ரஜினிகாந்த் 75-வது பிறந்தநாள் விழா: போயஸ் கார்டனில் கொண்டாடிய ரசிகர்கள் | Photo ...
Rajinikanth: ``படையப்பா 2 - நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம்'' - லதா ரஜினிகாந்த் அப்டேட்
நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளான இன்று, அவரது சூப்பர் ஹிட் படமான படையப்பா வெளியாகியிருக்கிறது. ரசிகர்கள் கொண்டாடிவரும் சூழலில் திரைத்துறையினரும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
Latha Rajinikanth பேச்சு
இன்று படையப்பா படம் பார்க்க வந்தபோது பத்திரிகையாளர்களிடம் பேசிய லதா ரஜினிகாந்த், "இந்த 40, 50 வருஷமும் எங்களோட டிராவல் பண்ண ஃபிலிம் இண்டஸ்ட்ரி, பப்ளிக், ஃபேன்ஸ் எல்லாருக்கும் என் மனமார்ந்த நன்றி.

இது எனக்கு மிகவும் உணர்ச்சிப்பூர்வமான தருணம். ரஜினிகாந்த்தின் 25-வது ஆண்டில் நாங்கள் படையப்பா பண்ணினோம். இப்போது 50-வது ஆண்டு. மீண்டும் படையப்பா படம் பார்க்க வந்திருக்கிறேன்.
இதற்கு இவ்வளவு பெரிய ரெஸ்பான்ஸ் கொடுத்ததற்கு நன்றி. அவரோட ஃபேன்ஸ், அவரோட மக்களுக்கு, உலகம் ஃபுல்லா இருக்க தமிழ் மக்களுக்கும், மத்த மக்களுக்கும் ரொம்ப நன்றி.
அவர் ரொம்ப சந்தோஷமா இருக்காரு. இது அவர் எழுதின கதை, ஸ்கிரிப்ட், சிவாஜி சாருடன் நடித்திருந்தார். இதெல்லாம் நினைக்கும்போது ரொம்ப எமோஷனாலா இருக்கு.

எங்களுக்கு நீங்க எல்லாம் ஒரு பெரிய குடும்பமா இருக்கீங்க. மக்களோட அன்புக்கு என்ன வார்த்தை சொல்றதுன்னு தெரியலை. நான் எப்பவும் சொல்ற மாதிரி அந்த அன்புக்கு நான் தலை வணங்குறேன்." எனப் பேசினார்.
அவரிடம் படையப்பா 2 குறித்து கேட்கப்பட்டபோது, "நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம்" எனப் பதிலளித்தார்.


















