தூத்துக்குடி: வீட்டைவிட்டு வெளியே சென்ற மாணவி; காட்டுப் பகுதியில் சடலமாக மீட்பு-...
Hansika: 4 ஆண்டு திருமண வாழ்க்கை - விவாகரத்து பெற்ற ஹன்சிகா; ஜீவனாம்சமாக எதுவும் கேட்கவில்லை!
கடந்த 2011ம் ஆண்டு தனுஷின் மாப்பிள்ளை படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை ஹன்சிகா.
தொடர்ந்து 'வேலாயுதம்', 'அரண்மனை', 'ரோமியோ ஜுலியட்', 'சிங்கம் 2', 'ஒரு கல் ஒரு கண்ணாடி' உள்ளிட்ட படங்களில் நடித்திருத்தார்.
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளிலும் நடித்து வருகிறார்.

இதனிடையே கடந்த 2022 ஆம் ஆண்டு நடிகை ஹன்சிகா மோத்வானி, சோஹேல் கதுரியா என்ற தொழிலதிபரைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இவர்களது திருமணம் ஜெய்ப்பூரில் உள்ள முண்டோடா அரண்மனையில் கோலாகலமாக நடைபெற்றது.
ஆனால் திருமணம் ஆன சில வருடங்களிலேயே ஹன்சிகா-சோஹேல் திருமண வாழ்க்கையில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டது. மும்பை பந்தாரா குடும்பநல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரியிருக்கிறார்.
இதுதொடர்பான வழக்கில் ஹன்சிகா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நீதிமன்றத்தில் கூறும்போது, “திருமணத்துக்குப் பிறகு இரண்டு பேரும் சில காலம் தான் இணைந்து வாழ்ந்தனர்.

இருவரும் தங்கள் வாழ்க்கையில் வெவ்வேறு குணாதிசயங்கள், கருத்துகள், வாழ்க்கை முறையில் வேறுபாடுகள் இருப்பதை படிப்படியாக உணர்ந்தனர். அதனால் இருவருக்குள்ளும் அடிக்கடி கருத்து வேறுபாடுகள் நிலவி வந்தன.” என்று தெரிவித்திருக்கிறார்.
இந்நிலையில் மும்பை பந்தாரா குடும்பநல நீதிமன்றம் இந்த தம்பதிக்கு பரஸ்பர சம்மதத்தின் அடிப்படையில் விவாகரத்தை வழங்கியிருக்கிறது.
ஹன்சிகா தனது விவாகரத்து விஷயத்தில் கணவர் சோஹேல் கதுரியாவிடம் இருந்து ஜீவனாம்சமாக எதுவும் கேட்கவில்லை என்று கூறப்படுகிறது.












