பாலி தீவில் ஆபாச வீடியோ எடுத்து விநியோகம்? `ஒன்லிஃபேன்ஸ்' பிரபலம் பானி ப்ளூ கைது...
google Search 2025: உலகளவில் தேடப்பட்ட இந்திய கிரிக்கெட் வீரர்கள்; முதல் 10 இடம் யாருக்கு?
இந்த 2025 ஆண்டு இந்தியாவிற்குப் புதிய கிரிக்கெட் வீரர்களை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியது. இந்தியா - பாகிஸ்தான் இடையே இருந்த தீவிர அரசியல் முரண்பாடுகளுக்கு இடையேயும் இந்திய கிரிக்கெட் வீரர்களின் தாக்கம் எல்லை கடந்து இருந்தது.
2025-ம் ஆண்டில் இந்தியாவும் பாகிஸ்தானும் நான்கு முறை கிரிக்கெட் போட்டிகளில் மோதின. இந்த அனைத்து இந்தியா - பாகிஸ்தான் போட்டிகளிலும் இந்தியாவே வெற்றிபெற்றது.
அதே நேரம், பாகிஸ்தானில் அதிகம் தேடப்பட்ட கிரிக்கெட் வீரர்களும் இந்திய நட்சத்திரங்களே. வெற்றிகளுக்கு அப்பால், புதிய கிரிக்கெட் வீரர்களின் எழுச்சி இரு தரப்பிலும் உள்ள ரசிகர்களை ஈர்த்திருக்கிறது.

அதன் அடிப்படையில் 2025-ம் ஆண்டில், பாகிஸ்தானில் அதிகம் தேடப்பட்ட கிரிக்கெட் வீரர்களின் பட்டியல் Google Search 2025 வெளியாகியிருக்கிறது. குறிப்பாக தொடக்க ஆட்டக்காரரான அபிஷேக் சர்மாவின் பெயர் பாகிஸ்தானில் தனித்து நிற்கிறது.
பாகிஸ்தானின் Google Search பட்டியலில் முதல் ஐந்து இடங்களில் பாகிஸ்தானைச் சேர்ந்தவரல்லாத ஒரே ஒரு கிரிக்கெட் வீரர் அபிஷேக் சர்மா.
கூகிளில் பாகிஸ்தானின் அதிகம் தேடப்பட்ட விளையாட்டு வீரர்கள் (2025) பட்டியல்:
அபிஷேக் சர்மா (இந்தியா)
ஹசன் நவாஸ்
இர்பான் கான் நியாசி
சாஹிப்சாதா ஃபர்ஹான்
முகமது அப்பாஸ்
அதே நேரம், இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட விளையாட்டு வீரர் என்ற பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் வைபவ் சூரியவன்ஷி. 2025 IPL-ல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இணைந்தவர், இந்தியாவின் எதிர்காலம் என்று கொண்டாடப்பட்டார். U-19 (19 வயதுக்குட்பட்ட) இந்திய அணிக்காக விளையாடினார்.
உலகளவில் கூகிளில் அதிகம் தேடப்பட்ட இளம் இந்திய விளையாட்டு வீரர்களின் பட்டியல்:
வைபவ் சூரியவன்ஷி
ப்ரியன்ஸ் ஆர்யா
அபிஷேக் சர்மா
ஷேக் ரஷீத்
ஜெமிமா ரோட்ரிக்ஸ்
ஆயுஷ் மத்ரே
ஸ்மிருதி மந்தனா
கருண் நாயர்
உர்வில் படேல்
விக்னேஷ் புதூர்
கடந்த காலங்களில் கூகிளின் தேடல் பட்டியலில் விராட் கோலி, தோனி எனப் பெரும் ஜாம்பவான்கள்தான் இடம்பெற்றிருந்தனர். ஆனால், இந்தத் தலைமுறை ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஸ்மிருதி மந்தனா போன்ற பெண் விளையாட்டு வீரர்களையும் சேர்த்துத் தேடியிருப்பது, இளம் தலைமுறையிடம் மாற்றம் ஏற்பட்டிருப்பதைக் கவனிக்க முடிகிறது. இந்தியாவின் திறமைகள் போட்டித் தேசங்களில் கூட கவனத்தை ஈர்த்திருப்பது இந்தியாவிற்குக் கூடுதல் பொறுப்பை வழங்கியிருக்கிறது.




















