வட இந்தியாவை காக்கும் ஆரவல்லி மலைத்தொடர்; உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து சூழலிய...
Hardik: தனது சிக்ஸால் காயமடைந்த கேமராமேன் - ஆறுதல் கூறிய ஹர்திக்; இணையத்தில் வைரலாகும் வீடியோ
போட்டியின் போது தன்னால் காயமடைந்த கேமராமேனுக்கு ஹர்திக் பாண்டியா ஆறுதல் கூறும் வீடியோ இணையத்தில் வைரலாகி இருக்கிறது.
இந்தியா வந்திருக்கும் தென்னாப்பிரிக்க அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.
முதல் மூன்று போட்டியின் முடிவில் இந்தியா 2-1 என முன்னிலை பெற்றது. லக்னோவில் நடக்க இருந்த நான்காவது போட்டி மோசமான வானிலை காரணமாக ரத்தானது.

ஐந்தாவது போட்டி அகமதாபாத்தில் நேற்று தொடங்கியது. இந்தப் போட்டியில் ஹர்திக் பாண்டியா சிக்ஸர் விளாசினார்.
அப்போது அவர் அடித்த பந்து களத்திற்கு வெளியே இருந்த கேமராமேன் கையில் விழுந்திருக்கிறது.
இந்நிலையில் போட்டி முடிந்தப் பிறகு கேமரா மேனை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியிருக்கிறார்.
இது தொடர்பான வீடியாவை பிசிசிஐ வெளியிட்டிருக்கிறது. அதில் பேசியிருக்கும் ஹர்திக், " நல்ல வேலை அவருக்கு கையில் அடிப்பட்டது. வேறு எங்காவது பலத்த அடிப்பட்டிருந்தால் என்னவாகியிருக்கும்.

நான் அவரை 10 வருடங்களாக மைதானத்தில் பார்த்து வருகிறேன். அவரிடம் அவ்வளவு பேசியதில்லை என்றாலும் ஒரு ஹலோ சொல்வேன். கடவுள் புண்ணியத்தில் அவருக்கு தலையில் எங்கும் அடிப்படவில்லை" என்று பேசியிருக்கிறார்.
Heroes with Heart!
— BCCI (@BCCI) December 20, 2025
Hardik Pandya Cameraman #TeamIndia | #INDvSA | @hardikpandya7 | @IDFCFIRSTBankpic.twitter.com/Cn0YLBc6Ee












