செய்திகள் :

Jason Sanjay 01: தயாரிப்பாளராகவும் மாறிய விஜய்யின் மகன்; வெளியாகும் அப்டேட்

post image

நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் தனது முதல் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இதில் மாநகரம், ராயன் படங்களில் நடித்த சந்தீப் கிஷன் நாயகனாக நடிக்கிறார்.

சில மாதங்களுக்கு முன்பு தொடங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது. 2026 தொடக்கத்தில் இந்த படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

படபிடிப்பில் ஜேசன் சஞ்சய்
படபிடிப்பில் ஜேசன் சஞ்சய்

லைகா நிறுவனத்தின் சுபாஸ்கரன் இந்த படத்தைத் தயாரித்துள்ளார். இதுவரையிலான படத்தின் உருவாக்கம் அவருக்கு திருப்தி அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

ஜேசன் சஞ்சய் லைகா நிறுவனத்தில் ஒரு படத்தை இயக்குவதாக 2023ம் ஆண்டே செய்தி வெளியானது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு கடந்த ஆண்டுதான் சந்தீப் கிஷன் இதில் இணைந்துள்ளது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையில் தனியான தயாரிப்பு நிறுவனத்தையும் பதிவு செய்திருந்தார் ஜேசன் சஞ்சய். 'ஜே.எஸ்.ஜே மீடியா எண்டர்டெயின்மெண்ட்ஸ்' என்ற அந்த நிறுவனம் JSJ 01 படத்தில் பங்குபெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது படம் நிறைவடையும் சூழலில் இப்படத்துக்கான எதிர்பார்ப்பு உருவாகியிருக்கிறது.

JSJ 01
அப்டேட் போஸ்டர்

இந்த சூழலில் தற்போது JSJ 01 எனக் குறிப்பிடப்பட்டு வரும் இந்த படத்தின் பெயர் நாளை வெளியாகும் என்ற அப்டேட்டைக் கொடுத்துள்ளது படக்குழு.

9MM குறும்பட திரையிடல்: "ராஜேஷ் குமாரின் நாவலைப் படித்தது போல இருந்தது" - சினிமா பிரபலங்கள் பாராட்டு

'நோ ஃப்ரில்ஸ்' தயாரிப்பு நிறுவனத்தின் கீழ், சந்தோஷ் மன்னராத் தயாரிப்பில் வெளியான '9 எம்எம்' என்னும் குறும்படம் ஹாரிஸ் வாணிதாசனால் இயக்கப்பட்டு பரணி ஸ்டுடியோவில் சிறப்புக் காட்சி திரையிடப்பட்டது. இப்பட... மேலும் பார்க்க

வெள்ளகுதிர: ``கலைஞர் ஆட்சியில் அந்த சட்டம் இருந்துச்சி" - மேடையில் பாக்கியராஜ் வைத்த கோரிக்கை!

கூத்துப்பட்டறை கலைஞரான ஹரிஷ் ஓரி தயாரித்து, நடித்துள்ள திரைப்படம் ‘வெள்ளகுதிர’. காக்கா முட்ட படத்தின் இயக்குநரும் நடிகருமான மணிகண்டனின் உதவி இயக்குநராக இருந்த சரண் ராஜ் செந்தில்குமார் இயக்கியுள்ளார். ... மேலும் பார்க்க

Jananayagan: 'பறக்கட்டும் நம்ம கொடி'- ஜனநாயகன் படத்தின் முதல் சிங்கிள் தளபதி கச்சேரி பாடல் வெளியானது

விஜய் நடிக்கும் ‘ஜனநாயகன்’ திரைப்படம் அடுத்தாண்டு பொங்கல் வெளியீடாக திரைக்கு வருகிறது. இதுதான் விஜய் நடிக்கும் கடைசி திரைப்படம் என அறிவிக்கப்பட்டிருப்பதால் ரிலீஸுக்கு ரசிகர்களும் ஆவலாகக் காத்திருக்கிற... மேலும் பார்க்க

Gouri Kishan: ``தோற்றத்தைக் குறிவைக்கும் கேள்விகள் எந்தச் சூழலிலும் தவறானவை" - கௌரி கிஷன் அறிக்கை

கோலிவுட்டில் நடிகை கெளரி கிஷன் விவகாரம் பெரும் பேசுபொருளாகியிருக்கிறது. அவர் நடித்திருக்கும் ‘அதர்ஸ்’ திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது.அப்படத்தின் செய்தியாளர் சந்திப்பில் நிருபர் ஒருவர் அப்... மேலும் பார்க்க

AMMA: "யார் செய்தாலும் தவறுதான்; வலியைப் புரிந்துகொள்கிறோம் கௌரி" - மலையாள திரைக்கலைஞர்கள் சங்கம்

தென்னிந்திய சினிமாவில் நடிகை கௌரி கிஷன் விவகாரம் பெரும் பேசுபொருளாகியிருக்கிறது.முன்னதாக, கௌரி கிஷன் நடித்திருக்கும் `OTHERS' திரைப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.இதற்கு முன்ப... மேலும் பார்க்க