திமுக: `கட்சிக்காகதான் பொறுமையா இருந்தேன்’ - நகராட்சி துணை தலைவர் மீது சாதிய வன்...
காங்கிரஸ்: ``விஜய்யை பிரவீன் சக்கரவர்த்தி சந்தித்தது எனக்கு தெரியாது'' - செல்வப்பெருந்தகை விளக்கம்
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை இன்று (டிச.6) சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார்.
அப்போது அவரிடம், தவெக தலைவர் விஜய்யை காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி சந்தித்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது.
அதற்கு பதிலளித்த செல்வபெருந்தகை, "பிரவீன் சக்ரவர்த்தி விஜய்யை சந்தித்தது குறித்து எனக்கு தெரியாது.

தொகுதி பங்கீடு குறித்து திமுகவோடு பேச நாங்கள் ஐவர் குழு அமைத்திருக்கிறோம்.
அவர்கள் திமுகவோடு பேச்சு வார்த்தை நடத்துவது மட்டும் தான் எங்களுக்கு தெரியும்.
விஜய்யை சந்திக்க பிரவீன் சக்கரவர்த்திக்கு நாங்கள் அனுமதி தரவில்லை. இதைப் பற்றி நாங்கள் பேசவும் இல்லை.
இந்தியா கூட்டணி வலிமையானது, இதை உடைக்கவோ, சிதைக்கவோ யாராலும் முடியாது" என்று கூறியிருக்கிறார்.














