செய்திகள் :

IPL 2025: ஐபிஎல் தொடர் மீண்டும் தொடங்குமா? - ஐபிஎல் தலைவர் அருண் துமல் விளக்கம்

post image

கடந்த 22 ஆம் தேதி தொடங்கிய 18-வது ஐபிஎல் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வந்தது.

இதனிடையே இந்தியா- பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே ஏற்பட்ட பதற்றம் காரணமாக  பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

பஞ்சாப் vs டெல்லி
பஞ்சாப் vs டெல்லி

மேலும் ஐபிஎல் தொடர் ஒருவாரக் காலத்திற்கு நிறுத்தி வைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்திருந்தது.

தற்போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே தாக்குதல் நிறுத்தம் அறிவிக்கப்பட்டு இருப்பதால் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் காணப்படுகிறது.

இந்நிலையில் போட்டி தொடங்குவது குறித்து ஐபிஎல் தலைவர் அருண் துமல் பேசியிருக்கிறார். “ போர் நிறுத்தம் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளதால் பாதியில் நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடரை மீண்டும் நடத்துவது குறித்து ஆலோசிக்கிறோம்.

ஐபிஎல் தலைவர் அருண் துமல்

உடனடியாக தொடரை தொடங்க முடிந்தால் போட்டி நடைபெறும் இடங்கள், தேதி உள்ளிட்டவற்றை திட்டமிட வேண்டும். அணியின் உரிமையாளர்கள் மற்றும் ஒன்றிய அரசிடம் இது குறித்து கலந்தாலோசிக்க வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

Virat Kohli : "1.4 பில்லியன் இதயங்களை உடைத்த கோலி" - உச்சி முகரும் ஆஸ்திரேலிய ஊடகங்கள்!

இந்திய வீரர் விராட் கோலி, டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுவதாக நேற்று (மே 12) அறிவித்தார். கோலியின் இந்த திடீர் அறிவிப்பால் அதிர்ச்சியடைந்த ரசிகர்களும், கிரிக்கெட் வீரர்களும் அவருக்கு வாழ்வின் அட... மேலும் பார்க்க

Rohit - Kohli: 2027 உலகக் கோப்பையில் ரோஹித், கோலி விளையாட மாட்டார்களா? - ஓப்பனாகப் பேசிய கவாஸ்கர்!

இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் வீரர்களான ரோஹித் சர்மாவும், விராட் கோலியும் ஒரே வாரத்தில் அடுத்தடுத்து டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்திருக்கின்றனர்.ஏற்கெனவே, 2024 உலகக் கோப்பையை வென்றபோது... மேலும் பார்க்க

Virat Kohli : `காட்டையே அள்ளி உண்ணும் மிருகம்!' - விராட் கோலி ஏன் 'GOAT' தெரியுமா?

'தீரா பசி கொண்ட மிருகம்!'ஓய்வை அறிவித்திருக்கிறார் விராட் கோலி. எதிர்பார்த்திடாத முடிவு இது. விராட் கோலி எதிலும் திருப்திப்பட்டுக் கொள்பவர் அல்ல. அவருக்கு எல்லாமே இன்னும் இன்னும் தேவைப்பட்டுக் கொண்டே ... மேலும் பார்க்க

Kohli: ``இங்கிலாந்தில் பார்ப்போம் என்று நினைத்தோம், ஆனால்..'' - கோலி ஓய்வு குறித்து பயிற்சியாளர்

சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வுப் பெறுவதாக விராட் கோலி நேற்று (மே 12) அறிவித்தார். இவரின் ஓய்வு முடிவு பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. விராட் கோலியின் ஓய்வு குறித்து ரசிகர்கள், கிரிக... மேலும் பார்க்க

Kohli: வெறும் 770 ரன்களில் தனது லட்சியத்தை பாதியில் விட்டுச் சென்ற கோலி - 2013ல் கூறியது என்ன?

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி, டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுவதாக நேற்று (மே 12) அறிவித்தார்.ஏற்கெனவே, 2024-ல் டி20 உலகக் கோப்பை வென்ற கையோடு டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற கோலி, அ... மேலும் பார்க்க

Virat Kohli: `30 சதங்கள், வெற்றிகரமான கேப்டன்சி' - டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் சாதித்தது என்ன?

டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார் இந்தியாவின் முன்னணி பேட்ஸ்மேன் விராட் கோலி.இந்திய கிரிக்கெட் வரலாற்றில் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர் விராட் கோலி. அவரது கெரியரில் 123 டெஸ்... மேலும் பார்க்க