவறைகளை அமைத்து வருகின்றனர். கழிவறைகளுக்காகவே பல லட்சம் ரூபாய் செலவு செய்யும் குடும்பங்களும் உள்ளன.
இப்படிப்பட்ட ஆடம்பர கழிவறைகளை விரும்பும் குடும்பங்களுக்காக, அமெரிக்காவில் தங்கத்தில் ஒரு கழிவறை தயாரிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 101.2 கிலோ தங்கத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்தக் கழிவறை தற்போது ஏலத்திற்கு வந்துள்ளது. இதை தயாரிக்க 10 மில்லியன் அமெரிக்க டாலர் செலவாகியுள்ளது.

உலகிலேயே மிகவும் விலையுயர்ந்த கழிவறையாகக் கருதப்படும் இந்த தங்கக் கழிவறையை “அமெரிக்கா” என்ற பெயரில், இத்தாலிய கலைஞர் மொரிசியோ கட்டெலன் உருவாக்கியுள்ளார்.
2019ஆம் ஆண்டு, இங்கிலாந்தின் ப்ளென்ஹெய்ம் அரண்மனையில் இருந்து ஒரு தங்கக் கழிவறை திருடப்பட்டது. அந்தக் கழிவறையை திருடிய இருவர் கைது செய்யப்பட்டனர். ஆனால், திருடப்பட்ட கழிவறை இதுவரை மீட்கப்படவில்லை.
அதேபோன்ற ஒரு தங்கக் கழிவறைதான் இப்போது அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதனை வாங்கிச் சென்று பார்வைக்கு வைக்க வேண்டிய அவசியம் இல்லை — இது முழுமையாக செயல்படக்கூடிய ஒரு கழிவறையாகும். எனவே, ஏலத்தில் வாங்கிச் சென்று வீட்டு கழிவறையில் பொருத்தி பயன்படுத்தலாம்.
மொரிசியோ கட்டெலன் இதற்கு முன்பு சுவரில் ஒட்டக்கூடிய வாழைப்பழத்தைப் போல ஒரு நல்லியை (art installation) உருவாக்கியிருந்தார். அது கடந்த ஆண்டு 6.2 மில்லியன் டாலருக்கு ஏலமிடப்பட்டது. இதேபோன்று, 2016ஆம் ஆண்டு அவர் உருவாக்கிய மண்டியிடும் அடால்ஃப் ஹிட்லர் சிற்பம் 17.2 மில்லியன் டாலருக்கு ஏலம் போனது.
இதற்கு முன்பு “அமெரிக்கா” எனப் பெயரிடப்பட்ட தங்கக் கழிவறை 2016ஆம் ஆண்டு தயாரிக்க முடிவு செய்யப்பட்டது. அதில் இரண்டு தயாரிக்கப்பட்டன. அவற்றில் ஒன்று 2017ஆம் ஆண்டு ஏலத்தில் விடப்பட்டு, அதை ஒருவர் தனிப்பட்ட முறையில் பயன்படுத்தி வருகிறார். மற்றொன்று நியூயார்க் அருங்காட்சியகத்தின் (museum) கழிவறையில் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது.

அதனை இதுவரை ஒரு லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர். அதுவே தற்போது ஏலத்திற்கு வந்துள்ளது. வரும் 18ஆம் தேதி ஏலம் தொடங்குகிறது. ஆரம்ப ஏலத் தொகை 10 மில்லியன் டாலராக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தற்போது உருவாக்கப்பட்டுள்ள இந்த தங்கக் கழிவறையின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியானபோது, நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துகளை பகிர்ந்துள்ளனர்.
ஒருவர், “ஆயிரம் ரூபாய்க்கு சாப்பிட்டாலும், 10 ரூபாய்க்கு வடை சாப்பிட்டாலும், இந்த தங்கக் கழிவறையில்தான் போக வேண்டும்!” என்று வேடிக்கையாக குறிப்பிட்டுள்ளார்.

















