"என்னால் முடிந்த உதவிகளைச் செய்ய ஆசைப்படுகிறேன்" - கண்ணனி நகர் கார்த்திகாவை பாரா...
உலகில் முதல் முறை! - ஸ்பெயின் காடுகளில் தென்பட்ட வெள்ளை நிற சிவிங்கி பூனை - ஆர்வலர்கள் ஆச்சரியம்
ஸ்பெயினில் புகைப்படக் கலைஞர் ஒருவரின் கேமராவில் சிக்கிய அரிய வகை வெள்ளை ஐபீரியன் லின்க்ஸின் புகைப்படம் (சிவிங்கி பூனை) , உலகெங்கிலும் உள்ள விலங்கு ஆர்வலர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஸ்பெயினில் உலகின் மிகவும் அரிதான பூனை இனங்களில் ஒன்றான ஐபீரியன் லின்க்ஸ் (Iberian Lynx) முதல் முறையாக வெள்ளை நிறத்தில் கண்டறியப்பட்டுள்ளது. புகைப்படக் கலைஞர் ஒருவர் எடுத்த இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
ஐபீரியன் லின்க்ஸ் இனங்கள் பொதுவாக பழுப்பு நிறத்தில் கரு நிற புள்ளிகளுடன் காணப்படும்.
ஆனால் தற்போது தென்பட்டிருக்கும் இந்த பூனை ‘லூசிசம்’ (Leucism) எனப்படும் அரிய மரபணு மாற்றத்தால் வெள்ளை நிற உரோமத்துடன் காணப்படுகிறது. ஆனால் அதன் கண்களின் நிறம் சாதாரணமாகவே உள்ளது.
ஐபீரியன் லின்க்ஸ் இனம் முற்றிலுமாக அழியும் தருவாயில் இருந்தது. வேட்டையாடுதல் மற்றும் வாழ்விட அழிப்பு போன்ற காரணங்களால், 2002ஆம் ஆண்டில் இவற்றின் எண்ணிக்கை வெறும் 100-க்கும் கீழ் இருந்தது. இதனால் உலகின் அழிந்துவரும் உயிரினங்கள் பட்டியலில் இது சேர்க்கப்பட்டது.
பல்வேறு விலங்கு நல அமைப்புகள் இணைந்து இந்த இனத்தைக் காப்பாற்ற தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்ட பின் இவற்றின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து வருவதாக கூறப்படுகிறது.
A photographer in Spain has documented the nation’s first white Iberian lynx, a rare stunning leucistic specimen. pic.twitter.com/J2OupqKeMk
— Open Source Intel (@Osint613) October 29, 2025















