செய்திகள் :

தமிழ்நாடு வரும் அமித் ஷா; இறுதி முடிவை ஒத்திவைக்கும் ஓ.பன்னீர்செல்வம் - என்ன நடக்கிறது?

post image

அமித் ஷா வருகிற 15-ம் தேதி தமிழ்நாடு வருகிறார். ஆனால், அவர்‌ வருவதற்கான சிக்னல்கள் இப்போதே தமிழ்நாட்டில் தெரிகிறது.

தற்போது தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

டிசம்பர் 15-ம் தேதியில் தான், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக்குழுவின் கூட்டம் நடக்கும் எனவும் அதில் இறுதி முடிவை அறிவிப்பதாக முன்னர் ஓ.பன்னீர்செல்வம் கூறியிருந்தார்.

இந்த நிலையில், அமித் ஷா தமிழ்நாடு வருகை அறிவிப்பு வெளியானது.

தற்போது ஓ.பன்னீர்செல்வம் கூட்டத்துக்கான தேதியைத் தள்ளி வைத்து உள்ளதாக அறிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி - அமித்ஷா
எடப்பாடி பழனிசாமி - அமித்ஷா

அடம்பிடிக்கும் கே.பழனிசாமி

அதிமுகவில் மீண்டும் இணைய ஓ.பன்னீர்செல்வம் எடுக்காத முயற்சிகளே இல்லை. பாஜக மேலிடமும் கே.பழனிசாமியிடம் பேசி பார்த்தது. ஆனால், அவர் கொஞ்சம்கூட அசைந்து கொடுப்பதாக இல்லை.

ஒருகட்டத்தில் (கடந்த ஜூலை மாதம்) பன்னீர்செல்வம் பாஜகவின் கூட்டணியில் இருந்து விலகிவிட்டார்.

இருந்தாலும், இந்த மாதத் தொடக்கத்தில் டெல்லி சென்று உள்துறை அமைச்சர் அமித் ஷா-வை சந்தித்து வந்தார் அவர்.

கடந்த 7-ம் தேதி, கோவையில் தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையை சந்தித்தும் பேசினார்.

இந்தநிலையில் தான் கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

பாசிட்டிவ் சிக்னல்?

தமிழ்நாடு வரும் அமித் ஷா தனக்கு எதாவது பாசிட்டிவ் சிக்னல் காட்டினாலும் காட்டலாம் என்கிற பன்னீர்செல்வம் எண்ணத்தின் விளைவே இறுதி முடிவு தேதியின் ஒத்திவைப்பு என்கிறார்கள் சில அரசியல் பார்வையாளர்கள்.

சில மாதங்களாக, ஓ.பன்னீர்செல்வமும், அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனும் நெருக்கம் காட்டி வருகின்றனர். இடையில் செங்கோட்டையனும் இவர்களுடன் இணைந்திருந்தார். ஆனால், அவர் இப்போது தவெகவில் இணைந்துவிட்டார். டி.டி.வி.தினகரனும் தவெக தலைவர் விஜய்க்கு ஆதரவாக பேசிவருகிறார்.

அண்ணாமலை - ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு
அண்ணாமலை - ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு

பாஜக நகர்வுகள்

இன்னொரு பக்கம், பாஜக ஓ.பன்னீர்செல்வத்தை விட்டுதர தயாராக இல்லை என்றே சொல்லலாம். இதற்கு டெல்லியில் ஃபிக்ஸான அமித் ஷா சந்திப்பும், கடந்த வாரம் நடந்த அண்ணாமலை சந்திப்பும்‌ முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

இன்று தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் டெல்லி சென்றிருக்கிறார். அமித் ஷாவை சந்திக்க உள்ளார். அவர்கள் இருவரும் கூட்டணி குறித்து பேச உள்ளதாக பாஜக தரப்பு கூறுகிறது.

'மெகா கூட்டணி' என்கிற பெயரில் தான் அதிமுக - பாஜக கூட்டணி உருவாகியது. ஆனால், அந்தக் கூட்டணியில் அந்த இரு கட்சிகளைத் தவிர வேற எந்தக் கட்சியும் இதுவரை இடம்பெறவில்லை.

தென் மாவட்டங்களில் இந்தக் கூட்டணியைக் கொண்டு சேர்க்க ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் ஆதரவு தேவை என்று பாஜக நினைக்கிறது. ஆனால், எடப்பாடி பழனிசாமி ஒப்புக் கொள்வதாக இல்லை.

அதனால், ஓ.பன்னீர்செல்வம் விஷயத்தில் பீகார் ஃபார்முலாவைக் கையிலெடுக்கலாம் பாஜக.

அதாவது, அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வத்தை சேர்க்க சொல்லாமல், தேசிய ஜனநாயக கூட்டணியில் அவரை சேர்த்துகொள்ள நினைக்கிறது.

ஓ.பன்னீர்செல்வம்‌ முடிவு?

இதை பாஜக செய்யும் என்று நினைத்து தான் பன்னீர்செல்வமும் தனது முடிவை ஒத்தி வைத்திருக்கிறார்.

ஒருவேளை அப்படி எதுவும் நடக்காமல் போனால், அவர் தனிக்கட்சி தொடங்குவதற்கான வாய்ப்புகள் உண்டு. இந்தப் பேச்சு அவர் டெல்லி சென்ற போதே எழுந்தது.

தனிக்கட்சி ஆரம்பித்து, விஜய்யுடன் கூட்டணி அமைப்பது உள்ளிட்ட திட்டமும் அவர் வசம் இருந்ததாக சொல்லப்பட்டது.

ஆனால், இவை அனைத்தும் அமித் ஷா தமிழ்நாடு வருகைக்கு பிறகே தெரியும்.!

"நன்றி திருவனந்தபுரம்"- சிபிஎம் கோட்டையைக் கைப்பற்றிய பாஜக; வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி!

கேரள மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 9-ம் தேதி மற்றும் 11-ம் தேதிகளில் நடைபெற்றன. 14 வருவாய் மாவட்டங்களில் 14 மாவட்ட ஊராட்சி தலைவர்கள், 6 மாநகராட்சி மேயர்கள், 86 நகராட்சி தலைவர்கள்... மேலும் பார்க்க

`சவுக்கு சங்கர் கைது அப்பட்டமான துன்புறுத்தல்' - கார்திக் சிதம்பரம் கருத்து!

யூடியூபர் சவுக்கு சங்கர் இன்று (டிசம்பர் 13) அவரது வீட்டிலிருந்து கைது செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு அரசின் இந்த நடவடிக்கையை விமர்சித்துள்ளார் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கார்திக் சிதம்பரம். கார்த... மேலும் பார்க்க

'மகாராஷ்டிரா, கர்நாடகா, குஜராத்தை விஞ்சிய தமிழ்நாடு ' - ஸ்டாலின் பெருமிதம்

தமிழ்நாடு 'மொத்த உள்மாநில உற்பத்தியில்' முதல் இடத்தைப் பிடித்துள்ளது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின்."வானுயர் GSDP வளர்ச்சி விகிதம்; பெருமாநிலங்களை எல்லாம... மேலும் பார்க்க

”கட்சி தொடங்கிய உடனே நான்தான் முதல்வர் எனச் சொல்லி பலர் வந்துள்ளனர்” - திருமாவளவன்

மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 12வது மாநில மாநாடு தூத்துக்குடியில் நடந்து வருகிறது. இந்த மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்... மேலும் பார்க்க

`தாங்க முடியாத துர்நாற்றம்; இதுதான் சர்வதேச விமான நிலையமா?' - ப.சிதம்பரம் ஆவேசம்

சென்னை விமான நிலையம் குறித்து காங்கிரஸ் மூத்தத் தலைவர் ப.சிதம்பரம் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், " சென்னை விமான நிலையத்தின் 4-வது முனைய... மேலும் பார்க்க

எடப்பாடியுடன் சந்திப்பு; வரவிருக்கும் அமித் ஷா - டெல்லி பயணமான நயினார் நாகேந்திரன்

இந்த ஆண்டின்‌ தொடக்கத்தில் இருந்தே, தமிழ்நாட்டில் தேர்தல் பரபரப்புகள் தொற்றி கொண்டன.இப்போது தேர்தலுக்குச் சில மாதங்கள்‌தான் உள்ளன. அதனால், பரபரப்புகள் பற்றி சொல்லவே தேவையில்லை.தமிழ்நாட்டில் இப்போது வர... மேலும் பார்க்க