செய்திகள் :

Harshath Khan: "என்னைப் பார்த்து யாரும் இன்ஸ்பையர் ஆகாதீங்க!" - ஹர்ஷத் கான் பேட்டி

post image

2025-ம் ஆண்டுக்கான ஆனந்த விகடன் சினிமா விருதுகள் நிகழ்ச்சி கடந்த வெள்ளிக்கிழமை சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்ட நடிகர் ஹர்ஷத் கான் ரெட் கார்பெட் வரவேற்பில் நம்மிடையே சுவாரஸ்யமான சில விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார்.

ஹர்ஷத் கான், ‘ஹிப்ஹாப்’ ஆதி,
ஹர்ஷத் கான், ‘ஹிப்ஹாப்’ ஆதி,

அவர் பேசுகையில், "இந்தத் தருணம் ரொம்பவே சந்தோஷமா இருக்கு. ஏன்னா, விகடன் அவார்டுன்றது கண்டிப்பா எல்லாருக்குமே ஒரு ட்ரீமா இருக்கும். நமக்கு எங்கேயோ எட்டாத தூரத்துல இருக்குற மாதிரி தெரிஞ்ச விகடன் அவார்டை, இப்ப சில வருஷங்கள்ல நாமே வாங்குற அளவுக்கு ஒரு ஆளா வளர்ந்திருக்கோம்ங்கிறது கனவு மாதிரி இருக்கு!" என நெகிழ்ந்தவரிடம், 'ஒருவேளை நீங்கள் இயக்குநரானால் யாரை ஹீரோவாக வைத்து இயக்குவீர்கள்?' எனக் கேட்டோம்.

அதற்கு அவர், "சோதனை எலியா நடிக்கிறதுக்கு இப்போதைக்கு யாரும் வரமாட்டாங்க. அதனால, முதல்ல நம்மள வச்சே பரிசோதனை முயற்சிகளைச் செஞ்சு பார்ப்போம். எது எதெல்லாம் நமக்கு நல்லா வருது, எது எதெல்லாம் செட் ஆகலன்னு நம்மள வச்சே ஒரு வழியா கத்துக்கிட்டு, அதுக்கப்புறம் மத்த நல்ல நடிகர்கள்கிட்ட போய் கதை சொல்லி டைரக்ட் பண்ணலாம்.

கண்டிப்பா நம்ம 'வி.ஜே. சித்து விலாக்ஸ்' கேமராமேன் சூரியைத்தான் அந்தப் படத்துக்கும் ஒளிப்பதிவாளராகப் பயன்படுத்துவோம். அவன் நம்ம நண்பன், கண்டிப்பா பண்ணாம எப்படி?

ஆனா, அவன் இப்போ புதுசா ஆரம்பிச்சிருக்கிற டீ பிசினஸ்ல ரொம்ப பிஸியாகிட்டான். அதனால இப்போதைக்கு கேமரா பக்கம் வர்றதே இல்லை. அதுமட்டுமில்லாம, சமீபத்துலதான் அவனுக்கு மேரேஜும் ஆகியிருக்கு" என்றார் சிரித்துக்கொண்டே.

ஹர்ஷத் கான் - ஹிப்ஹாப் ஆதி
ஹர்ஷத் கான் - ஹிப்ஹாப் ஆதி

தொடர்ந்து, "சரி பாஸ், அப்படியே அடுத்த தலைமுறைக்கு உங்ககிட்ட இருந்து ஒரு அட்வைஸ்?" எனக் கேட்டதற்கு, "என்னைப் பார்த்து யாரும் இன்ஸ்பையர் ஆகாதீங்கன்னுதான் முதல்ல சொல்லுவேன்.

ஏன்னா, நான் இன்னும் பெருசா என்ன பண்ணிட்டேன்? ஒண்ணுமே பண்ணலையே! நானும் இப்பதான் இந்த ஃபீல்டுக்குள்ள வந்திருக்கேன். என்னைவிடப் பெரிய பெரிய ஆட்களைப் பார்த்து அவங்க இன்ஸ்பையர் ஆகணும்" என்றார்.

"நானும் பகத் பாசிலும் எப்போதும் அதைப் பற்றி பேசுவோம்!" - 'இதயம் முரளி' கேமியோ பற்றி மாளவிகா மோகனன்

'டான் பிக்சர்ஸ்' ஆகாஷ் பாஸ்கரன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'இதயம் முரளி' திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அதர்வா, கயாடு லோஹர், ப்ரீத்தி முகுந்தன் உள்ளிட்டோர் நடித்திருக்கும் இந்தப்... மேலும் பார்க்க

கட்டா குஸ்தி 2: 'இந்த மாதிரி படம்லாம் இப்போ வர்றதே இல்ல'; பாராட்டிய ரஜினி - நெகிழ்ந்த விஷ்ணு விஷால்

கடந்த 2022-ஆம் ஆண்டு, விஷ்ணு விஷால் - ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிப்பில் வெளியான 'கட்டா குஸ்தி' திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் ஜூலை 3-ஆம் ... மேலும் பார்க்க

Parithabangal: "நான், சுதாகர், டிராவிட் நடிச்ச படங்கள் அடுத்தடுத்த வாரங்கள்ல வருவது..." - கோபி

'ஜமா' படத்தின் மூலம் கவனம் ஈர்த்த பாரி இளவழகன் இயக்கி, நடித்திருக்கும் 'அன்பே டயானா' திரைப்படம் இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகிறது. ரம்யா ரங்கநாதன், சேத்தன், ரோஜா ஆகியோர் இப்படத்தின் முதன்மை கதாபா... மேலும் பார்க்க

எழுத்தாளர் சங்க தேர்தல் `அப்ப பாக்யராஜ் சார் அப்படி சொன்னது எங்களுக்கு மனக்காயமாகிடுச்சு'- ரவிமரியா

தமிழ்த் திரையுலக ரைட்டர்களின் தனித்துவமான சங்கம் என்று தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தை சொல்லலாம். உதவி இயக்குநர்களின் கதை திருட்டு பிரச்னை எழும்போதெல்லாம் அவர்கள் தென்னிந்திய எழுத்தாளர் சங்கத... மேலும் பார்க்க

Brigida Saga: 'தங்கமே தங்கமே சந்தனம் வைக்குற தங்கமே!' - நடிகை பிரிகிடா நிச்சயதார்த்த கிளிக்ஸ்|Photos

``ரஜினி சாரும், ரஹ்மான் சாரும் சொன்ன அந்த வார்த்தைகள்..." - பிரிகிடா சகா மேலும் பார்க்க

Vishal: "இறுதிக்கட்ட பணிகளில் நடிகர் சங்கம் கட்டடம்..." - நடிகர் விஷாலின் அப்டேட் என்ன?

நடிகர் விஷால் தற்போது இயக்குநராக 'மகுடம்' படத்தின் வேலைகளில் பரபரப்பாக இயங்கிவருகிறார். இப்படம் ஆகஸ்ட் மாதம் திரைக்கு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நடிகர் விஷால்இந்நிலையில், நேற்றைய தினம் நடிகர் ... மேலும் பார்க்க