'மன்னிச்சிடுங்க.!' - கலவரமான கொல்கத்தா மைதானம்; மெஸ்ஸி, ரசிகர்களிடம் மன்னிப்பு ...
எடப்பாடியுடன் சந்திப்பு; வரவிருக்கும் அமித் ஷா - டெல்லி பயணமான நயினார் நாகேந்திரன்
இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே, தமிழ்நாட்டில் தேர்தல் பரபரப்புகள் தொற்றி கொண்டன.
இப்போது தேர்தலுக்குச் சில மாதங்கள்தான் உள்ளன. அதனால், பரபரப்புகள் பற்றி சொல்லவே தேவையில்லை.
தமிழ்நாட்டில் இப்போது வரை திமுக கூட்டணி வலுவாக உள்ளது. இடையில், காங்கிரஸ் வேறு கூட்டணிக்கு மாறலாம் என்கிற கணிப்புகள் இருந்தன. ஆனால், அந்தக் கணிப்புகள் மாறி இப்போது திமுகவும், காங்கிரஸும் மாறி மாறி நெருக்கம் காட்டி வருகின்றன.

சந்திப்பு
இந்த நிலையில், நேற்று முன்தினம் (டிசம்பர் 11) அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியைச் சந்தித்தார் தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்.
அடுத்ததாக, இன்று டெல்லிக்குப் பயணித்திருக்கிறார் நயினார் நாகேந்திரன். அங்கு உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்திக்க உள்ளார்.
இந்தச் சந்திப்பில் தேர்தல் வியூகம், கூட்டணி குறித்து பேசப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.
அமித் ஷா தமிழ்நாடு வருகை
வரும் 15-ம் தேதி, தமிழ்நாடு வருகிறார் அமித் ஷா. டெல்லி சந்திப்பில் நடக்கும் ஆலோசனைகளின் படி, அமித்ஷாவின் தமிழ்நாடு வருகையின் நிகழ்வுகள் கட்டமைக்கப்படலாம் என்கிறது பாஜக தரப்பு.
தேர்தல் நெருங்கும் நிலையில், பாஜக மூத்த தலைவர்கள் வருகை, அடுத்தடுத்த சந்திப்புகள், தேர்தல் வியூகங்கள், கட்சிகளைக் கூட்டணிக்குள் இழுப்பது என பணிகள் தீவிரம் அடைகிறது.

















