செய்திகள் :

H-1B விசா போர்: இந்தியத் திறமையையும் வழிபாட்டு முறையையும் குறிவைக்கிறதா அமெரிக்கா?

post image

ஹைதராபாத்தின் ஒரு கிராமத்தில், 500 ஆண்டுகள் பழமையான ஒரு கோயிலைச் சுற்றி லட்சக்கணக்கான இளைஞர்கள் ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.அவர்கள் கால்களில் வேகம் இல்லை, ஆனால் கண்களில் ஒரு மாபெரும் 'அமெரிக்கக் கனவு' இருக்கிறது. "விசா கடவுள்" என்று உலகமே போற்றும் சில்கூர் பாலாஜியின் இந்த அமைதியான சன்னதிதான், இப்போது அமெரிக்காவின் அதிகார மையமான வாஷிங்டனை அதிரவைக்கும் ஒரு சர்ச்சைப் புயலாக மாறியிருக்கிறது.

அமெரிக்க செனட்டர் எரிக் ஷ்மிட் வீசிய ஒரு ஒற்றை 'ட்வீட்', இந்தியத் தொழில்நுட்ப உலகையே கொந்தளிக்கச் செய்திருக்கிறது. இந்தியர்கள் அமெரிக்க விசா வாங்குவதை ஏதோ ஒரு திறமையான போட்டி போலப் பார்க்காமல், அதை ஒரு திட்டமிட்ட "விசா மாஃபியா" (Visa Cartel) வேலை என்று அவர் வர்ணித்திருப்பதுதான் வேடிக்கையின் உச்சம்.

"மைக்ரோசாஃப்ட், கூகுள் போன்ற நிறுவனங்கள் அமெரிக்கர்களைத் துரத்திவிட்டு, இந்தியர்களுக்கு சிவப்புச் கம்பளம் விரிப்பது ஒரு மிகப்பெரிய சதி" என்று அவர் சீறியுள்ளார்.

2025-ஆம் ஆண்டிற்கான விசா ஒதுக்கீட்டில் 70 சதவீதத்திற்கும் அதிகமான இடங்களை இந்திய மென்பொறியாளர்கள் பெற்றுள்ளது அமெரிக்க அரசியல் வட்டாரத்தில் விவாதங்களை உருவாக்கியுள்ளது. இந்தியத் திறமையாளர்களின் இந்தச் சாதனையை ஒரு ஆரோக்கியமான போட்டியாகக் கருதாமல், சில்கூர் பாலாஜி கோயிலின் வழிபாட்டு முறைகளுடன் தொடர்புபடுத்திப் பேசுவது ஒரு மாறுபட்ட கருத்தாக்கத்தையே முன்வைக்கிறது.

எவ்வித உண்டியல் வசதியோ, ஆடம்பரமோ இன்றி மக்களின் நம்பிக்கையை மட்டுமே மையமாகக் கொண்டு இயங்கும் ஒரு பழமையான கோயிலின் பாரம்பரிய நடைமுறைகளை, மற்றொரு கோணத்தில் அணுகுவது இந்திய கலாச்சாரம் மற்றும் மரபுகள் குறித்த விவாதங்களை மீண்டும் ஒருமுறை உலக அரங்கில் கவனிக்க வைத்துள்ளது.

இந்தியர்களின் அறிவாற்றலையும் ஆன்மீகத்தையும் குறிவைத்து நடத்தப்படும் இந்தத் தாக்குதல் ஒரு எச்சரிக்கை மணி. "எங்கள் உழைப்பு மைக்ரோசாஃப்டிலும் இருக்கும், எங்கள் பிரார்த்தனை பாலாஜியிடமும் இருக்கும்" என்று இந்தியர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

விசா என்பது வெறும் காகிதம் அல்ல, அது ஒரு இந்தியனின் கனவு; அதை ஒரு செனட்டரின் குறுகிய அரசியல் கண்ணோட்டம் இழிவுபடுத்துவதை ஒருபோதும் ஏற்க முடியாது என்பதே ஒட்டுமொத்த இந்தியர்களின் குரலாக ஒலிக்கிறது.

தொழிலதிபர் அதானி மீதான வழக்கை கைவிட அமெரிக்கா முடிவு!

தொழிலதிபர் கெளதம் அதானி மற்றும் அவரது உறவினர் சாகர் மீது அமெரிக்காவில் லஞ்சப் புகார் எழுந்தது. இரண்டு பேரும் இந்தியாவில் சோலார் மின் திட்டங்களை பெற இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக குற்றம் சாட்... மேலும் பார்க்க

`ஒரே ஒரு முகநூல் பதிவுக்கு, ரூ.50 லட்சம் செலவு?' - ஒருவழியாக விமானம் ஏறிய இந்திய வம்சாவளி மருத்துவர்

பாஜக-வுக்கு எதிரான ஒரு முகநூல் பதிவிட்டதற்காகப் பதியப்பட்ட வழக்கால், கடந்த நான்கு மாதங்களாக இங்கிலாந்துக்குத் திரும்ப முடியாமல் இந்தியாவில் சிக்கியிருந்த 49 வயதான மருத்துவர் சங்கராம் பாட்டீல், இறுதியா... மேலும் பார்க்க

தமிழக தேர்தலில் வாக்களித்த வெளிநாட்டு குடியுரிமை பெற்றவர்கள்? - விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தம்!

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில், வெளிநாட்டு குடியுரிமை பெற்றிருந்தும் இந்திய வாக்காளர் அடையாள அட்டையைப் பயன்படுத்தி வாக்களித்த மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம், பெரும் விவா... மேலும் பார்க்க

மேற்கு வங்கம்: `ரூ.5-க்கு மீன் சாப்பாடு' - புதிய பா.ஜ.க அரசு அறிவிப்பு!

மேற்கு வங்க உணவில் மீன் பிரதானமாக இடம் பெறுவது வழக்கம். ஆனால் பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால் மீன் வெட்ட தடை விதிப்பார்கள் என்று முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜி பரப்புரை செய்தார். அதற்கு பதிலடி கொடுக்கும் வி... மேலும் பார்க்க

கர்நாடகா: விலக்கப்பட்ட தடை; பள்ளியில் மாணவர்கள் மீண்டும் ஹிஜாப், புனித கயிறு கட்ட அனுமதி!

கர்நாடகாவில் இதற்கு முந்தைய பா.ஜ.க கூட்டணி அரசு கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மாணவர்கள் யூனிபார்ம் தவிர எந்த வித மத அடையாளங்களுடன் பள்ளிக்கு வரக்கூடாது என்று குறிப்பிட்டு இருந்தது. குறிப்பாக ஹிஜாப... மேலும் பார்க்க

முதலமைச்சர் விஜய்யின் காஷ்மீர் `லியோ' கஃபே - அலைமோதும் தமிழக சுற்றுலாப் பயணிகள்!

காஷ்மீரின் தெற்குப் பகுதியில், பஹல்காம் நகரில் இருந்து சுமார் 40 கி.மீ தொலைவில் உள்ள அனந்த்நாக் மாவட்டத்தில் `சிஃபார் கஃபே' (Sifar Cafe) என்ற உணவகம் அமைந்துள்ளது. இதுதான் தற்போது தமிழ்நாட்டு சுற்றுலாப... மேலும் பார்க்க