Jana Nayagan Audio Launch: 'ஆட்டோகாரரும் குடையும்!' - விழாவில் விஜய் சொன்ன குட்ட...
Jana Nayagan Audio Launch: 'ஆட்டோகாரரும் குடையும்!' - விழாவில் விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி!
விஜய்யின் கடைசி திரைப்படமான 'ஜன நாயகன்' பட இசை வெளியீட்டு விழா இன்று பிரமாண்டமான முறையில் மலேசியாவிலுள்ள புக்கிட் ஜலீல் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது.
அ. வினோத் இயக்கியிருக்கும் இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி டியோல், மமிதா பைஜூ, பிரியாமணி, பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

படக்குழுவினர் பலரும் நேற்றைய தினம் விமானம் மூலம் மலேசியா புறப்பட்டனர். இந்த நிகழ்வுக்கு கருப்பு நிறக் கோட் சூட் அணிந்திருக்கிறார் விஜய்.
மேடையில் குட்டி ஸ்டோரி சொன்ன விஜய், "ஒரு ஆட்டோகாரர், கர்ப்பிணி பெண்ணை ஏற்றிக்கொண்டு போறார்.
அப்போ பெரிய மழை பெய்திட்டு இருக்கு. அந்த ஆட்டோக்காரர் அவர்கிட்ட இருந்து குடையை கொடுத்து எடுத்துட்டு போகச் சொல்றாரு. இதை நான் யார்கிட்ட திருப்பிக் கொடுக்கிறதுனு அந்தப் பெண் கேட்கிறாங்க.
அதுக்கு அந்த ஆட்டோக்காரர் 'யாராவது தேவைப்படுபவர்களுக்கு அதை கொடுங்க'னு சொல்லிட்டு போயிடுறாரு. அந்த கர்ப்பிணி பெண், ஹாஸ்பிடல் வாசல்ல மழைக்கு பயந்து நின்றுகொண்டிருந்த ஒரு பெரியவருக்கு அந்த குடையை கொடுத்து எடுத்துட்டு போகச் சொல்றாங்க.

அதுக்கு அந்த பெரியவர் 'நீங்க யாருனு எனக்கு தெரியாது. இதை யார்கிட்ட திரும்ப கொடுக்கிறது'னு கேட்கிறாரு. 'தேவைப்படுபவர்களுக்கு அதை கொடுத்துட்டு போயிடுங்க'னு கர்ப்பிணி பெண் சொல்றாங்க. அந்த பெரியவர் குடையை வாங்கிட்டுப் பஸ் ஸ்டாப் பக்கம் போறாரு.
அங்க பூ விக்கிற அம்மாகிட்ட அந்த குடையை அவர் கொடுக்கிறார். அந்த அம்மா மற்றொரு குழந்தைகிட்ட குடையை கொடுத்து 'மழையில நனையாத, குடையை வச்சுக்கோ'னு சொல்றாங்க. அந்த குழந்தை குடையோட வீட்டுக்குப் போறாங்க. வீட்ல அந்த குழந்தையோட அப்பா 'குடையில்லாமல் குழந்தை மழையில நனைஞ்சிட்டு வரும்'னு யோசிச்சுட்டு இருக்காரு.
அந்த அப்பா வேற யாருமில்லை, அவர்தான் ஆட்டோக்காரர். அந்தக் குடை அவர் கொடுத்த குடைதான். முடிஞ்ச வரைக்கும் சின்ன சின்ன உதவிகள் செஞ்சு பாருங்க, லைஃப் சுவாரஸ்யமா இருக்கும்!" என்றார்.















