``2005 உலகக் கோப்பைல 2-ம் இடம் வந்தப்போ ரூ. 1,000 கொடுத்தாங்க" - வைரலாகும் மிதால...
Heart Beat: ``அதுக்காக என்ன வேணும்னாலும் செய்யலாம்" - மகிழும் `ஹார்ட் பீட்' சாருகேஷ்
`ஹாட்ஸ்டார்' தளத்தில் வந்துகொண்டிருக்கும் ஹார்ட் பீட்' தொடர்தான் தற்போது பலரின் பேவரைட்.
காதல், காமெடி என ஆல்ரவுண்டராக கலக்கும் இந்தத் தொடருக்கு ஆனந்த விகடன் சின்னத்திரை விருதுகள் நிகழ்ச்சியில் `Most Celebrated Series Of The Year' விருது வழங்கப்பட்டிருந்தது.

அந்த நிகழ்வில் கலந்துகொண்டு நம்மிடையே பிரத்யேகமாகப் படக்குழுவினர் பேசியிருந்தனர்.
முதலில் பேசிய நடிகை தீபா பாலு, "ரொம்ப சந்தோஷமா இருக்கு. ரீனா கதாபாத்திரத்தைத் தாண்டி என்னை மக்கள் அவங்க வீட்டுப் பொண்ணா பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க.
இதுக்காகத்தான் எல்லோரும் ஓடுறோம். இதுக்கு மேல வேற என்ன வேணும்!" என்றார்.

அடுத்ததாக நடிகர் சாருகேஷிடம் பேசியபோது, "நான் வெளிப்படையாகவே சொல்றேன். நான் இவ்வளவு ஹாப்பி ஆனதே கிடையாது.
நிறைய மீம்ஸ், போஸ்ட்கள் பாக்குறேன். அதுக்காக ஒரு இரண்டு நிமிஷம் நமக்கு நேரம் ஒதுக்கிச் செய்றாங்க பாத்தீங்களா, அது உண்மையாகவே அழகான விஷயம்.
அதுக்காக என்ன வேணாலும் செய்யலாம். மீம்ஸ் மற்றும் போஸ்ட் போடும் அனைவருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி. உங்களுக்காகத்தான் உழைக்கிறேன், உங்களுக்காக இன்னும் எவ்வளவு வேணும்னாலும் உழைச்சுக்கிட்டே இருக்கலாம்!" என்றார்.
அமயா, அபி என்ற இரட்டையர் கதாபாத்திரத்தில் நடிக்கும் ரோஷினி, "அவ்வளவு பெரிய கதாபாத்திரத்தை எடுத்தபோது முதலில் எனக்கு பயமா இருந்துச்சு.
எனக்கு டீம் ரொம்பவும் ஒத்துப்போனதும் அப்படியே செட் ஆயிடுச்சு.
நிறையப் பேர் என்னை ட்வின்ஸ்னு நினைச்சுட்டு இருக்காங்க. நான் ட்வின்ஸ் எல்லாம் இல்லை, இரண்டு கதாபாத்திரமும் நான்தான் பண்றேன்.
அமயா, அபி கதாபாத்திரங்களுக்கு ரசிகர்கள் தரும் ஆதரவு சந்தோஷமா இருக்கு. இதே அன்பையும் ஆதரவையும் இனி வரும் என்னுடைய புராஜெக்ட்டுகளுக்கும் தரணும்னு நான் எதிர்பார்க்குறேன்." என்றார்.

நடிகை அஷ்வத்தியிடம் பேசியபோது, "நான் எங்க போனாலும் மானஸா, மானஸான்னு தான் கூப்புடுறாங்க.
அது அழகான விஷயமில்லையா! ஆரம்பிக்கும் போது இப்படி ட்விஸ்ட் எல்லாம் வரும்னு தெரியாது.
அடுத்த ட்விஸ்ட் எல்லாம் இனிமே பார்க்கப் பார்க்கத்தான் தெரியும்" என்றபடி முடித்துக்கொண்டார்.
முழு காணொளியைப் பார்க்க கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.




















