திருவாரூர்: சிதிலமடைந்த குடிநீர் தொட்டி, அங்கன்வாடி கட்டடம்; அலட்சிய அதிகாரிகள்....
K.L Rahul: "கிடைக்கும் விஷயங்களை மகிழ்ச்சியாக அனுபவமிக்க வேண்டும்"- ஓய்வு குறித்து கே.எல். ராகுல்
இந்திய அணியின் நட்சத்திர வீரரான கே.எல். ராகுல் கெவின் பீட்டர்சன் உடனான நேர்காணலில் ஓய்வு குறித்துப் பேசியிருக்கிறார்.
நேர்காணலில் பேசிய கே.எல்.ராகுல், "ஓய்வு குறித்து நான் யோசித்திருக்கிறேன். என்னைப் பொறுத்தவரை ஓய்வு முடிவு ஒன்றும் அவ்வளவு கடினமான விஷயம் கிடையாது.

ஓய்வுக்கான நேரம் வரும்போது, நிச்சயம் ஓய்வு முடிவை எடுத்துவிட வேண்டும்.
என்னைப் பொறுத்தவரை, ஓய்வு முடிவ எடுக்கும் நேரம் இன்னமும் வரவில்லை.
அது சற்று தொலைவில் இருக்கிறது என நினைக்கிறேன்.
கிடைக்கும் விஷயங்களை, மகிழ்ச்சியாக அனுபவமிக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய நிலைபாடு.
எனக்கு குடும்பம் இருக்கிறது. அதையும் நான் மகிழ்ச்சியாக பார்த்துக்கொள்ள வேண்டும்.

அது கொஞ்சம் கஷ்டமான விஷயம்ததான். கிரிக்கெட் மட்டுமல்ல எந்த விஷயத்திலும் என்னை முக்கியமானவர் என நான் நினைத்து கிடையாது.
அப்படி நினைத்தால், நம்மால் எதையும் மகிழ்ச்சியாக செய்ய முடியாது.
எனக்கு முதல் குழந்தை பிறந்ததிலிருந்து, நான் வாழ்க்கையைப் பார்க்கும் பார்வையே முற்றிலும் மாறிவிட்டது" என்று பேசியிருக்கிறார்.
















