செய்திகள் :

Kamal Haasan: "சினிமா தேஞ்சுகிட்டே இருக்கிறதா ஒரு பயம்" - ஃபிலிம் சிட்டி திறப்பு விழாவில் பேச்சு!

post image

நடிகரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கமல்ஹாசன், வேல்ஸ் ட்ரேட் கன்வென்ஷன் சென்டர், வேல்ஸ் ஃபிலிம் சிட்டி, வேல்ஸ் தியேட்டர் ஆகிய மூன்று புதிய நிறுவனங்களின் திறப்புவிழாவில் கலந்துகொண்டார்.

அங்கே தனது திரைப் பயணம் குறித்தும் திரைத்துறை முன்னேற்றம் அடைவதற்கான வழிகள் குறித்தும் பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார்.

inauguration of the Vels Trade & Convention Centre, Vels Film City, and Vels Theatres
inauguration of the Vels Trade & Convention Centre, Vels Film City, and Vels Theatres

Kamal Haasan பேச்சு

நான் சினிமாவின் குழந்தை

அவர், "கமலஹாசனுக்கும் ஐசரி கணேஷ் அவர்களுக்கும் என்ன சம்பந்தம்? வேல்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் நான் நடிச்சதில்ல, ராஜ்கமலும் அவரும் சேர்ந்து ஒரு படமும் பண்ணதில்ல. ஆனால் என்னையும் அவரையும் சேர்த்து பிணைக்கும் பெயர் எம்ஜிஆர். எம்ஜிஆர்தான் எங்களை நண்பர்களாக சகோதரர்களாக மாற்றினார் என்றால் அது மிகையாகாது.

நான் சினிமாவின் குழந்தை. எனக்கு சினிமாவை தவிர வேறு எதுவும் தெரியாது. அது பண்ணிட்டே இருக்கும்போது கத்துக்கிட்டது தான் எல்லாமும். என் மொழியும், என் கல்வியும் இப்பொழுது நான் பெற்றிருக்கும் பட்டங்களும் எல்லாமே எனக்கு சினிமா கொடுத்ததுதான். அப்படிப்பட்ட சினிமா ஏதோ தேஞ்சுகிட்டே இருக்கிற மாதிரி ஒரு 20-25 வருஷத்துக்கு முன்னாடி எனக்கு ஒரு பயம்.

17 ஃப்ளோர்களுடன் கூடிய ஆசியாவிலேயே மிகப்பெரிய ஸ்டுடியோ என்று இருந்தது. அதைப் பார்த்து நான் எதிர் ஸ்டுடியோல இருந்து பொறாமைப்பட்டுருக்கேன். சின்ன பையனா இருக்கும்போது சரவணன் சார்கிட்ட போய் 'ஏன் சார் நம்ம ஒரு 20 ஃப்ளோர் வச்சோம்னா ஆயாசியாவிலயே பெரிய ஸ்டுடியோ நம்ம ஸ்டுடியோ ஆயிடுமே' அப்படின்னு சொல்லிருக்கேன். 'சரி நீ பார்த்துப்பியா அந்த பத்து ஃப்ளோர'ன்னு கேட்டாரு. நான் பயந்து முடியாதுன்னு சொல்லிட்டேன்...

Isari Ganesh - Kamal Haasan - Sushmitha
Isari Ganesh - Kamal Haasan - Sushmitha

இந்த ஃபிலிம் சிட்டியை பார்த்துக்கொள்ளப்போகும் சுஷ்மிதா அமெரிக்காவில் உள்ள ஸ்டோடியோக்களைப் பார்வையிட்டு அங்குள்ள வசதிகளை இங்கு கொண்டுவர வேண்டும்." எனப் பேசினார்.

மேலும், "இந்த பான் இந்தியா மூவி என்பதை துவங்கியதே சென்னைதான். பான் இந்தியா ஃபிலிம் மேக்கிங் ஹப் என்றால் அது சென்னைதான். உலகத்திலேயே அதிகமான சினிமாக்களை தயாரிக்கும் இந்த நாட்டில், இப்படி ஒரு இடம் (வேல்ஸ் ஃபிலிம் சிட்டி) இருக்க வேண்டியது அவசியம் என்பதை ஒரு அரசு முடிவு செய்யாமல், தனி மனிதர் முடிவு செய்திருப்பது பாராட்டுக்குரியது...

இங்கே சினிமா பயிலும் ஒரு அரங்கத்தையும் ஏற்படுத்த வேண்டும். நாம் அதற்கான ஏற்பாடுகளை செய்ய மறந்துவிட்டதாகவே நினைக்கிறேன். கவர்மெண்ட் இல்ல; இண்டஸ்ட்ரி அதை செய்ய வேண்டும்!" என்றும் கூறினார்.

Suriya: ஸ்டீபன், பேச்சி - இளம் நடிகர்களைப் பாராட்டிய சூர்யா!

நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ள ஸ்டீபன் மற்றும் விஜய் சேதுபதி தயாரிப்பில் வந்த பேச்சி திரைப்படங்களைப் பாராட்டியுள்ளார் நடிகர் சூர்யா. Stephen ஸ்டீபன் திரைப்படத்தில் உளவியல்ரீதியாக பாதிக்... மேலும் பார்க்க

Vikram Prabhu: "ஒரு 'கும்கி' இருந்தால் போதும்!" - 'கும்கி 2' குறித்து விக்ரம் பிரபு!

விக்ரம் பிரபு நடிகராக அறிமுகமான திரைப்படம் 'கும்கி'. பிரபு சாலமன் இயக்கத்தில், டி.இமான் இசையில் கடந்த 2012-ம் ஆண்டு அத்திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. அப்படத்தின் இரண்டாம் பாகம் கடந்த மாத... மேலும் பார்க்க

சூப்பர் ஸ்டாரின் Mass + Motivational பாடல்கள்! | Photo Album

பொதுவாக எம்மனசு தங்கம் - முரட்டு காளை (1980)ராமன் ஆண்டாளும் - முள்ளும் மலரும் (1981)வேலை இல்லாதவன்தான் - வேலைக்காரன் (1987)ஒருவன் ஒருவன் முதலாளி - முத்து (1995)வெற்றி நிச்சயம் - அண்ணாமலை (1992)ரா ரா ர... மேலும் பார்க்க

What To Watch: படையப்பா, காந்தா, ஆரோமலே - இந்த வாரம் தியேட்டர் & ஓடிடி-யில் வந்திருக்கும் படங்கள்!

இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓடிடி-யில் வெளியாகி இருக்கும் படங்கள் மற்றும் சீரிஸ் இவைதான்!மகாசேனா (தமிழ்):இயக்குநர் தினேஷ் கலைச்செல்வன் இயக்கி விமல், ஸ்ருஷ்டி டாங்கே, யோகி பாபு நடித்துள்ள 'மகாசேனா' தி... மேலும் பார்க்க