'இந்திய ரசிகர்களை அமைதிப்படுத்துவோம்!' - கம்மின்ஸ் ஸ்டைலில் தென்னாப்பிரிக்க கேப்...
கேரளா: கழுத்தில் QR Code; ஆன்லைனில் மொய்ப்பணம்; மகளின் திருமணத்தில் வைரலான தந்தை; பின்னணி என்ன?
டிஜிட்டல் பரிவர்த்தனை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இப்போது திருமணத்தில் மொய்ப்பணம் வாங்கக்கூட டிஜிட்டல் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
கேரளாவில் ஒருவர் தனது மகளின் திருமணத்தில் மொய்ப்பணத்தை வாங்க க்யூஆர் கோடு பயன்படுத்திய விதம் அனைவரையும் ஆச்சரியப்பட வைக்கும் விதமாக இருந்தது.
திருமணம் என்றாலே உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஒன்று கூடுவது வழக்கம். இத்திருமணத்திற்கு வருபவர்கள் மொய்ப்பணம் அல்லது கிப்ட் கவர் கொடுப்பது வழக்கம். இவற்றை வாங்குவதற்காக திருமணம் நடைபெறும் இடங்களில் ரிடர்ன் கிப்ட்டுடன் நோட்டு வைத்துக்கொண்டு ஒருவர் அமர்ந்துவிடுவார்.
ஆனால் இப்போது அதிகமான திருமணங்களில் மொய்ப்பணம் வாங்கும் இடங்களில் க்யூஆர் கோடும் வைக்கப்பட்டு இருக்கிறது. கேரளாவில் குஞ்சன குட்டி என்பவர் தனது மகளின் திருமணத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார்.

அவர் தனது சட்டையில் க்யூஆர் கோடை தொங்க விட்ட படி திருமணத்திற்கு வந்தவர்களை வரவேற்பதும், அவர்களை உபசரிப்பதுமாக இருந்தார். சட்டையில் மெடல் தொங்குவது போன்று க்யூஆர் கோடு தொங்கிக்கொண்டிருந்தது.
அவரது சட்டையில் தொங்கிய க்யூஆர் கோடை உறவினர்கள், விருந்தினர்கள் தங்களது மொபைலில் ஸ்கேன் செய்து பணம் அனுப்பிய வண்ணம் இருந்தனர்.
இந்தக் காட்சி சமூக வலைத்தளப் பக்கத்தில் வைரலாகி இருக்கிறது. அதனைப் பார்த்த நெட்டிசன்கள் இனி கவரில் ரூ.100 கொடுக்க முடியாது என்று தெரிவித்துள்ளனர்.
மற்றொருவர் வெளியிட்டுள்ள பதிவில், இச்செயலை விமர்சித்திருக்கிறார்.
இந்தியாவில் நவம்பர் ஒன்றாம் தேதியில் இருந்து டிசம்பர் 14ம் தேதி வரை 46 லட்சம் திருமணம் நடைபெறும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் ரூ.6.5 லட்சம் கோடி அளவுக்கு வர்த்தகம் நடைபெறும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் கடந்த 3 ஆண்டில் திருமணத்திற்குச் செய்யப்படும் செலவுகளின் அளவு கணிசமாக அதிகரித்து வருகிறது.




















