செய்திகள் :

சாத்தூர்: SI-யின் மனைவி தற்கொலையில் சந்தேகம்; உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மறியல்; பின்னணி என்ன?

post image

விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்தவர் அருண் (28). இவர் சாத்தூர் நகர் காவல் நிலைய சார்பு ஆய்வாளராகப் பணிபுரிந்து வருகிறார். இவர் சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலைச் சேர்ந்த இளவரசியை மூன்று ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இத்தம்பதிக்கு 2 வயது பெண் குழந்தை உள்ளது. சாத்தூர் பாரதி நகரில் வாடகை வீட்டில் எஸ்.ஐ. அருண், மனைவி இளவரசி மற்றும் குழந்தையுடன் வசித்து வருகின்றனர். நேற்று ஆளுநர் நிகழ்ச்சிக்குப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது அவரது செல்போனில் மனைவி இளவரசியின் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில், "குழந்தையை நல்ல முறையில் பார்த்துக்கொள்ளவும், நன்றாகப் படிக்க வைக்கவும். நான் செல்கிறேன்" என்று பதிவிட்டிருந்ததைப் பார்த்து பதற்றமடைந்தார்.

சாலை மறியல்
சாலை மறியல்

உடனடியாக அருண் வீட்டுக்கு விரைந்து சென்று பார்த்தபோது, வீடு உள்பக்கமாகப் பூட்டப்பட்டிருந்தது. கதவை உடைத்துத் திறந்து பார்த்தபோது, அருணின் மனைவி இளவரசி சேலையால் தூக்கிட்டுத் தொங்கியபடி இருந்தார்.

உடனடியாக காவல்துறையினர் உதவியுடன் இளவரசியின் உடலைக் கைப்பற்றி விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குப் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

இது குறித்து சாத்தூர் நகர் காவல்நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி 3 வருடங்களே ஆனதால் இளவரசியின் தற்கொலை குறித்து ஆர்டிஓ விசாரணை நடைபெறுகிறது.

சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கைது
சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கைது

இந்நிலையில், இளவரசியின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாகவும், எஸ்.ஐ. அருணைக் கைது செய்ய வேண்டும் என்றும் கோரி, உயிரிழந்த இளவரசியின் உறவினர்கள் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே விருதுநகர் - காரியாபட்டி சாலையில் திடீரென அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் அப்பகுதியில் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் பேச்சுவார்த்தை பலனளிக்காததால், உறவினர்கள் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர். பின்னர் சாலை போக்குவரத்து இயல்பு நிலைக்குத் திரும்பியது.

ஊட்டி: மூடப்பட்ட Hindustan Photo Films தொழிற்சாலையில் மண் திருட்டு; தொடரும் அத்துமீறல்; காரணம் என்ன?

தென்னாசியாவின் முதல் போட்டோ ஃபிலிம் தொழிற்சாலை நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 1960-ம் ஆண்டுகளில் தொடங்கப்பட்டது. அரசுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் போட்டோ ஃபிலிம் தொழிற்சாலை சுமார் 350 ஏக்கர் பரப்பளவுள்ள வன... மேலும் பார்க்க

`93 பேர் மட்டுமே வசிக்கும் மாஞ்சோலையில் 1,100 வாக்காளர்கள் பதிவேற்றம்?' - அலுவலர்களுக்கு நோட்டீஸ்

நெல்லை மாவட்டம், பாம்பே பர்மா டிரேடிங் கம்பெனி சார்பில் மாஞ்சோலை, ஊத்து, காக்காச்சி, நாலுமுக்கு ஆகிய பகுதிகளில் தேயிலை, காபி பயிர் செய்யப்பட்டுள்ளன. இந்தப்பகுதி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாகும். இந்த வ... மேலும் பார்க்க

``மதுக்கடை அடைக்கும் நேரம், அவசரத்தில்'' - ரயிலின் குறுக்கே டூவீலரில் பாய்ந்த இளைஞர்

ராமேஸ்வரத்தில் இருந்து கடந்த 8-ம் தேதி இரவு கன்னியாகுமரி விரைவு ரயில் புறப்பட்டது. இந்த ரயில் உச்சிப்புளி ரயில் நிலையத்தை கடக்க இருந்த நிலையில், அப்பகுதியில் ரயில்வே கேட் அடைக்கப்பட்டிருந்தது. இந்நிலை... மேலும் பார்க்க

``திருமண ஆசைகாட்டி ரூ.2 கோடி பணம், தங்க நகை மோசடி'' - பெண் டி.எஸ்.பி மீது ஹோட்டல் அதிபர் புகார்

சத்தீஷ்கர் மாநிலத்தில் உள்ள தண்டேவாடா என்ற இடத்தில் டி.எஸ்.பி.யாக உள்ளவர் கல்பனா சர்மா. இந்த பெண் போலீஸ் அதிகாரி ஹோட்டல் உரிமையாளரை திருமண ஆசைகாட்டி பணமோசடி செய்துவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.ர... மேலும் பார்க்க

மின்சாரம் தாக்கி மகன் உயிரிழப்பு; துக்கம் தாங்காமல் உயிரை மாய்த்த தந்தை - ராமநாதபுரத்தில் சோகம்!

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் மீனவர் காலனியைச் சேர்ந்தவர் களஞ்சியம். இவர் நேற்று காலை கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுவிட்டு வீடு திரும்பிய நிலையில், வீட்டில் உள்ள மோட்டார் மின் சுவிட்சினை பழுது பார்த்து... மேலும் பார்க்க

ஈரோடு: காதல் திருமணம்; தங்கையைக் கடத்திச் சென்ற அக்கா உள்ளிட்ட 5 பேர் கைது - விவரம் என்ன?

ஈரோடு மாவட்டம், எண்ணமங்கலத்தைச் சேர்ந்தவர் சேதுராஜ் (25). பெருந்துறை சிப்காட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரும், அந்தியூர் மேல்தெருவைச் சேர்ந்த மகாலட்சுமி என்பவரும் கடந... மேலும் பார்க்க