திருப்பரங்குன்றம் விவகாரம்: ``அயோத்தி மாதிரி தமிழகம் மாறுவதில் தவறு இல்லை'' - நய...
Indigo: ``விமான ஊழியர்களிடம் கனிவாக நடந்துக்கோங்க, ஏன்னா'' - பயணிகளுக்கு கோரிக்கை வைத்த சோனு சூட்
இந்தியாவின் முக்கிய விமான போக்குவரத்து நிறுவனங்களில் ஒன்றான இண்டிகோ நிறுவனம், சமீப காலமாக விமான தாமதம், விமான ரத்து உள்ளிட்ட தீவிர பிரச்னைகளை எதிர்கொண்டு வருகிறது.
சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் கொண்டு வந்த புதிய விதிமுறைகளால் தான் இண்டிகோ நிறுவனம் தடுமாறி வருகிறது என கூறப்பட்டது.
இதனையடுத்து, “புதிய விதிமுறைகளால் பயணிகளுக்கு ஏற்பட்டுள்ள தடைகளையும், விமான நிறுவனத்தின் கோரிக்கைகளையும் கருத்தில் கொண்டு, புதிய விதிமுறைகளில் வார விடுப்பு உள்ளிட்ட சில விதிகளை திரும்பப் பெறுகிறோம்” என்று சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் அறிவித்துள்ளது.

பிறகு, இண்டிகோ நிறுவனத்தின் CEO பீட்டர் எல்பெர்ஸ் விமான சேவையின் பாதிப்புக்காக பயணிகளிடம் மன்னிப்பு கேட்டிருந்தார்.
மேலும், டிசம்பர் 10-15 தேதிகளுக்குள் இண்டிகோ நிறுவனத்தின் சேவை இயல்புநிலைக்கு திரும்பும் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், பாலிவுட் நடிகர் சோனு சூட், இண்டிகோ நிறுவனத்தின் ஊழியர்களிடம் பயணிகள் கனிவாக நடந்துகொள்ள வேண்டும் என தனது எக்ஸ்தளப்பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் பேசிய அவர், “இண்டிகோ விமான தாமதங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நான் ஒரு சிறிய செய்தியை சொல்ல விரும்புகிறேன். என் குடும்பத்தினரும் விமானத்தில் பயணம் செய்தனர்.
அவர்களும் ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக காத்திருக்க வேண்டியிருந்தது. பின்னர் விமானம் புறப்பட்டு, அவர்கள் தங்கள் இலக்கை சென்றடைந்தனர். இருப்பினும் பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
இதனால் பலரும் பாதிக்கப்பட்டிருக்கின்றனர் என புரிகிறது. ஆனால், இண்டிகோ விமான ஊழியர்களிடம் மக்கள் கோபமாக கத்துவது மிகவும் வருத்தமாக இருக்கிறது.
"A delayed flight is frustrating, but remember the faces trying to fix it. Please be nice and humble to the IndiGo staff; they are carrying the weight of cancellations too. Let’s support them." @IndiGo6Epic.twitter.com/rd3ciyekcS
— sonu sood (@SonuSood) December 6, 2025
விமானம் தாமதமாகும்போது பயணிகள் கோபமடைவது இயல்பே. ஆனால் அதை சரி செய்ய முயற்சி செய்கிற ஊழியர்களை நினைவில் கொள்ளுங்கள்.
இண்டிகோ நிறுவனத்தின் ஊழியர்களுடன் கொஞ்சம் கனிவாக நடந்து கொள்ளுங்கள். விமான ரத்தமான சேவைகளின் சுமையை அவர்களும் தான் சுமக்கிறார்கள். அவர்களுக்கு ஆதரவு அளிப்போம்” என்று பயணிகளுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.












