செய்திகள் :

Trump: `அமைதிக்கான பரிசு' - ட்ரம்ப் மகிழ்ச்சி; நோபல் பரிசு மிஸ் ஆனாலும் FIFA ஆறுதல்

post image

அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றதில் இருந்து ட்ரம்ப் கேட்டு வந்த ஒன்று... ஆசைப்பட்டு வந்த ஒன்று, 'அமைதிக்கான நோபல் பரிசு'.

ஆனால், இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு வெனிசுலாவை சேர்ந்த மரியா கொரியா மச்சாடோவிற்கு வழங்கப்பட்டது. இதில் ட்ரம்ப்பிற்கு ஏமாற்றம் தான்.

ட்ரம்பிற்கு பரிசு

இந்த நிலையில் தற்போது FIFA அமைப்பு ட்ரம்பிற்கு ஃபிஃபா அமைதி பரிசை வழங்கி உள்ளது.

ஃபிஃபா அமைப்பு இப்படி ஒரு பரிசை வழங்குவது இதுவே முதல் முறை. அதுவும் அந்தப் பரிசு ட்ரம்பிற்கு வழங்கப்பட்டுள்ளது மிக முக்கியமாக கவனிக்கப்படுகிறது.

ட்ரம்பிற்கு இந்தப் பரிசு வாஷிங்டன்னில் உள்ள கென்னடி சென்டரில் நடந்த 2026-ம் ஆண்டுக்கான உலக கோப்பை ட்ராவில் வழங்கப்பட்டுள்ளது.

ட்ரம்ப் - FIFA அமைதி பரிசு
ட்ரம்ப் - FIFA அமைதி பரிசு

எதற்கு இது?

உலக அளவில் அமைதிக்கான முயற்சி மற்றும் அதற்கான பேச்சுவார்த்தையே முன்னெடுத்தது போன்றவற்றிற்கு ட்ரம்பிற்கு இந்தப் பரிசு வழங்கப்பட்டுள்ளதாக ஃபிஃபா அமைப்பு கூறியுள்ளது.

இந்தப் பரிசிற்கு நன்றி தெரிவித்துள்ள ட்ரம்ப் தனக்கு கிடைத்த மிகப்பெரிய மரியாதைகளில் இதுவும் ஒன்று என்றும், தனது ஆட்சிக்காலத்தில் பல லட்சக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றி உள்ளதாகவும் கூறியுள்ளார்.

எது எப்படியோ, ஒரு வழியாக ட்ரம்பிற்கு அமைதி பரிசு கிடைத்துவிட்டது.

வாழ்த்துகள் ட்ரம்ப்!

திருப்பரங்குன்றம்: ``தீபத் தூண் அல்ல; அது நில அளவை கல் தான்'' - ஓய்வு பெற்ற வட்டாட்சியர் பேட்டி

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற வட்டாட்சியர், திருப்பரங்குன்றத்தில் சர்ச்சைக்குரிய இடத்தில் அமைந்துள்ளது தீபத் தூண் அல்ல; அது நில அளவை கல் தான் என தெரிவித்துள்ளார்.திருப்பரங்கு... மேலும் பார்க்க

காங்கிரஸ்: ``விஜய்யை பிரவீன் சக்கரவர்த்தி சந்தித்தது எனக்கு தெரியாது'' - செல்வப்பெருந்தகை விளக்கம்

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை இன்று (டிச.6) சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். அப்போது அவரிடம், தவெக தலைவர் விஜய்யை காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி சந்தி... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம் விவகாரம்: ``இன்னொரு இடத்தில் தீபம் எதற்கு?'' - அமைச்சர் சேகர் பாபு கேள்வி

சென்னையில் இன்று (டிச.6) செய்தியாளர்களைச் சந்தித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக பேசியிருக்கிறார். " திமுக அரசு சட்டத்தை மதிக்கின்ற அரசு. அதுமட்டுமின்... மேலும் பார்க்க

'வேட்பாளரையும் கடன் கேட்கும் காங்கிரஸ்’ - அமைச்சர் தொகுதிக்கு திமுக, காங்கிரஸ் குஸ்தி

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி குறித்துப் பேசுவதற்காகக் கிரிஷ் சோடங்கர் தலைமையில், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள் சூரஜ் ஹெக... மேலும் பார்க்க

``கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு ரஷ்யா `இதில்' உதவும்'' - புதின் அறிவிப்பு

இருதரப்பு பேச்சுவார்த்தைக்குப் பிறகு, நேற்று டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் இந்தியப் பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புதின் கூட்டுச் செய்தியாளர் சந்திப்பு நடந்தது.அதில் புதின் பேசியதாவது,"இந்தியாவும், ... மேலும் பார்க்க

``இந்தியா - ரஷ்யா உறவு 'துருவ நட்சத்திரத்தை' போன்றது'' - மோடி பெருமிதம்

இந்திய பயணம்‌‌ முடிந்து ரஷ்ய அதிபர்‌ புதின் ரஷ்யாவிற்கு சென்றுவிட்டார்.மோடி பேச்சுஇந்தியா - ரஷ்யா இடையேயான பேச்சுவார்த்தைக்கு பிறகு, ஐதராபாத் இல்லத்தில் நேற்று இந்திய பிரதமர்‌ மோடி பேசியதாவது,"கடந்த எ... மேலும் பார்க்க