செய்திகள் :

Jailer 2: "என் கணவர் என் கனவை நம்பி அதை நிஜமாக்கினார்.!" - 'ஜெயிலர் 2' நடனம் குறித்து நடிகை பூர்ணா

post image

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் 'ஜெயிலர் 2' படத்திற்கு பயங்கர எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

'ஜெயிலர்' படத்தின் முதல் பாகத்திற்கு கிடைத்த வெற்றி, அதில் நடித்திருந்த நட்சத்திரங்கள் என இவையெல்லாம்தான் இந்த எதிர்பார்ப்புக்கு முக்கியக் காரணம்.

Nelson - Jailer 2
Nelson - Jailer 2

அனிருத் இசையில் உருவாகியிருக்கும் இப்படத்தின் முதல் சிங்கிளான 'அல்ல போலேலோ' பாடல் சமீபத்தில் வெளியாகியிருந்தது.

இந்தப் பாடலில் நடிகை பூர்ணா நடனமாடியிருக்கிறார். இந்தப் பாடலில் நடனமாடியிருப்பது குறித்து நெகிழ்ச்சியாகத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் அவர் பதிவிட்டிருக்கிறார்.

அந்தப் பதிவில் அவர், "சிறுவயதிலிருந்தே எனக்கு நடனம்தான் எல்லாம். ஒரு நடன ஆசிரியராக வேண்டும் என்பதுதான் எப்போதும் என் மிகப்பெரிய கனவாக இருந்தது.

இன்று துபாயில் அந்தப் ஆசை நனவானதைக் கண்டு நான் ஆசீர்வதிக்கப்பட்டவளாக உணர்கிறேன். என் கணவர் என் கனவை நம்பி அதை நிஜமாக்கினார்.

ஒரு சூப்பர் ஹீரோவுடன் இணைந்து நடனமாட வேண்டும் என்று நான் எப்போதும் கனவு கண்டதுண்டு. ஆனால், ஒருநாள் ரஜினிகாந்த் சாரின் படத்தில் ஆடும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கும் என்று நான் சிறிதும் நினைத்துப் பார்த்ததில்லை.

Ala Bolelo - Jailer 2
Ala Bolelo - Jailer 2

என் மிகப்பெரிய கனவுகளில் ஒன்றை நனவாக்கியதற்கும், என் நடனத்திற்கு நீங்கள் காட்டிய அனைத்துப் பாராட்டுகள், அன்பு மற்றும் ஊக்கத்திற்கும் நெல்சன் சாருக்கு மிக்க நன்றி.

அனைத்திற்கும் மேலாக, இந்தப் பயணம் என் அம்மாவின் கடின உழைப்பு, தியாகங்கள் மற்றும் அளப்பரிய ஆதரவினால் மட்டுமே சாத்தியமானது என்பதையும் நான் குறிப்பிட்டாக வேண்டும்.

இன்று நான் அடைந்துள்ள இந்த நிலைக்கு அவரே காரணம். அனைவரின் அன்புக்கும் ஆதரவுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். இந்தத் தருணம் என் வாழ்வின் மிகவும் சிறப்பு வாய்ந்த தருணங்களில் ஒன்றாக எப்போதும் நிலைத்திருக்கும்" எனக் குறிப்பிட்டுப் பதிவிட்டிருக்கிறார்.

What To Watch: 'சர்தார் 2', 'மண்டாடி', 'விஸ்வநாத் & சன்ஸ்' - இந்த வாரம் ரிலீஸ்கள் | முழு லிஸ்ட்

மண்டாடி: 'மண்டாடி' திரைப்படம் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில், ஜி.வி. பிரகாஷ் இசையில் சூரி, சுஹாஸ், மகிமா நம்பியார் ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கிறது. இத்திரைப்படம் திரையரங்குகளில் செப்டம்பர் 10-ஆம்... மேலும் பார்க்க

"நான் என் அடையாளத்தை இழந்துவிட்டதுபோல் உணர்ந்தேன்" - சமந்தா

நடிகை சமந்தா சமீபத்தில் 'The Hollywood Reporter' ஆங்கில ஊடகத்திற்கு பேட்டி அளித்திருக்கிறார். மயோடிஸ் நோயால் பாதிக்கப்பட்டது குறித்து அந்த நேர்காணலில் பேசியிருக்கும் சமந்தா, "மயோடிஸ் நோயால் நான் பாதிக... மேலும் பார்க்க

ஆரண்ய காண்டம் : வன்முறை அழகியல்! | ஆதி தாமிரா | `சினி'ஸ்கோப் 23

`சினி'ஸ்கோப் 23ஆரண்யகாண்டம்பசுபதியை கஜேந்திரனின் ஆட்கள் துரத்திக் கொண்டிருக்கிறார்கள். பசுபதி பயத்துடன் மூச்சிரைக்க ஓடிக்கொண்டிருக்கிறான். அதுவொரு பரபரப்பான சேஸிங் காட்சி. ஏதேதோ குழப்பமான பின்னணி இசை ... மேலும் பார்க்க

Mandaadi: "ஒரு மீனவனா நடிச்சதை நான் பாக்கியமாக நினைக்கிறேன்!" - நடிகர் சூரி

மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில், சூரி நடிப்பில் உருவாகியுள்ள 'மண்டாடி' திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. Mandadi இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இப்படத்தின் மு... மேலும் பார்க்க

Sardar 2 Review: அதிக பிரமாண்டம், அச்சுறுத்தும் களம்; ஆனாலும் இந்த சர்தார் சறுக்குவது எங்கே?

RAW ஏஜென்ட்டான விஜய் பிரகாஷ் (கார்த்தி), தனது தந்தை சர்தார் சந்திரபோஸின் (கார்த்தி) கடந்தகாலத்துடன் தொடர்புடைய முக்கியமான மிஷனுக்குள் இழுக்கப்படுகிறார். சில நொடிகளில் லட்சக்கணக்கான உயிர்களைப் பறிக்கக்... மேலும் பார்க்க

Mandaadi Review: புதிய களம், பழைய டெம்ப்ளேட்; ஆனாலும் மிரட்டும் தாட்டியக்காரன் இந்த மண்டாடி!

ஊரில் தன்னை பாய்மரப் படகு போட்டியில் சேர்க்க மறுக்கும் சட்டாப்புலியின் (சுஹாஸ்) மகனைக் கொல்ல முயற்சி செய்கிறார் மாரி (மிதுன் ஜெய் சங்கர்). ஆனால், இதில் மாரியின் குறி தவறிவிட, சட்டாப்புலியும் அவரின் ஆட... மேலும் பார்க்க