``அன்று அயோத்தி ராமர் கோவில், இன்று திருப்பரங்குன்றம்; ஸ்டாலின் அரசே'' - பாஜக அன...
``மதுக்கடை அடைக்கும் நேரம், அவசரத்தில்'' - ரயிலின் குறுக்கே டூவீலரில் பாய்ந்த இளைஞர்
ராமேஸ்வரத்தில் இருந்து கடந்த 8-ம் தேதி இரவு கன்னியாகுமரி விரைவு ரயில் புறப்பட்டது. இந்த ரயில் உச்சிப்புளி ரயில் நிலையத்தை கடக்க இருந்த நிலையில், அப்பகுதியில் ரயில்வே கேட் அடைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், உச்சிப்புளி ரயில் நிலையத்தின் 2-வது நடைமேடைக்கு பயணிகள் செல்லும் வகையில் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த படிக்கட்டின் அருகிலேயே, படி ஏறிச் செல்ல முடியாத முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வசதிக்காக தரைத்தள பாதை உள்ளது.
அந்தப் பாதையின் வழியாக டூவீலரில் வந்த ஒரு வாலிபர் தண்டவாளத்தை கடக்க முயன்றார்.
அப்போது கன்னியாகுமரி விரைவு ரயில் வேகமாக வந்தது. இதனை எதிர்பார்க்காத அந்த வாலிபர், ரயிலில் அடிபடாமல் இருக்க டூவீலரில் இருந்து குதித்து தப்பி ஓடிவிட்டார்.
இதனால் தண்டவாளத்தில் கிடந்த டூவீலர் மீது மோதிய ரயில் எஞ்சின், அதை சுமார் 100 மீட்டர் தூரம் இழுத்துச் சென்றது. இதனால் அதிர்ச்சி அடைந்த ரயில் ஓட்டுநர் உடனடியாக ரயிலை நிறுத்தினார். இதனால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. பின்னர், ரயிலின் குறுக்கே டூவீலரை போட்டுவிட்டு தப்பிய நபர் குறித்து ராமேஸ்வரம் ரயில்வே போலீஸார் விசாரணை நடத்தினர்.
ரயில் மோதியதில் டூவீலரின் நம்பர் பிளேட் நொறுங்கியதால், அதன் மூலம் டூவீலரின் உரிமையாளரை கண்டறிய முடியவில்லை.

இதையடுத்து, போலீஸார் டூவீலரின் எஞ்சின் எண்ணை கொண்டு விசாரணை நடத்தியதில், டூவீலரை ஓட்டி வந்தவர் உச்சிப்புளி அருகே உள்ள நாகாச்சி பகுதியைச் சேர்ந்த கலைச்செல்வன் என்பதும் தெரியவந்தது.
அவரை கைது செய்த போலீஸார் நடத்திய விசாரணையில், மதுக்கடை அடைக்கும் நேரம் நெருங்கிவிட்டதால் மது வாங்க தண்டவாளம் வழியாக வேகமாக செல்ல முயன்றதாக கலைச்செல்வன் கூறியுள்ளார்.
பின்னர், கலைச்செல்வன் ராமநாதபுரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார்.








.jpg)









