டித்வா: `பருப்பு, சர்க்கரை டு பால் பொருட்கள்’ - இலங்கைக்கு நிவாரணப் பொருட்களை அன...
திருப்பரங்குன்றம்: ``தீபத் தூண் அல்ல; அது நில அளவை கல் தான்'' - ஓய்வு பெற்ற வட்டாட்சியர் பேட்டி
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற வட்டாட்சியர், திருப்பரங்குன்றத்தில் சர்ச்சைக்குரிய இடத்தில் அமைந்துள்ளது தீபத் தூண் அல்ல; அது நில அளவை கல் தான் என தெரிவித்துள்ளார்.
திருப்பரங்குன்றம் மலையில் சர்ச்சைக்குரிய இடத்தில் அமைந்துள்ள தூணில் கார்த்திகை தீபத்திருநாளன்று தீபம் ஏற்ற அனுமதி கோரி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் மீது நீதிபதி சுவாமிநாதன் அளித்த தீர்ப்பின் அடிப்படையில், மேற்படி சர்ச்சைக்குரிய இடத்தில் அமைந்துள்ள தீபத் தூணில் தீபம் ஏற்ற தடை இல்லை என உத்தரவு பிறப்பித்தார்.

இது குறித்து பல்வேறு சர்ச்சைகள் உருவான நிலையில், இராஜபாளையத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற வட்டாட்சியர் பாலமுருகன், மேற்படி பிரச்னைக்குரிய மலையில் அமைந்துள்ள அந்தத் தூண் தீபம் ஏற்றுவதற்கான தூண் அல்ல; அது ‘தி.ஓட் லைட் ஸ்டோன்’ எனப்படும் சர்வே கல் எனக் கூறியுள்ளார்.

ஓய்வு பெற்ற வட்டாட்சியர் பாலமுருகன் அளித்த பேட்டியில் கூறுகையில், “திருப்பரங்குன்றம் மலையில் சர்ச்சைக்குரிய இடத்தில் உள்ள கல்லானது தீபக் கல் என நாளிதழ்களில் வெளியாகி இருப்பதை தான் பார்த்தேன். அது தொடர்பாக வழக்கறிஞர் வாஞ்சிநாதன் அக்கல்லில் உள்ள சர்வே குறியீடுகளை வைத்து பார்க்கும் போது அது நில அளவை கல் தான் எனக் கூறியுள்ளார்.
வாஞ்சிநாதன் கூறுவதை வைத்து பார்க்கும் போது மேற்படி சர்ச்சைக்குரிய இடத்தில் அவர் சொன்ன குறியீடுகளுடன் இருக்கும் கல்லானது கண்டிப்பாக நில அளவை கல்லாக தான் இருக்க முடியும்" என்று கூறினார்.
மேலும் ஓய்வு பெற்ற வட்டாட்சியர் பாலமுருகன் கூறுகையில், "இது மாதிரியான கற்கள் வெள்ளையர்களால் நிலப்பரப்பை அளவீடு செய்யும்போது இந்த மாதிரியான கற்கள் ஆங்காங்கே நிறுவப்பட்டது. குறிப்பாக கலைப்பகுதியில் இருந்து உயரமான பகுதிகளுக்கு தகுந்தால் போல் சுமார் 30 சென்டிமீட்டர் முதல் 240 சென்டிமீட்டர் வரை உயரமுள்ள கற்கள் இடத்திற்கு தகுந்தார் போல் அமைக்கப்பட்டுள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் இது போன்ற ஏராளமான சர்வே கற்கள் உள்ளது. தான் புலாய்விற்கு செல்லும்போது இது மாதிரியான கற்களை மலைப்பகுதியில் பார்த்துள்ளேன்.
மேற்படி பிரச்னைக்குரிய இடத்தில் இருக்கும் சர்வே கல்லின் மேலே உள்ள குழிப்பகுதியானது நில அளவை கருவியை பொருத்துவதற்காக உண்டாக்கப்பட்ட குழி.

கிராமப்புறங்களில் உள்ள இது மாதிரியான கற்களில் பொதுமக்கள் எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றுவதால் அந்த கற்கள் எல்லாம் தீப தூண்கள் ஆகி விடாது. அந்த கற்களின் பெயர் தியோடோலைட் ஸ்டோன்.
இது குறித்து தீர்ப்பளித்த நீதிபதி முன்னதாக நில அளவை அலுவலர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் மேற்படி இடத்தை தணிக்கை செய்திருந்தால் இது மாதிரியான குழப்பங்கள் வந்திருக்க வாய்ப்பு இல்லை. மேற்படி பிரச்னைக்குரிய இடத்தில் அமைந்து இருப்பது நில அளவை கல் எனப்படும் தியோடோலைட் ஸ்டோன் தான்" என்று உறுதிப்பட கூறினார்.














